வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

மறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்



காலை உணவு என்பது ஒருநாளின் ஆரோக்கியமான தொடக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட தேவையான ஆற்றலை வழங்குவது காலை உணவுதான். எனவே எக்காரணத்தை முன்னிட்டும் காலை உணவை தவிர்ப்பது என்பது கூடாது. காலை உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு என்ன உணவை காலை உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியம்.
ஆரோக்கியமற்ற காலை உணவை உண்பதைப்போலவே சரியான காலை உணவை உண்ணாததும் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதேசமயம் காலை உணவிற்கு முன்னர் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் காளி உணவிற்கு முன்னர் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். (தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

சிட்ரஸ் பழங்கள் 
காலை உணவிற்கு முன்னர் சிட்ரஸ் பழங்களை ஒருபோதும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் இதில் உள்ள அமிலத்தன்மை உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் வாயுக்கோளாறை உண்டாக்கும். இவற்றில் உள்ள பைபர் மற்றும் ப்ரெக்டொஸ் வெறும்வயிற்றில் எடுத்துக்கொள்ளும்போது செரிமானத்தின் வேகத்தை குறைக்கிறது. ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை காலை உணவிற்கு முன் எடுத்துக்கொள்ள கூடாது.


வாழைப்பழம் 
 வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம், பைபர் மற்றும் மக்னீசியம் உள்ளது, இதனால்தான் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடக்கூடாது. அதிகளவு மக்னீசியம் இதை கோளாறுகளை உண்டாக்கக்கூடும்.

பேரிக்காய்
 காலை உணவிற்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது உங்கள் வயிற்றின் உட்புற சதைகளை பாதிக்கக்கூடும், அதற்கு காரணம் அதிலுள்ள அதிகளவு பைபர். வயிற்றின் உட்புற சவ்வானது மிகவும் மென்மையானது. இதனால் அதிகளவு பைபரை தாங்க இயலாது. காலை உணவுக்கு முன் பேரிக்காய் சாப்பிடுவது அல்சரை உருவாக்கும்.


கார்பனேற்றப்பட்ட பானங்கள்
 பொதுவாக கார்பனேற்றப்பட்ட பானங்களில் அதிகளவு சர்க்கரையும், கார்பன்-டை- ஆக்சைடும் உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடு உங்கள் வயிற்றில் வாயுவை அதிகரிக்கும் மேலும் வயிற்றுக்குள் வீக்கத்தை உருவாக்கும். இந்த அதிகளவு சர்க்கரை பசியின்மையை ஏற்படுத்தும், எனவே இதனை காலை உணவிற்கு முன் சாப்பிட வேண்டும்.


வெள்ளரிக்காய் மற்றும் காய்கறிகள்
 எந்த நேரம் வேண்டுமென்றாலும் சாலட் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்ற ஒரு கருத்து நிலவுகிறது, இது தவறான கருத்தாகும். நார்ச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய் மற்றும் காய்கறிகளை காலை உணவிற்கு முன் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இது செரிமானத்தை தாமதமாக்குவதுடன் அடிவயிற்றில் வலியையும் ஏற்படுத்துகிறது.


தக்காளி 
தக்காளியில் அதிகளவு டானிக் அமிலம் உள்ளது இது வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது இது நெஞ்செரிச்சல் மற்றும் வாயுக்கோளாறை உண்டாக்கும். எனவே காலை உணவிற்கு முன் தக்காளி சாப்பிடுவதை தவிருங்கள்.


கேக்
 கேக்குகளில் செறிவூட்டப்பட்ட ஈஸ்ட் இருப்பதால் இதனை காலை உணவிற்கு முன் சாப்பிடுவது நல்லதல்ல. இது வயிற்றின் உட்புற சதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள அதிகளவு சர்க்கரை காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளபடும்போது அது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தயிர்
 தயிரில் உள்ள லெக்டோபேசிலஸ் உறையவைக்கும் பண்பு கொண்டது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. காலை உணவிற்கு முன் தயிர் சாப்பிடும்போது இதில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அழிக்கக்கூடும். மேலும் இதனால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கமால் போகலாம்.



ஜாம் 
ஜாமில் உள்ள சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சமநிலையை பாதிக்கும். எனவே காலை உணவிற்கு முன் ஜாம் சாப்பிடுவது நல்லதல்ல. காலை உணவாக பிரட் மற்றும் ஜாம் சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது. அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.


அடைக்கப்பட்ட பழச்சாறுகள்
 செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்ட அடைக்கப்பட்ட பழச்சாறுகளை காலை உணவிற்கு முன் சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனை காலை உணவிற்கு முன் குடித்தால் அது உங்களுக்கு பசியின்மையை ஏற்படுத்தும் மேலும் நாள் முழுவதும் அயர்வாக உணரவைக்கும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment