வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 220 கோடியைக் கொண்டு போய் கொட்டி கட்டிய பாலம்.. ஜல்லி ஜல்லியா பேந்து போச்சே!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 22, 2018

220 கோடியைக் கொண்டு போய் கொட்டி கட்டிய பாலம்.. ஜல்லி ஜல்லியா பேந்து போச்சே!



மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தமிழகம், கேரளா இடையே விரைவாக செல்லவும் 220 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது.
தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
அந்த மேம்பாலத்தில் கடந்த 19 ம் தேதி முதல் ஏராளமான வாகனங்கள் செல்ல தொடங்கி உள்ளன. மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் சரக்கு வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குழி விழுந்துள்ளது. 
 
ஏற்கனவே அதிர்வு இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில் குழி ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஐஐடி பொறியாளர்களின் ஆய்வு அறிக்கையை வெளிப்படையாக அறிவித்து அச்சத்தை போக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதியை விரைவில் சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment