வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மிரட்டுது, 'தித்லி' சென்னைக்கு திரும்புமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

மிரட்டுது, 'தித்லி' சென்னைக்கு திரும்புமா?

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!


வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'தித்லி' புயல், வட கிழக்கு மாநிலங்களை மிரட்டுகிறது. இந்த புயல், சென்னையை நோக்கி திரும்புமா அல்லது ஆந்திரா, ஒடிசாவுக்கு செல்லுமா என, வானிலை ஆய்வாளர்கள், தீவிர ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

 
தென் மேற்கு பருவ மழையின் இறுதி கட்டமாக, வானிலையின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த வாரம், தென் மேற்கு பருவ மழை முடியும் நிலையில் இருந்தது. ஆனால், அரபிக் கடலில் இருந்து வந்த காற்று, திடீரென கூடுதல் வலுப்பெற்றதுடன், கன்னியாகுமரிக்கு தென் மேற்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவானது. இது, லட்சத்தீவுகள் அருகே நகர்ந்த போது, 'லுாபன்' என்ற, புயலாக மாறியுள்ளது. இந்த புயல், அரபிக் கடலின் மேற்கு கரையில் உள்ள, ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை நோக்கி சுழல்கிறது. இது, நாளை மறுநாள், ஓமன் கரை பகுதிகளை நெருங்கி சூறையாடும் என, கணிக்கப்பட்டுள்ளது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!



இந்திய பகுதிகளில் இருந்து, லுாபன் புயல் நகர்ந்த நிலையில், வங்கக் கடலில், ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று,
புயலாக மாறியுள்ளது. இதற்கு, பாகிஸ்தான் தேர்வு செய்துள்ள, 'தித்லி' என்ற, உருது மொழி பெயர் வைக்கப்பட்டுள்ளது. தித்லி என்றால், பட்டாம் பூச்சி என, அர்த்தம். தித்லி புயல், பட்டாம் பூச்சி என்ற பெயருக்கு ஏற்றபடி, சிறகை விரித்தது போல, அதிக கன மழைக்கான மேகக் கூட்டங்களுடன், 360 டிகிரியில் சுழல்கிறது.


தற்போதைய நிலவரப்படி, இந்த புயல், எந்த பக்கமும் திரும்பலாம் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதாவது, மேற்கு திசையில் திரும்பினால், சென்னை, வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளை தாக்கலாம். வட மேற்கில் நகர்ந்தால், ஆந்திராவின் கோபால்பூர் மற்றும் கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, நாளை நெருங்கலாம். வடக்கு மற்றும் வட கிழக்கு திசைக்கு சென்றால், ஒடிசா அல்லது மேற்கு வங்க எல்லையை ஒட்டிய பகுதிகளை தாக்கும்.


ஏழு மாநிலங்களுக்கு, 'அலர்ட்':

'சென்னைக்கோ, தமிழகத்துக்கோ, தித்லி புயலால் பாதிப்பு ஏற்படும்' என, வானிலை ஆய்வு மையம், எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், வங்கக் கடலை ஒட்டியுள்ள, ஏழு மாநிலங்களுக்கு, நாளை வரை, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மேற்கு வங்கம், மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது. ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதி, அசாம் மற்றும் மேகாலயாவுக்கு, கன மழைக்கான, மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலுக்குள், மீனவர்கள், வரும், 12ம் தேதி வரை செல்ல வேண்டாம் என, தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு கடல் பகுதிகளிலும், மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்; கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.


சோடை போகாத பாகிஸ்தான் புயல்கள்!
இந்திய பெருங்கடலின், வடக்கு பகுதியில் உருவாகும் புயல்களுக்கு, உலக வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில், பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் சார்பில், பெயர்கள் முன்கூட்டியே பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்திய பெருங்கடலின் வட பகுதியான, வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'தித்லி' புயலுக்கு, பாகிஸ்தானின் பெயர் தேர்வாகியுள்ளது.
 

 பாகிஸ்தான் பெயர் வைத்த, அனைத்து புயல்களுமே, இதுவரை கடும் மழையையும், பாதிப்புகளையும் கொடுத்துள்ளன. தற்போதுள்ள பட்டியலில், பாகிஸ்தான் வழங்கிய முதல் பெயரான, பனுாஸ், 2005ம் ஆண்டு புயலுக்கு வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 'நர்கீஸ், லைலா, நீலம், நிலோபர் மற்றும் வர்தா' என, மொத்தம் ஆறு புயல்களுக்கு, பாகிஸ்தான் அளித்த பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன. இதில், பனுாஸ் துவங்கி, வர்தா வரை, அனைத்து புயல்களும் கரை பகுதிகளை சூறையாடியிருக்கின்றன.

 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment