வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, January 19, 2019

தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு


திருக்குழுக்குன்றம் தாசில்தாரை விஏஓக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தாராக மனோகரன் பணியாற்றி வருகிறார்.



இவர், விஏஓக்களை மிரட்டி தவறான சான்றிதழ்கள் வழங்க நிர்ப்பந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் கூட்டுப்பட்டாவில் சம்பந்தமில்லாத நபரை சேர்த்து பட்டா வழங்கும்படி புதுப்பட்டினம் விஏஓ (பொறுப்பு) மணிக்கு தாசில்தார் மனோகரன் நிர்ப்பந்தம் செய்ததாக தெரிகிறது. அதற்கு அவர், ‘தவறான சான்றிதழ் வழங்க முடியாது’ என்று மறுத்துவிட்டாராம். 


இதனால் ஆத்திரம் அடைந்த தாசில்தாரர், ‘உயரதிகாரியான நான் சொல்லும் சான்றிதழை நீங்கள் வழங்கிதான் ஆக வேண்டும். இல்லையென்றால் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சக விஏஓக்களிடம் மணி கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், விஏஓக்கள் அனைவரும் நேற்றிரவு, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்து, தாசில்தாரை வெளியே விடாமல் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வரை சிறைப்பிடித்து வைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன் ஆகியோர் நள்ளிரவு 12.30 மணியளவில் தாசில்தார் அலுவலகத்துக்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட விஏஓக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாசில்தாரை விடுவித்தனர்.
எனினும் விஏஓக்கள் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலையிலும் இந்த போராட்டம் நீடித்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் இருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விஏஓக்கள், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தாசில்தார் மனோகரன் மீது உயரதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் அளிக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்’ என்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



No comments:

Post a Comment