Run World Media: கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 27, 2019

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவிக்காத பலர் தலைவலிதானே என்று அலட்சியமாக கூறுவர். ஆனால், உடல் வேதனையை மட்டுமல்ல மனவேதனையையும் கொடுக்குமளவுக்கு தீவிர தலைவலிகள் உள்ளன
 'தற்கொலை தலைவலி'
  செத்துப் போய் விடலாமா என்ற அளவுக்கு வாழ்க்கையை வெறுக்க வைப்பது கிளஸ்டர் தலைவலி எனப்படும் கொத்துத் தலைவலி ஆகும். இதனுடைய முக்கியமான தாக்குதல், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமான, எரிவது போன்ற வேதனை கொடுக்கும் வலியாகும். முகத்தின் ஒரு பக்கமாக வலியை கொடுக்கும் இவ்வகை தலைவலி, பற்பல இடங்களில் பரவி வலியை கொடுப்பதால் கொத்துத் தலைவலி என்று அழைக்கப்படுகிறது.


வலியின் தீவிரத்தன்மை மற்றும் தாக்கும் வேளைகள் ஆகியவற்றில் மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியிலிருந்து கிளஸ்டர் என்னும் கொத்துத் தலைவலி வேறுபடுகிறது.


தற்கொலை தலைவலி முகத்தின் உணர்ச்சி மற்றும் மெல்லுதல், கடித்தல் ஆகிய செயல்பாடுகளுக்குக் காரணமான டிரைஜெமினல் நரம்போடு தொடர்புடையது கொத்துத் தலைவலி. 

நாள் முழுவதும் அல்லது வாரம் மற்றும் பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு தொடர்ந்து வருவதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தத் தலைவலி பெண்களை விட ஐந்து முதல் ஆறு மடங்கு ஆண்களை அதிகம் தாக்கும்.
 அதிலும் 20 முதல் 40 வயதுடைய ஆண்களை அதிகம் தாக்குகிறது. மொத்த மக்கள் தொகையில் 0.1 விழுக்காட்டினர் கொத்துத் தலைவலியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு பரம்பரையாக இந்நோய் தாக்குகிறது. இத்தலைவலி வருவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 முழுமையான சிகிச்சை அளிப்பதும், இது வராமல் தடுப்பதற்கான முறையை கூறுவதும் கடினம். மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹார்மோன்களை சுரக்கக்கூடிய ஹைபோதலாமஸின் ஒரு பகுதியே இத்தலைவலி தாக்குவதற்கு காரணமாகிறது என்று கூறப்படுகிறது. சில பொருள்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் சூழல் ஆகியவை இத்தலைவலியை கொண்டு வருகின்றன.


கொத்துத் தலைவ
 தாக்குதல் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாக தாக்கக்கூடியது இத்தலைவலி. நடு இரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது இது எழுப்பி விட்டுவிடும். பலருக்கு ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் இது தாக்குகிறது;வேறு சிலரை தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தாக்குகிறது.

 சிலருக்கு ஆண்டுதோறும் திருவிழாபோல குறிப்பிட்ட காலத்தில் கொத்துத் தலைவலியின் தாக்குதல் நேரும். சிலருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவகாலத்தில் தலைவலி வரும்.

 ஆனால் நபருக்கு நபர் இதன் தாக்கும் தன்மை வேறுபடும். ஒருமுறை கொத்துத் தலைவலி தாக்க ஆரம்பித்தால், தாக்குதல் பல நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குத் தொடரக்கூடும். தாக்குதல் முடிந்த பிறகு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குக் கூட மறு தாக்குதல் வராமல் இருக்கலாம்.

அறிகுறிகள் 
 ஒரு கண்ணைச் சுற்றி எழும்பும் தீவிரமான வலி, நெற்றிக்கும் பின்னர் கன்னங்களுக்கும் அதைத் தொடர்ந்து காதுகளுக்கு முன்பு இருக்கும் மண்டையோட்டு பொருத்துபுள்ளிக்கும் பின்னர் மேற்புற ஈறுகளுக்கும் பரவும்.
 வலி முகத்தின் ஒரு பக்கமாகவே இருக்கும். மூக்கடைப்பு அல்லது மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல் பதற்றம் நெற்றியில் அதிக வியர்வை ஒரு கண்ணைச் சுற்றி துளைத்தெடுப்பதுபோன்ற வலி.

பாதிக்கப்பட்ட கண்ணில் கண்ணீர் அல்லது இரத்தம் காணப்படும். அந்தக் கண்ணின் இமை தொய்ந்துபோகும்.
முகத்தின் எப்பக்கத்தில் தலைவலி பாதித்துள்ளதோ அப்பக்கம் சிவந்து கன்றிப்போய் காணப்படும்.
 ஒரு நாளில் ஒன்று முதல் மூன்று முறை வரைக்கும் தீவிரமான வலி தாக்கும்.

 ஒரு முறை வரும் வலி கால் மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இருக்கும். இதுபோன்ற தலைவலி ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு தொடர்ந்து வரும். வெளிச்சத்தை பார்க்க இயலாத கூச்சம்


உறுதி செய்தல் 
 நீங்கள் அனுபவிக்கும் வலியின் தன்மை, தாக்குதலின் தன்மை, அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவர் இது குறித்து ஆராய்வார். உங்கள் கண்மணிகள் மற்றும் இமைகளில் வேறுபாடு தெரிகிறதா என்பதை பரிசோதிப்பார்.. 

 தலைவலி எவ்வெப்போது வருகிறது, எவ்வளவு தீவிரமாக இருக்கிறது, எங்கு வலிக்கிறது என்பதுபோன்ற தகவல்களை குறித்து வைப்பது அது எவ்வகை தலைவலி என்று தீர்மானிக்க உதவும். ஆகவே, உங்களை தாக்கும் தலைவலி குறித்ததான விவரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஆக்ஸிஜன் சிகிச்சை 
 சுத்தமான வளிவாயுவை சுவாசிப்பதன் மூலம் கொத்துத் தலைவலியின் தீவிரத்தை குறைக்கலாம். நிமிடத்திற்கு 7 முதல் 10 லிட்டர் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடிய ஆக்ஸிஜன் கவசம் மூலம் கால் மணி நேரத்திற்கு மட்டும் வளிவாயு அளிக்கப்படலாம். 

அடர்த்தியான ஆக்ஸிஜன் நுரையீரல் திசுக்களில் காயம் ஏற்படுத்தக்கூடியது மற்றும் நுரையீரலுக்குப் பாதிப்பை அளிக்கக்கூடியது. ஆகவே, ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குறைந்த காலகட்டத்திற்கு அடர்த்தி நிறைந்த ஆக்ஸிஜன் தகுதி வாய்ந்த மருத்துவரால் அளிக்கப்படலாம். நாசிக்கான தெளிப்பான்: நாஸல் ஸ்பிரே மூலம் லிடோகெயின் போன்ற மருந்துகளை பயன்படுத்துவது தீவிர வலியிலிருந்து விடுதலையை அளிக்கும்.


எதிர்கொள்ள சில குறிப்புகள் 
 மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளோடு வாழ்வியல் மாற்றம், உணவு மற்றும் தினசரி நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வருவதும் கொத்துத் தலைவலியை எதிர்கொள்ள உதவும். இத்தலைவலிக்கு வீட்டில் அளிக்கக்கூடிய சில சிகிச்சைகள்:


குளிர் அல்லது வெப்ப ஒத்தடம்
 பனிக்கட்டி (ஐஸ்) தரும் குளிர்ச்சி, வலியின் தீவிரத்தை மரத்துப்போக செய்யும். ஆகவே, ஐஸ்கட்டி ஒத்தடம் சிறந்த தீர்வை தரும். உறைந்துபோன நிலையிலுள்ள காய்கறிகள் அல்லது ஐஸ்கட்டிகளை துணி ஒன்றில் கட்டி, கழுத்தின் பின்பகுதியில் ஒத்தடம் அளிக்கவேண்டும்.
 குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கி உங்கள் தலையில் ஐந்து நிமிடங்களுக்கு போடலாம். தேவைப்படும் நேரம் வரை இதை மறுபடி மறுபடி செய்யலாம். வெப்பமும் தசை முறுக்கத்தை தளர்த்தி வலியை குறைக்கக்கூடும்.

 சுடுநீர் கழுத்தின் மேல் விழும்படி குளிக்கலாம். இது கழுத்து தசைகளை தளர்த்தும். கழுத்தின் பின் பகுதியில் பருத்தி துணி ஒன்றை போட்டு, அதன்மேல் சுடுநீர் நிறைந்த வாட்டர் பேக்கினை 10 முதல் 15 நிமிட நேரம் வரை வைக்கலாம்.
இதில் எந்த முறை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பயனுள்ளதாக தோன்றுகிறதோ அதை செய்யலாம்.

நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?
http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/2.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!


http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

 
http://www.runworldmedia.com/2019/05/12-24.html


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்