வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஊழியர்களுக்கு கார் பரிசு வைர வியாபாரி அசத்தல்

Pages

Sunday, September 30, 2018

ஊழியர்களுக்கு கார் பரிசு வைர வியாபாரி அசத்தல்


சூரத் குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், தன் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு, 'மெர்சிடிஸ் பென்ஸ்' என்ற சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சூரத்தில், வைர வியாபாரம் செய்து வருபவர், சாவ்ஜி டொலாக்கியா.
இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம், 6,000 கோடி ரூபாய். இவர், தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், வீடு, கார், தங்க நகை போன்றவற்றை பரிசாக வழங்கி, ஊக்குவித்து வருகிறார்.இந்த ஆண்டு, தன் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரியும் மூன்று ஊழியர்களை பாராட்டி, ஒரு கோடி ரூபாய் விலையுள்ள, 'மெர்சிடிஸ் பென்ஸ்' என்ற சொகுசு காரை பரிசளித்துள்ளார்.இது குறித்து, சாவ்ஜி கூறியதாவது:


என் நிறுவனத்தில், 13 - 15 வயதில் வேலைக்கு சேர்ந்த இவர்கள் மூவரும், வைர கற்களை பிரிப்பது, செதுக்குவது போன்ற அடிப்படை வேலைகளை கற்று, படிப்படியாக முன்னேறி, இன்று முக்கிய பொறுப்பில் உள்ளனர்.இவர்களின் பணி மற்றும் நேர்மையை பாராட்டி, கார்களை பரிசளித்துள்ளேன்; இது மற்ற ஊழியர்களையும் ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment