வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest News. Show all posts
Showing posts with label Latest News. Show all posts

Tuesday, August 20, 2019

ஒரு வருஷத்துல 2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..? அப்ப மத்தவங்களுக்கு.. ?

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் மீண்டும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருப்பது போலத் தான் தெரிகிறது. இந்த வேலை இழப்புப் பிரச்னை ஆட்டோமொபைல் துறையில் தொடங்கியதை கண் கூடாகப் பார்த்தோம். மற்ற துறைகளில்..? வங்கி, 

 

இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல், லாஜிஸ்டிக்ஸ், உள் கட்டமைப்புத் துறை என பல துறை சார் நிறுவனங்கள் வழக்கத்தை விட குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என கேர் ரேட்டிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது.
 இந்த விவரங்களை சுமாராக 1,000 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளில் இருந்து திரட்டி இருக்கிறார்களாம். இந்தியாவின் சேவைத் துறை தான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுத்து இருக்கிறார்களாம்


 இமேஜ் பிரச்னை
 இப்படி வழக்கத்தை விட குறைவாக ஆட்களை வேலைக்கு எடுப்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் 2019 காலாண்டில் வளர்ச்சி சரிந்திருப்பதற்கும், நுகர்வோர் தேவை குறைந்திருப்பதற்கும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறதாம். பிரதமர் நரேந்திர மோடிக்கோ, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்னையால், சர்வதேச அளவில் முதலீடு செய்யத் தக்க நாடாக இருக்கும் இந்தியாவின் இமேஜ் பெரிய அளவில் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

 2017 - 18-ல்.

 இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு கடந்த மார்ச் 2017-ல் 54.4 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 2018 முடிவில் இந்த எண்ணிக்கை வெறும் 57.8 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறது. ஆக சுமாராக 6.2 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் கடந்த 2017 முதல் 2018 வரையான ஒரு வருடத்தில் அதிகரித்து இருக்கின்றன என திடுக்கிடும் தகவலைச் சொல்லி இருக்கிறது கேர் ரேட்டிங் அமைப்பு

 தற்போதைய நிலை 

 அதை விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? மார்ச் 2019-ல் நிலவரப்படி இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு வெறும் 60.3 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறதாம். அதாவது மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரையான ஒரு வருடத்தில் சுமாராக 4.3 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. ஆக கண் முன்னே வேலை வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு இருப்பதை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது. உற்பத்திப் பிரச்னை

 உற்பத்திப் பிரச்னை

 இரும்பு, ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார் வேலைகளில் உற்பத்தி குறைந்து இருப்பதாலும், வங்கி சார் கடன் பிரச்னைகளாலும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதாம். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறைகளில் பணியாளர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் என்கிற பெயரில் செலவை அதிகரித்துக் கொள்ள விரும்பாமல், அவுட் சோர்ஸிங் செய்வது அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறதாம்.
 வங்கிகள்

 இந்த வேலை இழப்பு பிரச்னைகளில் வங்கிகளும் தப்பவில்லை. வங்கிகளில் கூட தங்கள் வேலைகளைச் செய்து கொடுக்க, வேறு ஒரு நிறுவனத்திடம் அவுட் சோர்ஸ் செய்வது, இருக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் வேலையில் இருந்து நீக்குவது என பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே தன இருக்கிறார்களாம். அதையும் தாண்டி பல பலவீனமான அரசு வங்கிகளில் புதிதாக ஆட்களை எடுப்பதற்கும் தடை விதித்து இருக்கிறார்களாம்.

.

Wednesday, July 03, 2019

வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

உலகம் முழுவதும் மக்கள் வித்தியாசமான பழக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சீனா, ஜப்பான் நாடுகளில் அரசின் ஒரு குழந்தை திட்டத்தால் மக்கள் தங்கள் வயசான காலத்தில் கூட வேலை செய்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.




இதனால் மக்கள் தொகையும் குறைய ஆரம்பிக்கிறது. புவியியல் புள்ளி விவரங்களின் படி கிராமப்புற மற்றும் மலைப் பிரதேச பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகத்தான் காணப்படும்.

அப்படிப்பட்ட ஒரு அதிசய கிராமம் தான் இது. அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா? இங்கு மக்களை விட பொம்மைகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.



சிறிய கிராமம்
 நாகோரோ என்ற சிறிய கிராமம் மேற்கு ஜப்பானின் மலைகளில் அமைந்துள்ளது. இங்கே சென்று நீங்கள் பார்த்தால் ஒரு தெருவில் கூட ஆள் நடமாட்டத்தை பார்க்க முடியாது.

அந்தளவுக்கு தெருவே வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்ததாக கூறுகின்றனர். ஆனால் தற்போது இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 27 மட்டுமே.





தனிமையை போக்க  
எனவே கிராம மக்களிடையே உள்ள தனிமையை போக்க , அவர்களுள் ஒருவரான சுகிமி அயனோ என்பவர் மனித அளவிலான சில பொம்மைகளை தெருக்களில் வைக்க முடிவு செய்தார்.





இதன் படி பார்த்தால் 69 வயதான பொம்மை தயாரிப்பாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக பொம்மைகளைச் செய்து வைத்து வருகின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால் தற்போது மக்களை விட பொம்மைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது தான்.



முதல் பொம்மை
பொம்மை தயாரிப்பாளர் 16 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய முதல் பொம்மையை தயாரிக்கும் போது அந்த பொம்மைகளுக்கு என் தந்தையின் ஆடைகளை அணிவித்தேன்.





 மேலும் எங்கள் தோட்டத்தில் வளர்க்கின்ற உணவுகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற ஒரு பயமுறுத்தும் காக்கை பொம்மையை தயாரித்து அங்கே நிப்பாட்டினேன் என்கிறார்.
தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் 
இந்த பொம்மைகளைத் தயாரிக்க மரக் குச்சிகள் மற்றும் நியூஸ் பேப்பர் போதுமானது. எலாஸ்டிக் போன்ற துணிகள் பொம்மையின் முகத்தை செய்வதற்கும், கூந்தலுக்கு உல்லன் நூல்களையும் பயன்படுத்துகிறேன்.





 இதை பார்த்தால் அச்சு அசல் அப்படியே மனிதர்கள் போன்றே இருக்கும். உதட்டிற்கும் மற்றும் கன்னத்திற்கும் பிங்க் கலர் லிப்ஸ்டிக் கொண்டு மேக்கப்பும் செய்துள்ளேன். இது அந்த பொம்மைகளுக்கு ஒரு இயற்கையான அழகை தருகிறது.



ரெடியா? 
 என்னங்க இந்த கிராமத்துக்கு போக நீங்க ரெடியா? அப்போ ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் உங்களை வரவேற்க பொம்மைகளும் தயாராக இருக்கிறது.


குழந்தைகளே இல்லை 
இந்த கிராமத்தில் சிறிய வயதினர் என்றால் 55 வயது ஒருத்தர் தானாம். ஏனெனில் இந்த கிராமத்தில் குழந்தைகளே கிடையாதாம் என்கிறார் அயனோ. இப்படி குறைந்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு டோக்கியோவுக்கு வெளியில் உள்ள பகுதிகளை புதுப்பிக்கவும் அரசாங்கம் நிறைய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளது. மனிதர்களே இல்லாமல் பொம்மைகள் மட்டுமே வாழும் சூழல் வந்தால் கூட அதிசயப்பதற்கில்லை.



Wednesday, May 29, 2019

கல்விக் கட்டணம் கட்டாத மாணவன் கையில் முத்திரை குத்தி அனுப்பிய ஆசிரியர்

பஞ்சாப் மாநிலத்தில் கல்விக் கட்டணம் கட்டாத மாணவனின் பெற்றோருக்கு நினைவூட்டும் வகையில், மாணவனின் கையில் முத்திரை குத்தி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள எஸ்டிஎன் எனும் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஹர்ஸ்தீப் சிங். இவனது கல்விக் கட்டணம் செலுத்தப்படாததால், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பெற்றோருக்கு நினைவுபடுத்தி உள்ளது.


 ஆனால் பெற்றோரால் உரிய நேரத்தில் கல்விபள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.


 பரீட்சை ஹாலில் எதுவும் கொண்டு செல்லாத தன் மகன் கையில் ரப்பர் ஸ்டாம்ப் அடித்தது சரியல்ல என்று அவர் கூறினார். ஆனால், மாணவன் தந்தையை பள்ளி ஆசிரியர்கள் குறை கூறினர்.

இதுபற்றி பள்ளி முதல்வர் கூறுகையில், “கல்வி கட்டணத்தை செலுத்தும்படி பலமுறை மாணவனின் டைரியில் ஆசிரியர் எழுதி அனுப்பி உள்ளார். ஆனால் மாணவன் அதை பெற்றோரிடம் காட்டவில்லை.


இப்போது மாணவன் கேட்டுக்கொண்டதால்தான் ரப்பர் ஸ்டாம்ப் அடித்து அனுப்பியிருக்கிறார். வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் காட்டிவிட்டு, கையை கழுவி ரப்பர் ஸ்டாம்பை அழித்துவிடும்படி கூறி உள்ளார். ஆனால், அவனது பெற்றோர் பிரச்சனையை திசைதிருப்பிவிட்டனர்” என்றார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி முதல்வரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்ஸ்தீப் சிங், தேர்வு எழுத சென்றபோதும் கல்விக் கட்டணத்தை கட்டும்படி கூறியுள்ளார்.
 அத்துடன், பெற்றோருக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், மாணவனின் கையில் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் முத்திரை குத்தி உள்ளார். 
அதில், தயவு செய்து கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள் என எழுதப்பட்டிருந்தது. ஆசிரியரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

பலமுறை கூறியும் கல்விக் கட்டணத்தை செலுத்தாததால் பெற்றோருக்கு மீண்டும் நினைவு படுத்தும் வகையில் இவ்வாறு செய்ததாகவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.