Run World Media: வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 3, 2019

வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

உலகம் முழுவதும் மக்கள் வித்தியாசமான பழக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீனா, ஜப்பான் நாடுகளில் அரசின் ஒரு குழந்தை திட்டத்தால் மக்கள் தங்கள் வயசான காலத்தில் கூட வேலை செய்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தொகையும் குறைய ஆரம்பிக்கிறது. புவியியல் புள்ளி விவரங்களின் படி கிராமப்புற மற்றும் மலைப் பிரதேச பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகத்தான் காணப்படும்.

அப்படிப்பட்ட ஒரு அதிசய கிராமம் தான் இது. அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா? இங்கு மக்களை விட பொம்மைகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.சிறிய கிராமம்
 நாகோரோ என்ற சிறிய கிராமம் மேற்கு ஜப்பானின் மலைகளில் அமைந்துள்ளது. இங்கே சென்று நீங்கள் பார்த்தால் ஒரு தெருவில் கூட ஆள் நடமாட்டத்தை பார்க்க முடியாது.

அந்தளவுக்கு தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்ததாக கூறுகின்றனர். ஆனால் தற்போது இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 27 மட்டுமே.

தனிமையை போக்க  
எனவே கிராம மக்களிடையே உள்ள தனிமையை போக்க , அவர்களுள் ஒருவரான சுகிமி அயனோ என்பவர் மனித அளவிலான சில பொம்மைகளை தெருக்களில் வைக்க முடிவு செய்தார்.

இதன் படி பார்த்தால் 69 வயதான பொம்மை தயாரிப்பாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக பொம்மைகளைச் செய்து வைத்து வருகின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால் தற்போது மக்களை விட பொம்மைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது தான்.முதல் பொம்மை
பொம்மை தயாரிப்பாளர் 16 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய முதல் பொம்மையை தயாரிக்கும் போது அந்த பொம்மைகளுக்கு என் தந்தையின் ஆடைகளை அணிவித்தேன்.

 மேலும் எங்கள் தோட்டத்தில் வளர்க்கின்ற உணவுகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற ஒரு பயமுறுத்தும் காக்கை பொம்மையை தயாரித்து அங்கே நிப்பாட்டினேன் என்கிறார்.
தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் 
இந்த பொம்மைகளைத் தயாரிக்க மரக் குச்சிகள் மற்றும் நியூஸ் பேப்பர் போதுமானது. எலாஸ்டிக் போன்ற துணிகள் பொம்மையின் முகத்தை செய்வதற்கும், கூந்தலுக்கு உல்லன் நூல்களையும் பயன்படுத்துகிறேன்.

 இதை பார்த்தால் அச்சு அசல் அப்படியே மனிதர்கள் போன்றே இருக்கும். உதட்டிற்கும் மற்றும் கன்னத்திற்கும் பிங்க் கலர் லிப்ஸ்டிக் கொண்டு மேக்கப்பும் செய்துள்ளேன். இது அந்த பொம்மைகளுக்கு ஒரு இயற்கையான அழகை தருகிறது.ரெடியா? 
 என்னங்க இந்த கிராமத்துக்கு போக நீங்க ரெடியா? அப்போ ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உங்களை வரவேற்க பொம்மைகளும் தயாராக இருக்கிறது.


குழந்தைகளே இல்லை 
இந்த கிராமத்தில் சிறிய வயதினர் என்றால் 55 வயது ஒருத்தர் தானாம். ஏனெனில் இந்த கிராமத்தில் குழந்தைகளே கிடையாதாம் என்கிறார் அயனோ. இப்படி குறைந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு டோக்கியோவுக்கு வெளியில் உள்ள பகுதிகளை புதுப்பிக்கவும் அரசாங்கம் நிறைய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளது. மனிதர்களே இல்லாமல் பொம்மைகள் மட்டுமே வாழும் சூழல் வந்தால் கூட அதிசயப்பதற்கில்லை.No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்