வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காட்டிக்கொடுத்த செல்போன்: போதையில் நண்பர்கள் கிணற்றில் தள்ளியதால் இளைஞர் பலி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 02, 2018

காட்டிக்கொடுத்த செல்போன்: போதையில் நண்பர்கள் கிணற்றில் தள்ளியதால் இளைஞர் பலி



ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செல்போனில் பதிவான காட்சியை வைத்து போலீஸார் 5 பேரைத் தேடி வருகின்றனர்.

அனைத்து துண்பங்களுக்கும் மது முக்கியக் காரணமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. பயந்து பயந்து ஊரில் உள்ள வயதானவர்கள் மது அருந்திய காலம் போய் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள்கூட மது போதைக்கு அடிமையாகி இருப்பதைக் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் பார்க்க முடிகிறது.


மது அருந்துவதற்குக் காரணம் எதுவும் இல்லை, ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு மது அருந்த கும்பலாகச் சேருவது தற்போதைய காலகட்டத்தில் வழக்கமாக உள்ளது. கல்யாணம், இறப்பு, பிறப்பு, பூப்பெய்தல், வேலை கிடைத்தல், வேலை இழத்தல், ட்ரான்ஸ்பர், பதவி ஓய்வு, வாகனம் வாங்குவது, விற்பது, சந்தோஷமான, துக்கமான நிகழ்வு என எது இருந்தாலும் மது கட்டாயம் இருப்பது சாதாரணமாகி விட்டது.


பிரிந்த நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தார்களா? உடனே பாட்டிலைத் திற என்பது வழக்கமாகிப் போனது. இதுபோன்ற நிகழ்வில் நெருங்கிய நண்பர்களாலேயே ஒரு இளைஞரின் வாழ்க்கை முடிவுக்கு வந்த துயர சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சம்மந்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் நண்பர்கள் கல்யாண்குமார், ராகுல், பவீத், சுதர்சன், அருண், அஜித்குமார் ஆகியோருடன் ஒன்றாகச் சுற்றுவார். தச்சுத்தொழில் செய்து வந்த நவீன் தனது தொழில் நிமித்தமாக பெங்களூரு சென்றார்.


அங்கேயே தங்கி தொழில் செய்துவந்த அவர் வாரத்தில் சனிக்கிழமை வாணியம்பாடி திரும்புவார். ஞாயிற்றுகிழமை இரவு மீண்டும் கிளம்பி பெங்களூரு சென்றுவிடுவார்.
நேற்று முன்தினமும் இதேபோன்று சொந்தக் கிராமம் திரும்பிய நவீன் தனது நண்பர்களுடன் சந்தோஷமாக மது அருந்த, அருகிலிருந்த விவசாய நிலத்துக்குச் சென்றார். அங்கு நண்பர்கள் அனைவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் சென்றுவிட்டனர்.
இதனிடையே நவீனைக் காணவில்லை என அவரது பெற்றோர் தேடியுள்ளனர். ஆனால் அவர் எங்கும் இல்லை. இன்று காலை அவரது உடல் அருகிலுள்ள கிணற்றில் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் நவீனின் பெற்றோருக்கும் போலீஸுக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பிணத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் நவீன் நேற்று தனது ஐந்து நண்பர்களுடன் விவசாய நிலம் அருகே மது அருந்தியது தெரியவந்தது. அவர்களைத் தேடியபோது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. அதில் ஒருவர் மட்டும் போலீஸில் சிக்கினார்.
அவரது செல்போனைக் கைப்பற்றிய போலீஸார் அதைச் சோதித்தபோது திடுக்கிடும் காட்சி இருந்தது. போதையில் அனைவரும் வாக்குவாதம் செய்வதும், மிகுந்த போதையில் கிடக்கும் நவீனை நண்பர்களில் சிலர் கையைப் பிடித்து இழுத்துச் செல்வதும், அதில் ஒருவர் அப்படியே கிணற்றில் பிடித்து தள்ளிவிடு என்று சொல்வதும், கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் இளைஞர் அப்படியே கிணற்றில் தள்ளிவிடும் காட்சியும் பதிவாகி இருந்தது.


அதை வீடியோவாக எடுத்த நண்பர்களில் ஒருவர் ‘ஐயம் வாட்சிங்’ என்று கண்ணருகே இரண்டு விரலைக் கொண்டுசென்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து நவீனின் உயிரிழப்புக்குக் காரணமான நண்பர்கள் அனைவரையும் வாணியம்பாடி போலீஸார் தேடி வருகின்றனர்.

Popular Posts

No comments:

Post a Comment