வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: AMMK News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label AMMK News. Show all posts
Showing posts with label AMMK News. Show all posts

Monday, January 10, 2022

இடைக்கழிநாட்டில் அ.ம.மு.க. நிர்வாகிக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நினைவேந்தல்..!

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி முதலியார்குப்பம் 3வது வார்டுக்குட்பட்ட மறைந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை செயலாளர் ஆர்.சுப்பிரமணி அவர்களின் நினைவேந்தல் மற்றும் படம்திறப்பு விழாவிற்கு நேரில் சென்று அன்னாரது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆறுதல் தெரிவித்தனர்.


இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.கோதண்டபாணி தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இடைக்கழிநாடு த.ஐய்யனாரப்பன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பேரூர் செயலாளர் சரண்ராஜ், பேரூர் அம்மா பேரவை செயலாளர் எஸ்.கே.சங்கர், மற்றும் மாரிமுத்து, கர்ணா, நாகராஜ், ராஜாராம், தங்கதுரை, ராஜேஷ், ரவிச்சந்திரன், வேல்முருகன், மற்றும் பேரூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் அஞ்சலி செலுத்தினர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செய்யூர் வட்டார செய்திகள் 


முந்தைய செய்யூர் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, January 03, 2022

மதுராந்தகத்தில் அ.ம.மு.க. நகர செயலாளர் முன் அறிவிப்பின்றி நீக்கம்..! பொறுப்பாளர்கள் அதிருப்தி.!!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் முன்அறிவிப்பின்றி அக்கட்சியில் இருந்து நீக்கியதால் நகர கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.


மதுராந்தகம் நகரம்  24 வார்டுகளை கொண்டது. இந்த வார்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட நகரஅணி, மாணவரணி, மகளிரணி, அம்மா பேரவை, விவசாய அணி, வர்த்தக சங்க அணி, வழக்கறிஞர் அணி, மற்றும் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கட்சியில் வகித்து வருகின்றனர், இந்நிலையில் கடந்தமாதம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோதண்டபாணி முன்னிலையில் திருப்போரூரில் நடைபெற்ற நகர ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களை அக்கட்சியிலிருந்து அனைவரும் விலகி மாற்றுக் கட்சியில் இணைவோம் என கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

ஆனால் இதை மறுத்த மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை
கே.சி.சரவணன் தனது ஆதரவாளர்களும் என்னை சார்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தொண்டர்களும் எப்பொழுதும் கழகத்தை விட்டு நீங்க மாட்டோம் என மாவட்ட செயலாளர் கோதண்டபாணியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்ட மாவட்ட செயலாளர் கோதண்டபாணி தொடர்ந்து சரவணன் மீது தலைமைக் கழகத்துக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கழகத்திற்காக பாடுபடுவேன் என தெரிவித்த  நகர செயலாளர்  தொடர்ந்து  தொடர் மழையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து மூன்று கட்டங்களாக வெள்ள நிவாரண நல உதவிகளை வழங்கியுள்ளார். 

இந்த நல உதவிகளை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் கண்ட
மாவட்ட செயலாளர் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி மதுராந்தகம் நகர செயலாளர் சரவணன் அக்கட்சியிலிருந்து நீக்கியதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்த கடிதம் மூலம் அறிவிப்பு தெரிந்த கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அதிருப்திக்கு உள்ளாகினர், ஆகவே நகர செயலாளர் நீக்கம் குறித்து தலைமை கழகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுராந்தகம் கழகப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tag: AMMK Candedate Dismissed Without Priror Information in Chengalpattu District Madurantakam Town

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, April 13, 2021

சீமான், தினகரன், கமல் போடும் கணக்கு இதுதான்! | தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் | Seeman, Kamalhasan, TTV Dinakaran Calculation after Election | Vil Ambu News | Tamil Latest News

தேர்தலுக்கு பின் நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் என்ன மனநிலையில் உள்ளன என்பது இதோ...!

2021 சட்டமன்றத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவியது. திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இடையேதான் போட்டி என்றாலும் சீமான், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பதை தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் கூறுகிறது.

சீமான் தொடர்ந்து தனியாகவே களம் கண்டு வருகிறார். முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மய்யமும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.

தமிழகம் முழுக்கவே இளம் வாக்காளர்கள் கணிசமாக சீமான் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை நாம் தமிழர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களைப் பெறாவிட்டாலும் 40 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தினகரன் எஸ்டிபிஐ, தேமுதிக, ஓவைசி கட்சி ஆகியோருடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும் தினகரன் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, கணிசமான வாக்குகள் பெறக் கூடிய தொகுதிகள் எவை என தரம் பிரித்துள்ளார்

அந்த வகையில் கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிபட்டி, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், குன்னூர், பொள்ளாச்சி, காரைக்குடி, உசிலம்பட்டி, திருவாடானை ஆகிய 10 தொகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை தினகரன் தரப்பு அதிகம் எதிர்பார்க்கிறது என்கிறார்கள்.

அதேபோல் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து அக்கட்சியும் தகவல்களைப் பெற்று வருகிறது. கமல்ஹாசன் நகர்ப்புறங்களில் உள்ள இளம் வாக்காளர்கள், மாற்று அணியை எதிர்பார்க்கும் நகர்ப்புறங்களைச் சார்ந்தோரிடம் வாக்குகளைப் பெறுவார் என கூறுகிறார்கள்.

ஆனால் கிராமப்புறத்தில் கமல்ஹாசனுக்கு வாக்குகள் இல்லை என்கின்றனர். அதனாலே அவர் பல இடங்களில் பிரச்சாரத்தையும் தவிர்த்துவிட்டு கோவையில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார். இதனால் கோவை தெற்கு உறுதியாக தங்களுக்கு கிடைக்கும் என்றும், மேலும் கோவையைச் சுற்றியுள்ள சில தொகுதிகள் சென்னையில் மயிலாப்பூர், மதுரவாயல் ஆகிய தொகுதிகளில் இரண்டாம் இடத்துக்கு வருவோம் என கூறுகின்றனர்.