வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: துப்பட்டா அணிந்தால் மட்டும்?.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 01, 2019

துப்பட்டா அணிந்தால் மட்டும்?.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு..

புடவை ஓகே.. சுடிதாரும் ஓகே.. ஆனால் துப்பட்டா போட மறக்காதீங்க.. என்று அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏன் இந்த திடீர் உத்தரவு என்றுதான் தெரியவில்லை. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஒரு திடீர் உத்தரவை பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், "சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.

மெல்லிய வண்ணம்  

ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும். டிசர்ட் அணியக் கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணிய வேண்டும். அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ண உடைகளை அணியக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.


காரணங்கள்  

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொஞ்ச நாளாகவே நாகரீக உடை என்று சில அரைகுறை ஆடைகளை அணிந்து வருகிறார்களாம். இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் வருகிறதாம், நிறைய விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளதாம். இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்ததால், இப்படி ஒரு ஆடை கட்டுப்பாடு என்று காரணம் சொல்லப்படுகிறது.
வரவேற்பு  

தமிழக பெண்களுக்கென்று உள்ள பாரம்பரியத்தை பேணி காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதை கருத்தில் கொண்டு அலுவலகத்துக்கு வரும் பெண்கள் துப்பட்டா அணிந்து வரவேண்டும் என்ற அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கதே.


சிறுமிகள் 

புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்து எரித்து கொன்ற ஹாசினி, கோயிலுக்குள் சிதைத்து கொன்ற ஆசிபா, தலை கொய்து எறியப்பட்ட சேலம் சிறுமி, துடிக்க துடிக்க சீரழித்த அயனாவரம் சிறுமி சம்பவங்கள் நடந்த போதெல்லாம் வராத ஆடைக் கட்டுப்பாடு இப்போது வந்துள்ளது என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.


பாதிப்பு இல்லையா?  

அதேசமயம், அரசு ஊழியர்கள் மட்டும் டீசன்ட் உடைகளை அணிந்தால் போதுமா? தேவையில்லாத பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டும் வரவில்லையே.. அரைகுறை ஆடை அணியும் மற்ற துறை பெண்கள், மாணவிகளுக்கும்தான் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் சுடிதார், சேலை அணிந்த பெண்களுக்கும் சமுதாய பாதிப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.


சுதந்திரம்  

அரசு ஊழியர்களுக்கான இந்த ஆடைக் கட்டுப்பாடு வினோதமாக இருக்கிறது. இது தேவையில்லாத சலசலப்புகளையே ஏற்படுத்தும் என்று பொதுவான கருத்து எழுந்துள்ளது. இது எல்லாவற்றையும் விட ஒருவர் எதை சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்பது அவரவர் சுதந்திரமாகும். காந்தியடிகள் தலைமையில் லட்சோபம் லட்சம் இந்தியர்கள் ரத்தம் சிந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரமும் கூட. இதையும் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுதல் நலம்.


பாஜக மாநிலம் 

நடந்து முடிந்த தேர்தலில் பெண் தேர்தல் அதிகாரிகள் ரீனா, யோகேஸ்வரி இவர்களை எல்லாருக்கும் நினைவிருக்கும். விதவிதமாக உடை அணிந்து ட்ரெண்டிங் ஆனவர்கள். அரசு அதிகாரிகள்தான்.. ஆனால் இவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு எதையும் அந்த மாநில அரசு விதிக்கவில்லையே.. இத்தனைக்கும் அது பாஜக ஆட்சி நடந்து வரும் மாநிலம்.


சுயஒழுக்கம்  

அதனால் கட்டுப்பாடுகள், எங்கு, எதற்கு, யாருக்கு என்பதெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது. எப்படி இருந்தாலும் சரி, எந்த மாநிலமாக இருந்தாலும், எவ்வளவு ஆடை கட்டுப்பாடுகள் விதித்தாலும் சரி.. "சுய ஒழுக்கம்" என்பதை தாண்டி வேறு எதுவும் சிறந்த பாதுகாப்பு பெண்களுக்கு இருந்து விட முடியாது!

No comments:

Post a Comment