வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.! ஹேக்கர் ஹண்ட் ஆன்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 20, 2019

காரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.! ஹேக்கர் ஹண்ட் ஆன்.!



டெஸ்லா கார் நிறுவனம் உலக ஹேக்கர்களுக்கு புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி டெஸ்லா காரின் மென்பொருளை ஹேக் செய்தால் 1.10 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படுமென்று அறிவித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பின்படி சுமார் ரூ. 7 கோடி பரிசு வழங்கப்படுமென்று டெஸ்லா நிறுவனம் உறுதியளித்துள்ளது. 



அத்துடன் டெஸ்லா காரின் மென்பொருளை ஆராய்ந்து, அதில் உள்ள பக்-கை கண்டுபிடிக்கும் முதல் ஹேக்கர் பொறியாளருக்கு புத்தம் புதிய டெஸ்லா கார் பரிசாக வழங்கப்படுமென்றும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எலெக்ட்ரிக் கார் 
அதிநவீன எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 2003 ஆம் ஆண்டு, இந்த எலக்ட்ரிக் கார் நிறுவனம் துவக்கப்பட்டது. எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சாரத்தினால் இயங்கும் மின்சார கார்களை டெஸ்லா நிறுவனம் வடிவமைத்து விற்பனை செய்துவருகிறது.


ரூ.7 கோடி பரிசு 
தற்போது டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாடல் 3 ஆம் காரின் பாதுகாப்பு மென்பொருளை ஹேக் செய்பவருக்கு ரூ.7 கோடி பரிசும் மற்றும் மென்பொருளில் உள்ள முதல் பக் கண்டுபிடிக்கும் மென்பொருள் பொறியாளருக்கு டெஸ்லா காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது என டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Pwn2Own ஹேக்கிங் 
போட்டி Pwn2Own என்ற கம்ப்யூட்டர் ஹேக்கிங் நிகழ்ச்சி கான்செக் மேற்கு பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த ஹேக்கிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு மென்பொருள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள பிழைகளை கண்டறிய வாய்ப்பு தரப்படும். தவறுகளைச் சரியாக சுட்டிக்காட்டும் வெற்றியாளருக்கு பணம் மற்றும் பொருளாக பரிசுகள் வாங்கப்பட்டுவருகிறது.




டெஸ்லா கார் 3 
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் Pwn2Own கம்ப்யூட்டர் ஹேக்கிங் போட்டியாளர்களுடன் இணைத்து, தனது காரில் உள்ள மென்பொருள் பிழை மற்றும் அதில் உள்ள பக்-களை சுட்டிக்காட்டும் வெற்றியாளருக்கு 7 கோடி பரிசு தொகை மற்றும் டெஸ்லா காரின் 3 ஆம் மாடலை பரிசாக வழங்கவுள்ளது. இச்செய்தி பல ஹேக்கர்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது. 


No comments:

Post a Comment