Run World Media: அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. நேற்று மாணவி.. இன்று மாணவன்.. என்ன நடக்குது?

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 27, 2019

அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. நேற்று மாணவி.. இன்று மாணவன்.. என்ன நடக்குது?

செங்கல்பட்டு அருகே பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவி, மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சனிக்கிழமை அனுப்பிரியா என்ற மூன்றாம் ஆண்டு மாணவியும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த அனுஷ் செளத்ரி என்ற முதலாம் ஆண்டு மாணவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அனுப்பிரியா என்ற மாணவி எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பிடெக் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். சனிக்கிழமையன்று விடுதியின் பத்தாவது மாடிக்கு சென்ற அந்த மாணவி அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். 
 மேலிருந்து குதித்து விழுந்ததில் அந்த மாணவியின் உடல் சிதறிப்போனது. இப்படி ஒரு கோரமான முடிவுக்கு என்ன காரணம் என்று காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் தற்கொலைக்கு முன்பாக அந்த மாணவி எழுதிய கடிதம் கிடைத்தது.


தற்கொலைக்கு என்ன காரணம்
மரணத்திற்கு முன்பாக அனுப்பிரியா, தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். வீட்டில் எனக்கு சுதந்திரமில்லை, டிவி பார்க்கக் கூடாது, சினிமா பார்க்கக்கூடாது என்று பெற்றோர் கண்டிப்பாக இருந்தனர். என்னை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


சுதந்திரமாக வாழ முடியவில்லை
என்னால் என்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ முடியவில்லை வீட்டுக்கு போகவும் பிடிக்கவில்லை. போலியான வாழ்க்கையை என்னால் வாழ முடியவில்லை என்பதால் தற்கொலை செய்யப்போவதாக எழுதி வைத்துள்ளார். தம்பி ராஜூ சுந்தரம் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


பெற்றோர் உறுதி 
 அனுப்பிரியாவின் மரணம் குறித்து கேள்விப்பட்ட உடன் பெற்றோரும், தம்பி ராஜூவும் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். அனுப்பிரியாவின் தம்பி சென்னை ஐஐடிவியில் படித்து வருகிறார். பெற்றோரின் கண்டிப்பு மாணவியின் உயிரை குடித்துள்ளது.


ஜார்கண்ட் மாணவர் தற்கொலை  
மாணவியின் தற்கொலை சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் இன்றைய தினம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல்துறையினர் அனுஷ் சௌத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?
http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/2.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!


http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

 
http://www.runworldmedia.com/2019/05/12-24.html


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்