வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-10-28
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 04, 2018

[6 மாதம் சிறை] பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரத்தை மீறுபவர்களுக்கு தமிழக காவல்துறை அறிவிப்பு


உச்சநீதிமன்றம் 23. 10 .2018 ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்யவேண்டும் எனவும் வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனும் நிபந்தனைகளை விதித்தது. 
பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயித்துள்ளது. 

தமிழகத்தில் இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும் இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

 தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை என அரசு தெரிவித்துள்ளது: 
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் 
2. உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். 
இந்நிலையில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரத்தை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்யப்படும் எனவும், அதனையும் மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் என தமிழக காவல்துறை அறிவிப்பு.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பைக், காருக்கு அடுத்ததாக ஆட்டோ வாங்கியிருக்கும் அஜித்குமார்! யாருக்காக தெரியுமா



உன் குடும்பத்தை பார், முடிந்தால் என் படத்தை பார் என்று திரையுலகில் சொல்லியவர் அஜித்குமார் ஒருவராக தான் இருக்க முடியும். நமக்கு முதலீடே ரசிகர்கள் தரும் பணம் தான் என தெரிந்தும் அஜித்தின் இந்த கூற்று பல தரப்பினரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.





ஆனால் அதையும் தாண்டி பல சம்பவங்களை அஜித் செய்துள்ளார். அதில் பல நமக்கு தெரியாமல் மறைமுகமாகவே இருந்து விடுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை தான் நான் உங்களுக்கு தெரியப்படுத்த உள்ளேன். அஜித் எப்போதும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டோ ஸ்டானில் இருப்பவர்களுக்கு கை காட்டி செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது நீண்ட நாட்களாக இருந்த ஆட்டோவை மாத தவணை கட்டவில்லை என சொல்லி எடுத்து சென்றுள்ளனர்.


இதை அறிந்த அஜித் அந்த ஓட்டுனரை தனது வீட்டுக்கு அழைத்து புதியதாக ஒரு ஆட்டோவை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அஜித் கேட்ட ஒரு கேள்வி ’என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே’ என்பது தான் அந்த ஓட்டுனருக்கு கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Saturday, November 03, 2018

சிறப்பு வாய்ந்த துளசி திருமணம்


தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.  பாற்கடலில் இருந்து எழுந்த துளசி உன்னதப் பொருட்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இந்த ஒப்புயர்வற்ற துளசியைப் பார்த்த மாத்திரத்திலேயே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். துளசியின் மென்மையான ஸ்பரிசம் நம்மைத் தூய்மையாக்கும். துளசியைப் போற்றித் துதிப்பதால்-நமது நோய்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கி விடும்.


துளசி தீர்த்தத்தைத் தெளித்து கொண்டால் - மரணபயம் நீங்கும். துளசியை வீட்டில் வளர்த்து வந்தால் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும். தினந்தோறும் துளசியைப் பக்தியுடன் வணங்கிப் பூஜித்தால் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட துளசி - கண்ணனை மணந்த தெய்வப்பெண்.   (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

தீபாவளிக்கு மறுநாள் பிரதமையில் தொடங்கி, துவாதசி முடிய - 12 தினங்கள் துளசித் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த திருமணத்தை பார்ப்பதற்கு பித்ருக்களும் கூட வருவார்களாம்.


தெற்கு கர்நாடகாவில் எல்லா வீடுகளிலும் துளசித் திருமணம் நடைபெறும். வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின் நடுவில் திருமணப்பந்தல் மாதிரி பந்தல் போட்டு, அதன் கீழ் துளசி மாடத்தை அமைப்பார்கள். மாலை வேளையில் சாளக்கிராம வடிவத்தில் உள்ள கிருஷ்ணரை - பீடத்துடன் தூக்கி வந்து துளசி மாடத்தின் அருகே வைப்பார்கள்.


சாளக்கிராமத்தை வைத்தவுடன் முதலில் கிருஷ்ணருக்குத் தனியாகப் பூஜை நடைபெறும். பின் சாளக் கிராமத்திற்கும், துளசிக்கும் பூஜை செய்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இடையே நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறும். கண்ணனின் லீலைகளையெல்லாம் மனம் உருகப் பாடியும், நடனமாடியும், மகிழ்ந்து கொண்டாடி - திருமண நாளை இனிதாக முடிப்பார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு



சூடான சாதத்தில் மாசி கருவாட்டு தொக்கு போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

மாசி - 1 துண்டு (25 கிராம்)

பெரிய  வெங்காயம் - 100 கிராம்
பழுத்த தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
கடுகு, உளுந்து - தலா அரைடீஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

செய்முறை :

மாசி கருவாட்டு துண்டை அம்மியில் வைத்து பொடித்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.

தக்காளியையும் பச்சைமிளகாயும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம் சோத்து வதக்கவும்.


வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான மாசி தொக்கு ரெடி.

சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஷ் இது. 
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நுரையீரல் நோய்களுக்கு பயனுள்ள பஸ்த்ரிகா பிராணாயாமம்



ஸ்த்ரிகா பிராணாயாமம் சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும். 


 பெயர் விளக்கம் : பஸ்த்ரிகா என்றால் துருத்தி என்று பொருள். இப்பிராணாயாமத்தில் துருத்தி போன்று வேகமாக தொடர்ந்து மூச்சை இழுத்து வெளிவிடுவதால் இப்பெயர் அமைந்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


செய்முறை : அனுகூலமான தியான, ஆசனத்தில் உட்காரவும். (குறிப்பாக பத்மாசனம் செய்வது சிறந்தது) இரு கைகளையும் நீட்டி, முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும். இரு நாசிகளின் வழியாக மூச்சுக்காற்றை வேகமாகவும், பலமாகவும் 10 முறை தொடர்ந்து உள்ளுக்கு இழுத்து வெளியே விடவும். மூச்சை இழுக்கும் போது வயிறு மேல் நோக்கியும், வெளியே விடும்போது கீழ் நோக்கியும் இறங்கட்டும்.



10 முறை தொடர்ந்து மூச்சின் இயக்கத்தை வேகமாக நடத்திய பிறகு, ஒருமுறை மூச்சை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியே விடவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 2 சுற்று பயிற்சி செய்து, பழகப் பழக சுற்றுகளை அதிகரித்து 5 சுற்று வரை செய்யலாம்.



கவனம் செலுத்த வேண்டிய இடம் : வயிற்று தசைகளின் அசைவின்மீதும், மணிப்பூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு: ஆரம்பப் பயிற்சியில் மூச்சின் இயக்கம் மெதுவாகவும், சமமாகவும் இருக்கட்டும். பிறகு ஓரளவுக்கு வேகமாக மூச்சின் இயக்கத்தை நடத்தவும். நன்கு பழகிய பிறகு மிக வேகமாகவும், பலமாகவும் மூச்சின் இயக்கத்தை நடத்தப் பழகவும்.



தடைக்குறிப்பு : உயர் ரத்த அழுத்தம், தலை சுற்றல், குடலிறக்கம், பக்கவாதம், நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி செய்வது நல்லது. பயிற்சியின்போது தலை சுற்றுவது போலானால் உடனே பயிற்சியை நிறுத்தி விடவும்.



பயன்கள் :
உடல், மன ஆரோக்கியத்திற்கும் மன ஒரு நிலைப்பாட்டிற்கும் சிறந்தது. சுவாச, காசநோய், மார்ச்சளி நோய் போன்ற நுரையீரல் நோய்களுக்கு மிகவும் பயனுள்ளது. தொண்டைக் கம்மல், வீக்கம் நீங்கும். மூக்கில் சேர்ந்திருக்கும் சளியையும், நுரையீரலில் சேர்ந்திருக்கும் கோழையையும் விரைவில் அகற்றி விடும். இப்பயிற்சியினால் உடல் வெப்பம் அதிகரிப்பதால் அடிக்கடி குளிர்ச்சியினால் ஏற்படும் தும்மல் சளியை விரைவில் குணப்படுத்துகிறது. நுரையீரலில் இருந்து முழுமையாக கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தமாகும்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts