வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 23, 2019

இந்தியாவில் ஃபிளிப்கார்ட் சூப்பர்மார்க்கெட்- அண்ணாச்சி கடைகளுக்கு சிக்கலா

அமெரிக்காவில் சூப்பர் மார்கெட் கடைகளை நடத்திவரும் பிரபலமான வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிளிப்கார்ட் இந்தியாவில் சில்லறை விற்பனையில் ஈடுபடும் பொருட்டு மளிகை கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 தற்போது ஆன்லைன் விற்பனையில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் ஃபிளிப்கார்ட், இந்தியாவில் மளிகை கடைகளை திறக்க முன்வந்துள்ளதால், இதன் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடையவேண்டுமானால், இந்தியர்களின் முதலீடுகள் மட்டும் போதாது என்பதால், மத்திய அரசு அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை ஊக்குவித்து வருகிறது. காப்பீடு முதல் உள்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடுகளை வரவேற்றுள்ளது.

இதில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்நிய முதலீடுகள் இருந்தால் அது என்றைக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் என்று சொல்லி பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு பெரும்பாலான துறைகளில் 100 சதவிகித அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
 ஏற்கனவே காப்பீட்டுத் துறையில் 100 சதவிகித அந்நிய முதலீடுகளை குவித்துள்ளன. மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் பெருமளவில் அந்நிய முதலீடுகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.

 அதோடு பாதுகாப்புத் துறையிலும் 100 சதவிகித அந்நிய முதலீகளுக்கு மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டே அனுமதித்துவிட்டது. கடந்த 2018ஆம் ஆண்டில் சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்துவிட்டது. இதையடுத்து வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவில் அதிக அளவில் குவித்து வருகின்றன.

முதல் கட்டமாக அமெரிக்காவின் பிரபல வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபிள்ப்கார்ட் இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதற்கு முன்வந்துள்ளது. ஃபிள்ப்கார்ட் தற்போது ஆன்லைன் மூலமாக அனைத்து விதமான பொருட்களையும் மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

 சில்லறை விற்பனைக் கடைகளை திறப்பதால் இன்னும் கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று முடிவெடுத்துள்ளது. வால்மார்ட் நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது சூப்பர் மார்கெட் கடைகளை திறந்துள்ளது. இந்தியாவிலும் மும்பை, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தனது கிளைகளை திறந்துள்ளது. இதில் அனைத்து விதமான பொருட்களையும் கொள்முதல் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
சில்லறை விற்பனையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு கதவை திறந்துவிட்டுள்ளதால், வால்மார்ட் நிறுவனமும் தனது அங்கமான ஃபிளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சில்லறை விற்பனையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. மேலும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக ஆன்லைன் விற்பனையில் ஈடுபடப்போவதால், அதற்கு போட்டியாக ஃபிளிப்கார்ட் நிறுவனமும் சில்லறை விற்பனையில் ஈடுபடப்போவதாக தெரிகிறது.
 ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில் சுமார் 3ஆயிரத்து 485 கோடி ரூபாய் முதலீட்டில் சில்லறை விற்பனை கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதை அடுத்தே ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இந்தியாவில் மளிகைக் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment