வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Vallam News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Vallam News. Show all posts
Showing posts with label Vallam News. Show all posts

Tuesday, June 28, 2022

செங்கல்பட்டு அருகே சவாரிக்காக அழைத்து வந்து கால்டாக்சி டிரைவர் படுகொலை..!

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.


தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இறந்து போன நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்து போனவர் சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பவரது மகன் அர்ஜூன் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.

இவர் தனியார் கால் டாக்ஸி (ஓலா) நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், சவாரிக்காக அழைத்து வந்து அர்ஜீனனை கொலை செய்து விட்டு காரை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்