Run World Media: 09/18/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, September 18, 2018

4 கால்கள், 2 ஆண் உறுப்புகளுடன் பிறந்த குழந்தை! - கடவுளின் அதிசயமாக பார்க்கும் மக்கள்


பல விதமான அசாதாரணமான குழந்தை பிறப்புக்கள் உலகில் பல இடங்களில் நடந்துள்ளன. அவற்றைப் பற்றி கேள்விப்படும் பொழுது வியப்பானதாக இருக்கும்.

மரபணு நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் இது போன்ற வித்தியாசமான நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தின் கோராக்பூரில் ஒரு குழந்தை பிறந்துள்ளது 

 4 கால்கள், 2 ஆணுறுப்பு:
அந்த குழந்தைக்கு 4 கால்களும், இரண்டு ஆண் உறுப்புடனும் பிறந்துள்ளது. கூலித்தொழிலாளியான புல்ஹான் நிசாத் என்பவருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தை ஒரே மாதிரியான இரட்டை குழந்தை உருவாக இருந்த நிலையில், அதன் வளர்ச்சி முழுமையாக நடக்காமல் இருந்ததால், இப்படி விசித்திரமான் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

வித்தியாசமாக பிறந்துள்ள இந்த குழந்தை, அக்கம் பக்கத்து வீட்டை சேர்ந்தோர்கடவுளின் அதிசய குழந்தையாக சென்று பார்க்கின்றனர்


எச். ராஜா தலைமறைவா.. எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா- போலீஸுக்கு சவால் விட்ட பாஜக நிர்வாகிஎச் ராஜா தலைமறைவா.. எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா என செய்தித்தாளை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸுக்கே சவால் விடும்படி பேசினார்.


புதுக்கோட்டையில் திருமயம் என்ற பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயத்துக்கு பக்கத்தில் மேடை போட போலீஸார் அனுமதி தரவில்லை. இதனால் எச் ராஜா வெகுண்டெழுந்தார்.
இதையடுத்து போலீஸாரை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்தார். அப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு நாங்கள் என்ன செய்ய என கேட்ட போலீஸாரை ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்றதோடு கெட்ட வார்த்தையும் பேசினார். • பரபரப்பு

  தலைமறைவு

  இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதாலும் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டதாலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

பண்ணை வீட்டில் உலா

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் இருந்து காரைக்குடி சுப்பிரமணியபுரம் 9-ஆவது வீதியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி • 4 வாரங்களுக்குள்

  விநாயகர் சதுர்த்தி விழா

  இதையடுத்து அவர் இன்னும் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் வேடந்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார்.
 • தலைமறைவானார் எச் ராஜா

  கண்ணுக்கு தெரியுதா

  அப்போது ஒரு செய்தித்தாளில் 'தலைமறைவானார் எச் ராஜா' என்ற முதல் செய்தியை காண்பித்து பாஜக நிர்வாகி ஒருவர் போலீஸாருக்கு சவால் விடும் தொனியில் பேசினார். அவர் கூறுகையில் எச் ராஜா தலைமறைவா, எங்க சிங்கம் இங்க உட்கார்ந்திருக்குடா. உன் கண்ணுக்கு தெரியுதா.
 • அசிங்கமாக இல்லையா

  சவால் விட்ட பாஜக நிர்வாகி

  இந்துக்களின் ஒருங்கிணைந்த ஒரே குரல் எச் ராஜாதான். அவர் சிங்கம் மாதிரி இங்க உட்காந்திருக்காரு, தலைமறைவுனு போட்டு இருக்கீங்களே உங்களுக்கு அசிங்கமாக இல்லையா. லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்க இருக்கோம். எங்கள் உயிர்களை தாண்டிதான் உங்களால் எச் ராஜாவை கைது செய்ய முடியும் என்று பேசினார்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் அறிவிப்பு


18 லட்சம் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மக்களுக்காகவே திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா. மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் ஜெயலலிதா.
2% increase in DA for TN govt. employees, teachers
அவர் வகுத்த பாதையில் செயல்படும் இந்த அரசு, 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த முடிவுகளை ஆராய்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றை உயர்த்தி வழங்க அமைக்கப்பட்ட அலுவலர் குழு, 2017-ன் பரிந்துரைகள் அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1-10-2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


தற்பொழுது 1-1-2016 முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கு 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக 2 சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்பப்பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த்துறையிலுள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சிச்செயலாளர் கள், எழுத்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும்.
இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை, 2018 முதல் ஆகஸ்டு, 2018 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், செப்டம்பர் 2018 (இந்த மாதம்) முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்