வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒரு வருஷத்துல 2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..? அப்ப மத்தவங்களுக்கு.. ?

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 20, 2019

ஒரு வருஷத்துல 2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..? அப்ப மத்தவங்களுக்கு.. ?

இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் மீண்டும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருப்பது போலத் தான் தெரிகிறது. இந்த வேலை இழப்புப் பிரச்னை ஆட்டோமொபைல் துறையில் தொடங்கியதை கண் கூடாகப் பார்த்தோம். மற்ற துறைகளில்..? வங்கி, 

 

இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல், லாஜிஸ்டிக்ஸ், உள் கட்டமைப்புத் துறை என பல துறை சார் நிறுவனங்கள் வழக்கத்தை விட குறைவாகவே ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என கேர் ரேட்டிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது.
 இந்த விவரங்களை சுமாராக 1,000 நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளில் இருந்து திரட்டி இருக்கிறார்களாம். இந்தியாவின் சேவைத் துறை தான் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுத்து இருக்கிறார்களாம்


 இமேஜ் பிரச்னை
 இப்படி வழக்கத்தை விட குறைவாக ஆட்களை வேலைக்கு எடுப்பதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் 2019 காலாண்டில் வளர்ச்சி சரிந்திருப்பதற்கும், நுகர்வோர் தேவை குறைந்திருப்பதற்கும் ஒரு காரணமாக அமைந்து இருக்கிறதாம். பிரதமர் நரேந்திர மோடிக்கோ, இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்புப் பிரச்னையால், சர்வதேச அளவில் முதலீடு செய்யத் தக்க நாடாக இருக்கும் இந்தியாவின் இமேஜ் பெரிய அளவில் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.

 2017 - 18-ல்.

 இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு கடந்த மார்ச் 2017-ல் 54.4 லட்சமாக இருந்தது. ஆனால் கடந்த மார்ச் 2018 முடிவில் இந்த எண்ணிக்கை வெறும் 57.8 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறது. ஆக சுமாராக 6.2 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் கடந்த 2017 முதல் 2018 வரையான ஒரு வருடத்தில் அதிகரித்து இருக்கின்றன என திடுக்கிடும் தகவலைச் சொல்லி இருக்கிறது கேர் ரேட்டிங் அமைப்பு

 தற்போதைய நிலை 

 அதை விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா..? மார்ச் 2019-ல் நிலவரப்படி இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பு வெறும் 60.3 லட்சமாகத் தான் அதிகரித்து இருக்கிறதாம். அதாவது மார்ச் 2018 முதல் மார்ச் 2019 வரையான ஒரு வருடத்தில் சுமாராக 4.3 சதவிகிதம் தான் வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றன. ஆக கண் முன்னே வேலை வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டு இருப்பதை பகிரங்கமாகப் பார்க்க முடிகிறது. உற்பத்திப் பிரச்னை

 உற்பத்திப் பிரச்னை

 இரும்பு, ஸ்டீல் மற்றும் சுரங்கம் சார் வேலைகளில் உற்பத்தி குறைந்து இருப்பதாலும், வங்கி சார் கடன் பிரச்னைகளாலும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதாம். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறைகளில் பணியாளர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் என்கிற பெயரில் செலவை அதிகரித்துக் கொள்ள விரும்பாமல், அவுட் சோர்ஸிங் செய்வது அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறதாம்.
 வங்கிகள்

 இந்த வேலை இழப்பு பிரச்னைகளில் வங்கிகளும் தப்பவில்லை. வங்கிகளில் கூட தங்கள் வேலைகளைச் செய்து கொடுக்க, வேறு ஒரு நிறுவனத்திடம் அவுட் சோர்ஸ் செய்வது, இருக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அல்லது செயல்பாடுகள் அடிப்படையில் வேலையில் இருந்து நீக்குவது என பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டே தன இருக்கிறார்களாம். அதையும் தாண்டி பல பலவீனமான அரசு வங்கிகளில் புதிதாக ஆட்களை எடுப்பதற்கும் தடை விதித்து இருக்கிறார்களாம்.

.

No comments:

Post a Comment