வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: kancheepuram election flying squad news
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label kancheepuram election flying squad news. Show all posts
Showing posts with label kancheepuram election flying squad news. Show all posts

Monday, April 01, 2019

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி



காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8.56 கோடி ரூபாய், 9.40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபைதொகுதியிலும், 33 பறக்கும் படையினர், 33 நிலையான கண்காணிப்பு குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பணப்பட்டுவாடா தொடர்பான புகார் வந்தால், நிலையான கண்காணிப்பு குழுவினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர்.அந்த வகையில், 14ம் தேதி முதல், பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும், நேற்றைய நிலவரப்படி, 53 இடங்களில், 8.56 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தவிர, 9.40 கோடி ரூபாய் மதிப்பில், தங்கம், வெடி பொருள், குட்கா உள்ளிட்ட பொருட்களை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.