ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ/ ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது.
WHATSAPP
உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்த ஃ பேஸ்புக் நிறுவனத்தின் F8 மாநாட்டில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிகள் உருவாக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, உலகம் முழுவதுமுள்ள ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதள வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஒரே சமயத்தில் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.
GETTY IMAGES
அதுகுறித்த சில முக்கிய விடயங்களை அறிவோம்.
- நீங்கள் எப்போதும்போல ஒருவருக்கு வீடியோ/ ஆடியோ கால் செய்யவும்.
- பிறகு, வலதுபுறம் உள்ள "add participant" என்பதை தெரிவு செய்து, உங்களது கைபேசியில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள எண்களை அழைப்பில் இணைத்து கொள்ளலாம்.
- வீடியோ/ஆடியோ அழைப்புகளை அதிகபட்சம் நான்கு பேருடன் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
- க்ரூப் ஆடியோ கால் செய்யும் போது அதனை வீடியோ காலாக மாற்ற முடியாது.
வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி சேவையை போன்றே இந்த வீடியோ/ ஆடியோ சேவையும் முழுவதும் என்க்ரிப்ட் (ஒரு குறிப்பிட்ட இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளம்/ செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது) செய்யப்பட்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment