வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - Oppo flagship smartphone with three camera
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 12, 2018

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - Oppo flagship smartphone with three camera

மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 


ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo #smartphone  

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாகின்றன.


அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஆர்17 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மாட்யூல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றன. கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.
 
ஒப்போ ஆர்17 மாடலின் மற்றொரு படத்தில் F9/F9 ப்ரோ போன்ற நாட்ச், பின்புறம் டூயல் கேமரா செட்டப் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதிலும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒப்போ ஆர்17 மாடலில் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஒப்போ மாடல்களில் 6.3 இன்ச், 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் TENAA மூலம் சான்று பெறும் போது இவற்றின் முழு விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment