வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: coimbatore District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label coimbatore District News. Show all posts
Showing posts with label coimbatore District News. Show all posts

Tuesday, May 03, 2022

நகை பறிப்பில் ஈடுபட்டு சிக்கிய காதலர்கள்..! என்ஜினீயரிங் மாணவர்கள் கைது!!

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே வழக்கம்போல ஆடு மேய்த்து கொண்டிருந்தார். 


அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்தார். தொடர்ந்து அந்த வாலிபர் காளியம்மாளிடம் பேச்சு கொடுத்து, ஒரு முகவரியை கேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் தப்பி சென்றார். இந்த சம்பவம் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

தனிப்படைகள்  

இதில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காஸ்மா கார்டனை சேர்ந்த பிரசாத் (20) என்பதும், கோவை சுங்கம் ரோடு ஸ்ரீ நகர் முதல் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஸ்வினி (20) என்பதும், இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் 


கோயம்புத்தூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 28, 2021

மீண்டும் ஒரு கோவை அரசுப்பேருந்து விபத்து...! தப்பிய பயணிகள்.! அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்.!

கோவை அரசுப்பேருந்து ஒன்று நாமக்கல்லில் விபத்து உள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிலர் மட்டும் காயங்கள் அடையந்துள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.


கோவை அரசுப்பேருந்து ஒன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காகக் கிளம்பியது. இந்தப் பேருந்து நாமக்கல் பள்ளிப்பாளையம் வழியாக ஈரோடு சென்று கொண்டிருந்தது. இரவு நேரப் பேருந்தை ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

பள்ளிப்பாளையம் அருகே பேருந்தை ஓட்டிக் கொண்டு வந்த ஓட்டுநர் சக்திவேல் அசதியில் தூங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சாலையில் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்புச் சுவர் மீது பலமாக மோதியது.

முன் பக்க சக்கரம் 2 அல்லது 3 அடி மேலே தூக்கிக்கொண்டு சுவரில் மோதி பேருந்து நின்றது.

பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. சக பயணிகளின் உதவியால் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற பயணிகளுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

தடுப்புச்சுவரில் மோதி நின்று இருந்த அரசுப் பேருந்தை போலீஸார் க்ரேன் உதவியால் மீட்டு அப்புறப்படுத்தினர். ஓட்டுநர் சக்திவேலை பள்ளிப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதேபோல் தான் நேற்று காலை கோவையில் சிறுமுகை அருகே சரக்கு லாரி ஒன்று மோது அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் காயம் அடைந்த பயணிகள் 30 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கோயமுத்தூர் மாவட்ட செய்திகள் 


முந்தைய கோயமுத்தூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 26, 2021

கள்ளகாதலுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி.. நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..!

ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா. 
இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ரீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழுந்தை இல்லை.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி ராஜா தற்கொலை செய்துகொண்டார் என ரீனா ராஜவின் சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதபரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவரவே அவர்கள் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரீனாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ரீனாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உறவினரான சதீஷ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது.

இது கணவர் ராஜாவிற்கு தெரிய வரவே அவர்களை ராஜா கண்டித்துள்ளார். இதனால், இருவரும் ராஜாவை கொலை செய்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

முன்னாள் துணை சபாநாயகர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு..!

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேருதல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கோயம்புத்தூர் செய்திகள் 


முந்தைய கோயம்புத்தூர் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்