வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குற்றாலம் மெயினருவியில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 30, 2018

குற்றாலம் மெயினருவியில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

குற்றாலம் மெயின் அருவியில் மலைப்பாம்பு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குற்றாலம் மெயினருவிக்கு தண்ணீர் வரும். தற்போது மழை அதிகமாகியுள்ளதால் நீர் வரத்தும் அதிகரித்து வருகிறது.
   (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இந்த தண்ணீர் வழியாக ஊர்வனங்கள் அடித்து செல்லப்படுவது வழக்கம். பொதுவாக அங்குள்ள பொங்குமா கடல் அருவி மூலம் ஊர்வனங்கள் தண்ணீரில் அடித்து குற்றாலம் குளிக்கும் பகுதிக்கு வருவது தடுத்து நிறுத்தப்படும்.
இந்நிலையில் இன்று குற்றாலம் மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. இதனால் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த மலைப்பாம்பு பொங்குமா கடல் அருவிக்கு செல்லாமல் அருவியின் ஓடை வழியாக அடித்து வரப்பட்டது. இதையடுத்து அதை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment