வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: TNPSC Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label TNPSC Latest News. Show all posts
Showing posts with label TNPSC Latest News. Show all posts

Monday, December 27, 2021

செம்ம ஆஃப்ர்,! 100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி.! ரஜினிகாந்த் அறக்கட்டளையில் யாருக்கு முன்னுரிமை..?

பயிற்சி பெற விரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது, ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்த ரசிகர்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி தற்போது , ரஜினி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை வழக்கறிஞர் சத்யகுமார் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது. 

எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும்தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.

அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுயதிருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் பதிவு செய்ய http://rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின் தொடரவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பின் முன்னுரிமை விவரம்

  • வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 20 சதவீதம்
  • முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் மாணவர்களுக்கு 20 சதவீதம்
  • குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 10 சதவீதம்
  • பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒற்றை பெற்றோர் உள்ள குழநதைகளுக்கு 14 சதவீதம்
  • 3 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு 16 சதவீதம்
  • பொதுப்பிரிவில் முதல் மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவ அல்லது மாணவியருக்கு 20 சதவீதம்

தொடர்பு கொள்வது எப்படி?

பயிற்சி பெற விரும்புவோர் http://www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ரஜினி அறக்கட்டளையுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் 044 3556 7696 மற்றும் 98400 59805 ஆகிய எண்களிலும், Tycoon House of Justice, No.2, First Floor,4th Main Road, R.A.Puram, Chennai 28 என்ற முகவரியிலும் அணுகலாம்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2A நடைபெறாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலைவாய்ப்பு செய்திகள் 


முந்தைய வேலைவாய்ப்பு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, December 09, 2021

TNPSC NEWS: டி.என்.பி.எஸ்.சி பிரஸ் மீட்; தேர்வு தேதிகள் அறிவிப்பு | TNPSC Group 4 2022 Important Dates | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2022-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ளளது. இந்த அறிக்கையில், 2022-ம் ஆண்டிற்கான பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


அரசு சார்ந்த ஊழியர்கள், பணியானர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த வகையில் ஆண்டு தோறும் பல தேர்வுகள் நடத்தப்படுகிறன்றன.

கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவசன ஊழியர்கள் என பலரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளபப்டுவது குறித்து அரசு சார்பில் திட்ட அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி தற்போது 2021-ம் ஆண்டு இறுதிகட்டத்திற்கு வந்துள்ள நிலையில், 2022-ம் ஆண்டுக்கான அரசு பணி நியமனங்கள், போட்டித்தேர்வு மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்து திட்ட அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்படும் என்றும், மார்ச் மாதம் குருப் 4 மற்றும் விஏஓ தேர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுகளில் தமிழ் தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும், கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுகள் நடத்தப்பட்வில்லை. இதனால்  அடுத்த ஆண்டில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் குரூப் 2 பிரிவில், 5831 பணியிடங்களும், குரூப் 4 பிரிவி்ல் 5258 பணியிடங்களும் காலியாக உள்ளது. தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு இந்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் தேர்வு அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Monday, October 11, 2021

TNPSC Group 4 Latest News | Vil Ambu News

தமிழகத்தில் அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சு போன்ற 7 பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் இதற்கான பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை கிராம நிர்வாக இளநிலை உதவியாளர் மற்றும் வரி வசூலிப்பவர் போன்ற பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அந்த கலந்தாய்வில் மொத்தம் 6007 பணியிடங்களில் 5,798 ஆகிய பணியிடங்களில் மட்டுமே நிரப்பப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் 250 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 2 முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது இந்த கலந்தாய்வில் தட்டச்சர் பணிக்கான 221 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேலும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணிக்கான 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கு இன்றும், நாளையும் கலந்தாய்வு நடைபெறும். மேலும் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 05, 2018

அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள்; டி.என்.பி.எஸ்.சி., திட்டவட்டம்



அனைத்து தேர்வுகளுக்கும், இனி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வினாத்தாள் அமைக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு, தமிழ் மற்றும் ஆங்கில வழி என, இரண்டு வகைகளில், வினாக்கள் வழங்கப்படும். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


புகார்:

இந்நிலையில், சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற, புகார் எழுந்தது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது: &'குரூப் - 2&' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. 


நடவடிக்கை:
எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



Sunday, November 04, 2018

[6 மாதம் சிறை] பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரத்தை மீறுபவர்களுக்கு தமிழக காவல்துறை அறிவிப்பு


உச்சநீதிமன்றம் 23. 10 .2018 ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்யவேண்டும் எனவும் வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனும் நிபந்தனைகளை விதித்தது. 
பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயித்துள்ளது. 

தமிழகத்தில் இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும் இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

 தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை என அரசு தெரிவித்துள்ளது: 
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் 
2. உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். 
இந்நிலையில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரத்தை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்யப்படும் எனவும், அதனையும் மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் என தமிழக காவல்துறை அறிவிப்பு.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Saturday, November 03, 2018

இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவுரை



சென்னை: குரூப் - 1 தேர்வில், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 1ல் அடங்கிய, பல்வேறு பதவிகளுக்கான, முதல் நிலை தகுதி தேர்வை, 2017 பிப்., 19ல், நடத்தியது.   (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

 இதன் முடிவுகள், 2017 ஜூலை, 21ல், வெளியாகின. இதையடுத்து, பிரதான தேர்வு, அக்., 13, 14, 15ம் தேதிகளில் நடந்தது. தேர்வு முடிவுகளை, டிசம்பர் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி, மிக நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும், நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, அவ்வப்போது வெளியாகும் தவறான மற்றும் அவதுாறான தகவல்கள் குறித்து, தேர்வர்கள் கவலைப்பட தேவை இல்லை. ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின், தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts