எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
ராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் அருகே உள்ள புழுதி கண்மாய் பகுதியில் அரசு
உரிமம் பெற்ற மணல் குவாரி உள்ளது.
ஆனால் இங்கு அரசின் விதிமுறைகளுக்கு
புறம்பாக அதிக ஆழத்தில் மணல் தோண்டி எடுக்கப்படுவதாகவும், கண்மாய்
கரைகளையும் வெட்டி மணல் எடுப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் (வயது 42)
மற்றும் சிலர் நேற்று மாலை புழுதி கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு லாரி
மற்றும் டிராக்டர்களில் மணல் திருடிக் கொண்டிருந்தவர்களை கண்டித்து தட்டிக்
கேட்டனர்.
மேலும் அங்கு மணல் எடுக்கக் கூடாது என்று கூறினர். இதனால்
அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் செல்போனில் கொடுத்த தகவலின் பேரில்
அப்பகுதிக்கு ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்தது.
அந்த கும்பல் அரிவாள் மற்றும் இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களால் மோகன்
மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மோகனை
கண்மாயின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் சேற்றில் அமுக்கி
கொடூரமாக கொலை செய்தனர். மற்றவர்கள் காயத்துடன் தப்பியோடி உயிர்
பிழைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்களே மோகனின் உடலை ஒரு காரில்
ஏற்றி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு
தப்பியோடி விட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இளமனூர்
கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா(37), முருகேசன்(37), லட்சுமணன்(32),
செல்வம்(44) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி தகவலறிந்த இளமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த
200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ராமநாதபுரம் அரசு
ஆஸ்பத்திரியில் திரண்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது
செய்ய வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து
மறியிலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன்,
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி
மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை
கைவிட்டனர்.
கொலை செய்யப்பட்ட மோகனுக்கு சாந்தி(34) என்ற மனைவியும், 2
மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி இளமனூர் கிராம நிர்வாக
அலுவலர் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார்
வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அகமதாபாத் நகர நரோடா தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பால்ராம் தவாணி
ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம்
பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே நடந்து உள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் கூற வந்து
உள்ளார். அப்போது அந்த பெண்ணை எம்.எல்.ஏ. தாக்கி உதைத்தார்.
வீடியோவில்
கீழே தள்ளிவிடப்படும் பெண்னை ஒரு கும்பல் தாக்குகிறது. அந்த பெண்ணை
உதைக்கிறார்கள்.
எனினும் பின்னர், பால்ராம் தவாணி எம்.எல்.ஏ. அந்த
பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ள பலராம் தவாணியின் சகோதரர் கிஷோர் தவாணி தாக்கியவர்கள் குறித்து குற்றம்சாட்டினார்.
புடவை ஓகே.. சுடிதாரும் ஓகே.. ஆனால் துப்பட்டா போட மறக்காதீங்க..
என்று அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால்
ஏன் இந்த திடீர் உத்தரவு என்றுதான் தெரியவில்லை.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஒரு திடீர் உத்தரவை
பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், "சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள்
அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது
அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.
மெல்லிய வண்ணம்
ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும். டிசர்ட் அணியக்
கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள்
ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணிய வேண்டும். அந்த ஆடைகள்
மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ண உடைகளை அணியக் கூடாது"
என்று தெரிவித்துள்ளார்.
காரணங்கள்
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொஞ்ச நாளாகவே நாகரீக உடை என்று
சில அரைகுறை ஆடைகளை அணிந்து வருகிறார்களாம். இதனால் தேவையில்லாத
பிரச்சனைகள் வருகிறதாம், நிறைய விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளதாம். இது
சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்ததால்,
இப்படி ஒரு ஆடை கட்டுப்பாடு என்று காரணம் சொல்லப்படுகிறது.
வரவேற்பு
தமிழக பெண்களுக்கென்று உள்ள பாரம்பரியத்தை பேணி காக்கும் பொறுப்பு
அனைவருக்கும் உள்ளது. அதை கருத்தில் கொண்டு அலுவலகத்துக்கு வரும் பெண்கள்
துப்பட்டா அணிந்து வரவேண்டும் என்ற அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கதே.
சிறுமிகள்
புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்து எரித்து கொன்ற ஹாசினி, கோயிலுக்குள்
சிதைத்து கொன்ற ஆசிபா, தலை கொய்து எறியப்பட்ட சேலம் சிறுமி, துடிக்க
துடிக்க சீரழித்த அயனாவரம் சிறுமி சம்பவங்கள் நடந்த போதெல்லாம் வராத ஆடைக்
கட்டுப்பாடு இப்போது வந்துள்ளது என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.
பாதிப்பு இல்லையா?
அதேசமயம், அரசு ஊழியர்கள் மட்டும் டீசன்ட் உடைகளை அணிந்தால் போதுமா?
தேவையில்லாத பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டும் வரவில்லையே.. அரைகுறை ஆடை
அணியும் மற்ற துறை பெண்கள், மாணவிகளுக்கும்தான் வந்து கொண்டிருக்கிறது. அதே
சமயம் சுடிதார், சேலை அணிந்த பெண்களுக்கும் சமுதாய பாதிப்பு இல்லை என்று
சொல்லிவிட முடியாது.
சுதந்திரம்
அரசு ஊழியர்களுக்கான இந்த ஆடைக் கட்டுப்பாடு வினோதமாக இருக்கிறது. இது
தேவையில்லாத சலசலப்புகளையே ஏற்படுத்தும் என்று பொதுவான கருத்து
எழுந்துள்ளது. இது எல்லாவற்றையும் விட ஒருவர் எதை சாப்பிட வேண்டும், எதை
உடுத்த வேண்டும் என்பது அவரவர் சுதந்திரமாகும். காந்தியடிகள் தலைமையில்
லட்சோபம் லட்சம் இந்தியர்கள் ரத்தம் சிந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரமும்
கூட. இதையும் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுதல் நலம்.
பாஜக மாநிலம்
நடந்து முடிந்த தேர்தலில் பெண் தேர்தல் அதிகாரிகள் ரீனா, யோகேஸ்வரி இவர்களை
எல்லாருக்கும் நினைவிருக்கும். விதவிதமாக உடை அணிந்து ட்ரெண்டிங்
ஆனவர்கள். அரசு அதிகாரிகள்தான்.. ஆனால் இவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு
எதையும் அந்த மாநில அரசு விதிக்கவில்லையே.. இத்தனைக்கும் அது பாஜக ஆட்சி
நடந்து வரும் மாநிலம்.
சுயஒழுக்கம்
அதனால் கட்டுப்பாடுகள், எங்கு, எதற்கு, யாருக்கு என்பதெல்லாம் பார்க்க
வேண்டி இருக்கிறது. எப்படி இருந்தாலும் சரி, எந்த மாநிலமாக இருந்தாலும்,
எவ்வளவு ஆடை கட்டுப்பாடுகள் விதித்தாலும் சரி.. "சுய ஒழுக்கம்" என்பதை
தாண்டி வேறு எதுவும் சிறந்த பாதுகாப்பு பெண்களுக்கு இருந்து விட முடியாது!
கோவையை அடுத்த அறிவொளிநகர் பகுதியைசேர்ந்தவர் கனகராஜ் (வயது 35),கட்டிட
தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர் கோவை அருகேஉள்ள
தனியார்என்ஜினீயரிங் கல்லூரியில்ஊழியராக பணிபுரிந்துவந்தார்.
இவர்களுக்கு
ஒரு மகனும், மகளும் உள்ளனர்.குடும்பத்தகராறுகாரணமாக கனகராஜ்மற்றும்
நந்தினிஆகியோர் கடந்த2ஆண்டுகளாக பிரிந்துவா
கடந்த சில
மாதங்களாக நந்தினி செல்போனில்டிக்டாக்செயலிக்கு அடிமையாகி அதனை
பயன்படுத்திஅதிகளவில்வீடியோக்களைபதிவேற்றம்செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கனகராஜ்செல்போனில்நந்தினியை
தொடர்புகொண்டுடிக்டாக்செயலி வீடியோக்களைபதிவேற்றம்செய்ய வேண்டாம் என்றும்,
தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறும்கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து
பேச அவர் நந்தினியை செல்போனில்தொடர்பு கொள்ளமுயற்சி செய்தார். அப்போது
நீண்ட நேரம்அழைப்பு பிசியாகஇருந்ததால் நேற்று மதியம் கனகராஜ் மது
குடித்துவிட்டு, நந்தினிவேலை செய்யும்கல்லூரிக்கு சென்றுஅவருடன்
வாக்குவாதத்தில்ஈடுபட்டதாக தெரிகிறது
அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ் தான்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் தலை மற்றும்
உடலில்சரமாரியாக குத்திஉள்ளார். இதில் படுகாயம் அடைந்தஅவரை
சகஊழியர்கள்மீட்டு கோவைஅரசுஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும்
வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த
சம்பவம்குறித்து தகவல்அறிந்த மதுக்கரைசப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார்
தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர்கனகராஜை கைதுசெய்தனர்.
செல்போனில்டிக்டாக்செயலி பயன்படுத்தியதால் வந்த தகராறில் கணவனேமனைவியை கொலைசெய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்காலில் நாகை நெடுஞ்சாலையில் ஹைவே நகர் உள்ளது. இங்குள்ள ஒரு
வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக,
உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல்
கிடைத்தது.
அதன்பேரில், நகராட்சி ஆணையர் சுபாஷ், உணவு கலப்பட
தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார
ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு நேற்று
திடீரென்று சென்று அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது வீட்டின் வாசல்,
படுக்கை அறை, கழிவறையில் மூட்டை, மூட்டையாக போதை பொருள் (கூல் லிப்,
ஹான்ஸ், பிளாக் சிகரெட்) பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு
ரூ.3 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக அந்த வீட்டில்
இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் சிங்காரவேலு
என்பவருக்கு சொந்தமான வீட்டை நிரவி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ரவி
(வயது 47) என்பவர் வாடகைக்கு எடுத்து மனைவி, மகள், மாமியார் என
குடும்பத்தோடு வசித்து வருவது தெரியவந்தது.
திருச்சியில்
இருந்து வரவழைக்கப்பட்ட போதை பொருட்களை, காரைக்கால், நாகூர்,
நாகப்பட்டினம், பொறையாறு, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு
வினியோகம் செய்து வந்ததும், அண்மை காலமாக அதிகாரிகள் கெடுபிடி காரணமாக போதை
பொருளை வினியோகிக்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில்
தெரியவந்தது.
வாடகை வீட்டில் மூட்டை மூட்டையாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு
கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை தஞ்சை
மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார்(வயது 46) ஓட்டினார்.
நேற்று
அதிகாலை ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம்
காரைக் குறிச்சி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அந்த சாலையின் வளைவில் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அரசு பஸ்
டிரைவர் கவனிக்காததால் எதிர்பாராதவிதமாக பஸ், சரக்கு லாரியின் பக்கவாட்டில்
பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.
இதில் பஸ்சில் முன்புற சீட்டில் அமர்ந்து பயணம் செய்த சென்னை அரும்பாக்கம்
எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ரகுபதி(67) என்பவர் சம்பவ இடத்திலேயே
பலியானார்.
மேலும் பஸ்சில் இருந்த ரகுபதியின் மனைவி விஜய குமாரி(62), மகள்
லாவண்யா(32), மூத்த மகளின் மகள் மவுலிகா(15), திருவாரூர் மாவட்டம்
உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிகரன்(12), குமரவேல்
மகள் மகேஸ்வரி(22), வடுகநாதன் மகன் பாலாஜி(8), மகள் ஷாலினி (3),
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் சுப்பிரமணியன் மனைவி அமுதா (45), தஞ்சை
வண்டிக்காரத்தெரு ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி(36), திருவையாறு செல்வராஜ் மகன்
யுவராஜ் (34), கபிஸ்தலம் நடராஜ் (55), பாபநாசம் கணேசன் மகன் மாரிமுத்து
(24), அரசு பஸ் கண்டக்டர் அய்யம்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(58) உள்பட
15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சுகளில் ஜெயங்கொண்டம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயங்கொண்டம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயகுமாரி உள்பட 4 பேர் மேல்
சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.
பஸ் மோதியதில் சரக்கு லாரியின் டீசல் டேங்க் உடைந்து,
அதிலிருந்து டீசல் வெளியேறியதால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து, அதனை சரி செய்தனர்.
விபத்தில் பலியான ரகுபதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சாந்தி, 2-வது
மகள் ரம்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகள் லாவண்யா
திருமணம் ஆகாதவர்.
இவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியை தஞ்சாவூரில்
உள்ள 2-வது மகள் ரம்யா வீட்டில் நடத்த முடிவு செய்து இருந்தனர். அதற்காக
ரகுபதி குடும்பத்துடன் புறப்பட்டு வந்தபோது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி
டிரைவர் சிதம்பரம் வய்யூர் பெரியத்தெருவை சேர்ந்த அரசன் மகன் சீனிவாசன்
(35), அரசு பஸ் டிரைவர் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.