வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எந்த தாய்க்கும் ஏற்பட கூடாத கொடுமை, வெறும் 26 கி. எடையில் 98வது நாளில் இறந்து பிறந்த சிசு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

எந்த தாய்க்கும் ஏற்பட கூடாத கொடுமை, வெறும் 26 கி. எடையில் 98வது நாளில் இறந்து பிறந்த சிசு



எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் அளிக்க மாட்டார்கள்.



கருத்தரிப்பது, குழந்தை பிரசவிப்பது வரம் என்பார்கள். தான் எதிர்கொள்ள இருக்கும் வலியை நன்கு அறிந்தும், ஆசைகளுடன், கனவுகளுடன் அந்த வலியை கடக்க ஒருவர் முன்வருவார் என்றால், அவர் நிச்சயம் அம்மாவாக தான் இருக்க முடியும். உலகிலேயே வலி மிகுந்ததாக கருதப்படுவது பிரசவ வலி. அதை, ஆசையுடன் ஏற்கும் ஒரே உயிர் அம்மா மட்டுமே. அந்த ஆசையுடன் காத்திருந்த ஒரு தாய், அதைவிட பன்மடங்கு அதிக வலிக்கு ஆளாகி இருக்கிறார் என்பது தான், சோகத்தின் உச்சம். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

மனதைரியம் வேண்டும்! 
 எந்தவொரு தாயாக இருந்தாலும், இதற்கு ஒரு மன தைரியம் வேண்டும் என்று தான் குறிப்பிடுவார்கள். ஷர்ரன் சதர்லாண்ட் (40) தன் மகனை பிரசவிக்க இருப்பதை ஆசை, ஆசையாய் எதிர்நோக்கி காத்திருந்த பெண்மணி. ஆனால், எதிர்பாராதவிதமாக, மருத்துவர்கள் உங்கள் கருவில் வளரும் சிசு முழு திறனுடன் இல்லை. இது Medical Waste என்று கூறி கருக்கலைப்பு செய்ய கோரினர்.


மனமுடைந்து போனார்! 
 மருத்துவர்கள் இந்த செய்தி கூறிய நொடியில் மனமுடைந்து போனார் ஷர்ரன். நெஞ்சை பதைபதைக்க செய்யும் தன் 14 வார சிசுவின் படங்களை இணையங்களில் பதிவிட்டார் ஷர்ரன். வெறும் 98 நாட்களே வளர்ந்த சிசு. நான்கு அங்குலம் உயரம், 26 கிராம் எடை. மிக சிறிய முகம், கை, கால்கள் மற்றும் விரல் நகங்கள் கொண்டிருந்தது அந்த சிசு.


குழந்தையே இல்லை!
 அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருபது வாரங்கள் கூட வளர்ச்சி அடையாத சிசுக்களை அவர்கள் குழந்தையாக கருதுவதில்லை. ஆகையால், மருத்துவ அறிக்கையில் ஷர்ரனின் மகன் குழந்தை என்று குறிப்பிடப்படாமல், மருத்துவ கழிவு என குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த தாயால் இதை ஏற்க முடியும். பிறந்த தன்னுடன் கொஞ்சி விளையாடி மகிழ்வான் என்று நினைத்திருந்த சிசுவை, கழிவு என்று கூறி எடுத்துக் கொடுத்தனர் ஷர்ரனின் கைகளில்.


ஃப்ரிட்ஜில்!
 ஷர்ரனும் அவரது கணவர் மைக்கேலும் தங்கள் மகனை மருத்துவமனையில் இருந்து எடுத்து வந்து ஃபிரிட்ஜில் ஒரு வார காலம் வைத்திருந்தனர். பிறகு, தங்கள் மகனை ஒரு பூந்தொட்டியில் வைத்து புதைத்தனர். அதன் மீது ஒரு மலர் செடியை விதைத்தனர்.


போய்வா மகனே!
 இதயம் சுக்குநூறாக உடைந்து போகும் வகையிலான வலியை கடந்து வந்திருக்கும் ஷர்ரன். நான் உண்மையில் நன்றி கடமை பட்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அவனை பிரசவித்து, கண்களால் ஒருமுறை காணும் வாய்ப்பாவது கிடைத்தது. அவனுக்கு நான் குட் பாய் கூற ஒரு வாய்ப்பளித்தனர். என்று கூறி இருக்கிறார்.


மருத்துவ கழிவு! 
 அவன் குழந்தையே இல்லை, வெறும் மருத்துவ கழிவு என்று குறிப்பிட்ட காரணத்தால், முறையாக எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறிய ஷர்ரன். தன் மகனின் அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார். 14 வாரங்களே ஆன சிசுவாக இருந்தாலும், முகம், கை, கால்கள் பார்க்க ஒரு குழந்தை போன்ற உருவ வளர்ச்சி அடைந்திருந்தது.


உறுப்புகள்!
 அவன் கை, கால்களை தொட்டு பாக்கும் போது நான் நெகிழ்ந்து போனேன். அவன் ஒரு முழு குழந்தையாய் பிறக்க வேண்டியவன். அவன் காண்பதற்கு ஒரு நல்ல வளர்ச்சி அடைந்த சிசுவை போல தான் இருந்தான். முகத்தில் அவனது காது, நாக்கு, இதழ்கள் கூட நன்கு அறியும் படியான வளர்ச்சி அடைந்திருந்தன. என்னால், அதை எல்லாம் நம்பவே முடியவில்லை.


வலி!
 குழந்தை வளர்ச்சி அடைய, அடைய எப்படி இருக்கும் இருந்து படங்களில், காணொளிகளில் கண்டிருப்போம். ஆனால், யாரும் நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் என் மகனை நேரில் அவ்வாறு கண்டேன். அவன் சீரிய வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை என்பதே தாங்கிக் கொள்ள முடியாத வலியை ஏற்படுத்துகிறது.


ஆறுதல்! 
 அவன் இறந்து போயிருந்தாலும் கூட, அவனை கைகளில் ஒருமுறை எந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் ஆறுதல் அடைகிறேன். முழுமையான சிசுவாக வளரவில்லை என்பதற்காக, முறையாக செய்ய வேண்டியவற்றை செய்ய முடியாமல் போனதை எண்ணி வருந்துகிறேன்.

இதயத்துடிப்பு!
 ஒரு பரிசோதனையின் போது தான், ஷர்ரனின் வயிற்றில் வளர்ந்து வந்த சிசுவின் இதயத்துடிப்பு நின்று போனதை கண்டறிந்தனர் மருத்துவர்கள். அதை உடனே அவரிடம் எடுத்துரைத்து, உடனே அறுவை சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


அதிர்ச்சி!
 அவன் தனக்குள்ளேயே இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தாலும். கருக்கலைப்பு செய்து அவனை துண்டு, துண்டாக எடுப்பதை விரும்பாத ஷர்ரன். 173 நாட்களுக்கு முன்னர் அவனை பிரசவிக்க உதவி நாடினார். ஷர்ரனின் விருப்பத்தை போலவே, இயற்கை பிரசவம் போல சிசுவை வெளியெடுக்க மருத்துவர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.


கோபம்!
என் மகனை மீண்டும், மீண்டும் மருத்துவ கழிவு, அல்லது வெறுமென கரு என்று மற்றவர் கூறுவதை நான் வெறுத்தேன், கோபம் அடைந்தேன். அவனுக்கு முறையான இறுதி சடங்குகள் செய்ய வாய்ப்பில்லை என்பதால். பெரும் கலந்தாய்வுக்கு பிறகு, அவனை பூந்தொட்டியில் புதைக்க முடிவு செய்தோம். எனவே, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அவனை எடுத்து வந்த பிறகு ஒரு வார காலம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பிறகு அவனை பூந்தொட்டியில் புதைத்தோம். சிலர் இதை கொடூரம் என்று கூறலாம்.


வாழ்நாள் முழுக்க... 
ஆனால், அவனை ஒருவார காலம் எங்களுடன் வைத்திருந்தது, அவனது கைரேகைகளை எடுத்துக் கொண்டது, அவனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது எல்லாம் சற்று ஆறுதலாக இருந்தது. ஊரார் என்ன கூறினாலும் பரவாயில்லை அவன காலம் முழுக்க, நான் உயிரோடு வாழும் வரை என்னுடன் ஃப்ரிட்ஜில் ஆவது வைத்துக் கொள்ளலாம் என்று தான் எண்ணினேன்., என்று தன் மகனை இழந்த சோகத்துடன் கூறி இருக்கிறார் ஷர்ரன். ஷர்ரன் - மைக்கேல் தம்பதிக்கு ஏற்கனவே 11 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment