வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு; இலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

வானத்திலிருந்து திடீரென வீதிக்கு இறங்கிய பயங்கரத் தீப்பிழம்பு; இலங்கையில் நேற்று நடந்த பேரதிர்ச்சி!!


வீதியால் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த நபர் பயங்கர மின்னல் தாகத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக பொலநறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலநறுவையிலிருந்து A11 நெடுஞ்சாலையூடாக அனுராதபுரம் நோக்கி உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோதே கிரித்தலை வாவிக்கு அண்மையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை மூன்று மணியளவில் குறித்த பகுதியில் இலேசான இடி மின்னலுடன் மழை தூறிக்கொண்டிருந்த நிலையில் அவ்வழியால் வாகனங்கள் சென்றுகொண்டிருந்துள்ளன.
இந்த நிலையில் குறித்த இளைஞர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென வானத்திலிருந்து பாரிய தீப்பிழம்பு போன்ற ஒன்று பளிச்சென்று இறங்கியுள்ளது. கிட்டத்தட்ட இளைஞரிலிருந்து 100மீட்டர் தூரத்திலேயே இது நிகழ்ந்துள்ளது.


இதனையடுத்து பதறிப்போன இளைஞர் உந்துருளியை திடீரென நிறுத்தியதனால் வீதியில் சரிந்து விழுந்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த பாரிய அனர்த்தத்திலிருந்து தப்பிய அவருக்கு காலில் சிராய்ப்புக் காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் உயிர் தப்பியமை தெய்வாதீனமாக நிகழ்ந்த ஒரு விடயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் பல பாகங்களிலும் மழை பெய்துவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பருவ மழை பெய்யத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தகதாகும்.

Popular Posts


No comments:

Post a Comment