வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Murder News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Murder News. Show all posts
Showing posts with label Murder News. Show all posts

Tuesday, June 28, 2022

செங்கல்பட்டு அருகே சவாரிக்காக அழைத்து வந்து கால்டாக்சி டிரைவர் படுகொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இறந்து போன நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்து போனவர் சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பவரது மகன் அர்ஜூன் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.

இவர் தனியார் கால் டாக்ஸி (ஓலா) நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், சவாரிக்காக அழைத்து வந்து அர்ஜீனனை கொலை செய்து விட்டு காரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, January 26, 2022

காதல் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்.!

திருவாரூர் மாவட்டம், ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கேசவமூர்த்தி, பிரியதர்ஷினி தம்பதி. இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனை முடிவில், பிரியதர்ஷினி உடலில் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரியதர்ஷினி உறவினர்கள் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியைக் கணவனே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவாரூர் மாவட்ட செய்திகள் 


திருவாரூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

சொ

Sunday, January 16, 2022

குன்றத்தூர் அருகே மத்திய அரசு ஊழியர் குத்திக் கொலை..!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பத்ம குரு என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி சிந்து என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பத்ம குருவிற்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணிற்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே சிந்து மீனாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த மீனா, அவருடைய கணவர் ரஜினி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் பத்ம குருவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோபமடைந்த பத்ம குரு வீட்டிலிருந்த கத்தியால் மீனாவின் உறவினர்களான குமரன், விஷ்வா ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஷ்வாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த குன்றத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பத்ம குருவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிரிழந்த குமரன் மத்திய அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

குன்றத்தூர் ஒன்றிய செய்திகள் 


முந்தைய குன்றத்தூர் ஒன்றிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 15, 2022

நடத்தையில் சந்தேகம் ; கணவரை கத்தியால் குத்தி கொன்ற கர்ப்பிணி.!

திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை கர்ப்பிணி பெண் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். கட்டட தொழியான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுரேகா என்ற என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தினமும் சண்டை போட்டுவந்தாகவும் இதனால் சுரேகா சென்னையில் உள்ள தனது தாய் வீட்டில் பிள்ளைகளை சுரேகா தங்க வைத்துவிட்டு மீண்டும் கணவர் வீட்டிக்கு வந்துள்ளார். இதனிடையே, சுரேகா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். ஏற்கனவே மனைவி சுரேகாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்த சந்தோஷ் கருவை கலைக்க கூறி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, சண்டையாகியுள்ளது. அப்போது திடீரென காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து சுரேகாவைக் கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது சுரேகா சந்தோஷிடம் பறித்துக் கொண்டு கணவர் சந்தோஷின் உடலில் கழுத்து, மார்பு உள்ளிட்ட பல இடங்களில் குத்தி உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் மனைவி சுரேகா சரணடைந்தார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள் 


முந்தைய கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்