வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அது ஏன் ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு விடுதலை கிடைத்தது? Why Independence day is Augest 15 ?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 14, 2018

அது ஏன் ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு விடுதலை கிடைத்தது? Why Independence day is Augest 15 ?

அது ஏன் ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு விடுதலை கிடைத்தது?

இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அந்தத் தேதியை ஏன் தேர்வு செய்தார்கள்? தேயிலை, பருத்தி, பட்டு ஆகியவற்றை வியாபார் செய்வதற்காக 1600ல் உள்ளே புகுந்த நிறுவனம்தான் கிழக்கிந்திய கம்பெனி. உள்ளே வந்த அவர்கள் ஊர்ப்பிடாரியை விரட்டிய ஒண்ட வந்த பிடாரி ஆனார்கள். இந்தியாவைக் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வசம் போனது சிதறிக் கிடந்த இந்தியா.



அதன் பின்னர் நீண்ட நெடிய போராட்டங்கள், பல்லாயிரம் உயிர்களைப் பறி கொடுத்து இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது. இந்தியாவின் சுதந்திர தின தேதியை முடிவு செய்தது இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், இந்தியாவின் முதல் கவனர் ஜெனரலுமான லார்ட் மெளன்ட் பேட்டன்தான். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிதான் 2ம் உலகப் போரின் முடிவாக, ஜப்பான், ஐக்கிய படையிடம் சரணடைந்தது. இதை நினைவில் கொண்டுதான் இதே ஆகஸ்ட் 15ம் தேதி மெளன்ட் பேட்டன் இந்தியாவின் சுதந்திர தினமாக தேர்ந்தெடுத்தார்.



இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பிதாமகர்கள், அமைப்புகள் பல. அவர்களின் வீரம் செறிந்த போராட்டங்களையும், தியாகங்களையும் சொல்லிக் கொண்ட போகலாம். ஆனால் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர் தேசப் பிதா காந்திதான். அவருடைய காங்கிரஸ் கட்சியின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு தேசம் எப்போதுமே நன்றியுடையதாக இருக்கிறது. 
ஆனால் இந்த காங்கிரஸ் கட்சியை சுதந்திரத்திற்குப் பின்னர் கலைத்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் மகாத்மா காந்தி!.

இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி விட்டது. ஒரே நாடாக இல்லாமல், இரண்டு நாடுகளாக இந்தியா பிளவுபட்டாலும் கூட சுதந்திரத்தை நாம் அடைந்து விட்டோம். எனவே இனியும் காங்கிரஸ் நீடிப்பது பொருத்தமாக இருக்காது. அதை கலைத்து விடுவதே நல்லது என்று கூறியிருந்தார் காந்தி. இருந்தாலும் அது நடைபெறாமலேயே போய் விட்டது. இன்றளவும் காங்கிரஸ் கட்சி உயிர்வாழ்ந்து கொண்டுள்ளது.

No comments:

Post a Comment