Run World Media: 01/07/19

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 7, 2019

எனக்கு கல்யாணமா? சொல்லவே இல்லை: ஸ்ருதி ஹாஸன்

தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்து கலாய்த்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். 

நடிகை ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். ஸ்ருதி லண்டன் சென்று அவரை பார்ப்பதும், அவர் இந்தியா வருவதுமாக உள்ளனர். இந்நிலையில் ஸ்ருதி புதுப் படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


திருமணம் 

ஸ்ருதி ஹாஸன் ஹலோ சகோ என்கிற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அது தவிர அவர் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. அவர் மைக்கேலை திருமணம் செய்து கொள்ளப் போவதால் தான் படங்களில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின.


கலாய் 

தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்த ஸ்ருதி ஹாஸன் அப்படியா, சொல்லவே இல்லை என்பது போன்று கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.


சமூக வலைதளம்

ஸ்ருதி ஹாஸன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மைக்கேல் கார்சேலுடன் வெளிநாட்டில் கொண்டாடினார். மைக்கேலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது.


விருப்பம்  

ஸ்ருதி மைக்கேல் அருகில் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். அவர் மைக்கேலையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

தல, தளபதி ரசிகர்களை ஒன்று சேர்த்த விஜயகாந்த்

விஜயகாந்த் விஷயத்தில் மட்டும் தல, தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். 

நிஜ வாழ்க்கையில் அஜித்தும், விஜய்யும் மட்டும் அல்ல அவர்களின் குடும்பத்தாரும் நண்பர்களாக உள்ளனர். இது தெரிந்தும் கூட சமூக வலைதளங்களில் தல, தளபதி ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவர்கள் சண்டை போடுவதற்காக ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டாக்கிவிடுகிறார்கள். அந்த ஹேஷ்டேகுகளுக்கு அர்த்தம் புரியாமல் வெளிநாட்டவர்கள் குழம்பிய சம்பவம் எல்லாம் நடந்துள்ளது.
பலனில்லை 

சமூக வலைதளங்களில் இப்படி மோத வேண்டாம் என்று பலர் கூறியும் அஜித், விஜய் ரசிகர்கள் கேட்கவில்லை. இந்த சண்டை ஓயவே ஓயாத சண்டை என்று முடிவுக்கு வந்துவிட்டனர் நெட்டிசன்கள். அந்த அளவுக்கு தினம் தினம் மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் ஒன்று சேர்ந்த அதிசயங்கள் அவ்வப்போது நடக்கும். அந்த அதிசயம் தற்போது நடந்துள்ளது.
அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது


விஜயகாந்த்

அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது ! என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட் செய்ததை பார்த்து தான் தல, தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
கேப்டன்

உடல்நலம் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என்று அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கேப்டன் விஷயத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.


அஜித் ரசிகர்கள்  

விஜயகாந்த் விரைவில் பழைய பன்னீர்செல்வமாக ஊர் திரும்ப வேண்டும் என்பதே அஜித், விஜய் ரசிகர்களின் விருப்பம். விஜயகாந்த் நலம்பெற வேண்டும் என்று அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் பிரார்த்தனை செய்கிறார்கள். அது தான் கேப்டனின் சிறப்பு.

திருடிய காருக்குள் மாட்டிக் கொண்ட திருடன்.. தைரியமாக உதவிக்கு போலீசையே அழைத்த சம்பவம்!

எதிர்பாராதவிதமாக காருக்குள் சிக்கிக் கொண்ட திருடன் ஒருவன், உதவிக்கு போலீசையே அழைத்த சுவாரஸ்யமான சம்பவம் நார்வேயில் நடந்துள்ளது. 


சமீபத்தில் போலீஸ் துரத்தியதால் கிணற்றில் குதித்து தப்பிக்க நினைத்த திருடனை, சில நாட்களுக்குப் பின் போலீசாரே மீட்டு கைது செய்த சம்பவம் நம் நினைவில் இருக்கலாம். இதே போன்ற சம்பவம் ஒன்று நார்வேயிலும் நடந்துள்ளது. இங்கு கிணறு என்றால் அங்கு கார்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

நார்வேயின் ட்ரோந்தலக் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றைத் திருட முயற்சித்துள்ளார் 17 வயதான இளைஞர் ஒருவர். ஆனால், எதிர்பாராதவிதமாக கார் லாக் ஆனதால் அவர் உள்ளேயே சிக்கிக் கொண்டார். 

காருக்குள்ளேயே இருந்தால் மூச்சுத் திணறி செத்துப் போவோமோ என அஞ்சிய அத்திருடன் உடனடியாக போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளார். விரைந்து வந்த போலீசாரும் அந்த இளைஞரை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், அவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்து, இனி இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் - பணத்தை பத்திரப்படுத்துங்க மக்களே

மூன்று வங்கிகள் இணைப்பைக் கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 


இதனால் இரண்டு நாட்களுக்கு வங்கி பணிகள், ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பணத்தை எடுத்து வைத்துக்கொள்வத நள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கைவிட வலியுறுத்துவதுடன் 12 அம்ச கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் சுமார் 11 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.


பாங்க் ஆப் பரோடா வங்கியும் ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக மும்பை பங்குச்சந்தைக்குத் தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களில் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐடிபிஐ, பேங்க் ஆஃப் பரோடா, அலாகாபாத் வங்கி ஆகிய வங்கிகள், மும்பை பங்குச் சந்தைக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. அதில் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் பெடரேஷன் ஆகியவை வரும் 8,9ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், வங்கிச்சேவை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மாதம் 21, 26ஆம் தேதி இரு நாட்களில் 9 வங்கி சங்கங்கள், வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால், கோடிக்கணக்கிலான வங்கிப்பரிவரித்தனை பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎஃப், எஸ்இடபிள்யுஏ என மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களும் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை காலை முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால், அவசர வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய உள்ளவர்கள் இன்று மாலைக்குள் ஏடிஎம்மில் பணம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

கல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்!

கல்யாணம் ஆன பெண் எஸ்ஐ-யின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி தாலி கட்ட முயன்ற போலீஸ் இப்போது புழலில் கம்பி எண்ணி கொண்டுள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை. 24 வயதாகிறது. நுங்கம்பாக்கம் போலீஸ் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். 

இதற்கு முன்பு இவர் காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு ஊர் காவல் படை காவலராக கூடவே வேலை பார்த்தவர் பாலசந்திரன். இவருக்கு மணிமேகலையை பிடித்து போகவே அடிக்கடி சந்தித்துபேசி வந்திருக்கிறார். கொஞ்ச நாளில் பாலசந்திரனுக்கு மணிமேலை மீது ஒருதலை காதல் பிறந்தது.


கண்டித்த மணிமேகலை  

தன் காதலை மணிமேகலையிடம் சொல்லாமலே வந்துள்ளார். ஆனால் சிறிது நாளில் மணிமேகலைக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை எத்தனையோ முறை மணிமேகலை கண்டித்து சொல்லிவிட்டார். ஆனால் பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை.


காதல் டார்ச்சர்  

அதனால் நேற்று டியூட்டியில் மணிமேகலை இருந்தபோதும் போன் செய்து "காதல் டார்ச்சர்" தந்தார் பாலச்சந்திரன். இதனால் நேரில் வரவழைத்து வார்னிங் கொடுக்கலாம் என்று மணிமேகலை எழும்பூருக்கு பாலச்சந்திரனை வரவழைத்தார். பாலச்சந்திரனும், மணிமேகலை கூப்பிட்டதும் என்னவோ ஏதோ என்று கற்பனை பண்ணிக்கொண்டு ஓடிவந்தார்.


கழுத்தில் கத்தி  

அப்போது மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு காதலில் விருப்பம் இல்லை என்றும், ஏற்கனவே கல்யாணம் ஆனதை பற்றியும் சொல்லி எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார். பிறகு திடீரென பாலசந்திரன் ஒரு பக்கம் மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு, மற்றொரு கையில் தாலி எடுத்து கட்ட போனார்.


புழலில் அடைப்பு

இதை பார்த்ததும் பதறிபோன மணிமேகலை கூச்சல் போட்டதும், போலீசார் விரைந்து சென்று பாலசந்திரனை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் ஸ்டேஷனில் புகாரும் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன், புழல் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

இதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க!

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் வகையில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியை ஹாக்கி மட்டையால் கணவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


விதவிதமாக உடை அணிவதில் பெண்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதிலும் சமீபகாலமாக பாம்பு மற்றும் புலி போன்ற பிரிண்டிங்கில் ஸ்டாக்கிங்ஸ் அணியும் வழக்கம் அவர்களிடம் அதிகரித்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால், அப்படி ஆசையாக உடையணிந்து, கணவரிடம் அடி வாங்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலியாவில் ஒரு மனைவி. அப்பெண்ணின் மற்றும் அவரது கணவரின் பெயர் ஊடகங்களில் வெளியாகவில்லை. ஆனால், அவரது அடிபட்ட கால் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சம்பவத்தன்று பாம்பு போன்ற டிசைன் கொண்ட ஸ்டாக்கிங்ஸ் அணிந்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார் மனைவி. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால், இரவில் அறைக்குள் வந்த கணவர், கட்டிலில் இரண்டு பாம்பு கிடக்கிறது என தவறாக நினைத்து விட்டார். உடனடியாக அருகில் இருந்த பேஸ்பால் பேட்டால் அந்த பாம்புகளை, அதாவது மனைவியின் காலில் பலமாகத் தாக்கியுள்ளார். வலியில் மனைவி அலறியபோது தான் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது. தற்போது காலில் பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்கள் ஸ்டாக்கிங்ஸ் என்பது காலில் இருந்து தொடை வரை அணியும் உடை என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை என் ஜாடையில் இல்லை.. யாருக்கோ பிறந்தது.. சந்தேக வெறியில் தந்தை செய்த கொடூர கொலை!

"குழந்தைக்கு என் ஜாடையில இல்லை... இது எவனுக்கோ பிறந்த குழந்தை" என்று சந்தேகம் மண்டைக்கேறிய பெற்ற தகப்பன், அந்த குழந்தையை அரிவாளால் கொன்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி கார்த்திகேயன் - ராஜேஸ்வரி. இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. 

கடந்த அக்டோபர் மாதம்தான் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் சர்வேஸ்வரன். எப்பவுமே புருஷன்-பொண்டாட்டிக்குள் சண்டை இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக ராஜேஸ்வரி மீது கார்த்திகேயனுக்கு நிறைய சந்தேகம். இந்த சந்தேகம்தான் பெற்ற குழந்தைவரை வன்மம் வர காரணமாக அமைந்துவிட்டது.


அதிக வெறுப்பு 

5 வருஷம் கழித்து குழந்தை பிறந்தாலும், அதன்மீது ஒருவித வெறுப்பு காட்டி கொண்டே இருந்தார் கார்த்திகேயன். குழந்தை தன் ஜாடையில் இல்லை என்று சொல்லி இதைவைத்தும் தம்பதிக்குள் சண்டை நீடித்து வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமான வெறுப்பு அடைந்த கார்த்திகேயன் குழந்தையை கொல்லவே துணிந்துவிட்டார்.


அரிவாளால் வெட்டினார்  

நேற்றுமுன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்த கார்த்திகேயன் திடீரென எழுந்து, பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த பெற்ற குழந்தையை அரிவாளை கொண்டு வெட்டி கொலை செய்தார். இதில் குழந்தைதயின் உடல் துண்டு துண்டாக சிதறியது. இதை பார்த்து ராஜேஸ்வரி அலறி துடித்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தப்ப முயன்ற கார்த்திகேயனை சுற்றி வளைத்து பிடித்து வாணாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.


எவனுக்கோ பிறந்தது 

"என் மனைவி மேல எனக்கு ஏற்கனவே நிறைய சந்தேகம் இருந்தது. அதனால் இந்த குழந்தை எனக்கு பிறந்திருக்காது என்று தோன்றியது. எவனுக்கோ பிறந்த குழந்தை, நாளைக்கு என்னை நாளை அப்பான்னு கூப்பிடுவதை என்னால ஏத்துக்க முடியாது.


விறகு வெட்டும் அரிவாள்  

அதனால் அவனை கொன்னுடலாம்னு முடிவு பண்ணேன். இதை என் மனைவி, அப்பா கிட்ட கூட சொன்னேன். ஆனால் நான் கிண்டல் செய்றதா அவங்க நினைச்சிட்டாங்க. ஒரு கட்டத்துல ஆத்திரம் அதிகமாகி, வீட்டுல விறகு வெட்ற அரிவாளை எடுத்து குழந்தையை வெட்டி கொலை செய்துவிட்டேன்" என்றார். இதையடுத்து கார்த்திகேயனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.


முகஜாடை 

பொதுவாக குழந்தை பிறந்தால், குறைந்தது 6 மாசத்துக்கு முக ஜாடை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் பிறந்து 3 மாசம்தான் ஆகுது, அதுக்குள்ள எப்படி முகஜாடை தெரியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பச்சை குழந்தையை இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா?

திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற தகவலுக்கு நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.

‘களவாணி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே, காஞ்சனா-3 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். இதே நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற நடிகர் ஆரவ்வுடன் காதல் வயப்பட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால் ஆரவ்வோ ஓவியாவை காதலிக்கவில்லை என்று மறுத்தார். இதனால் காதல் தோல்வியில் ஓவியா பிக்பாஸ் அரங்கில் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்காமல் ஓவியா வெளியேறினார்.

இந்த நிலையில் சில வாரங்களாக ஆரவ்வும் ஓவியாவும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். புத்தாண்டையொட்டியும் நெருக்கமாக செல்பி எடுத்து வெளியிட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் ஏற்பட்டு உள்ளதாகவும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் தகவல் பரவியது.

இதற்கு ஓவியா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கும் ஆரவ்வுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. இப்போது சமாதானமாகி விட்டோம். நானும் ஆரவ்வும் திருமணம் செய்து கொண்டோம் என்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறோம் என்றும் தகவல்கள் பரவுகின்றன. அதில் உண்மையில்லை. அப்படி ஏதாவது இருந்தால் நாங்களே சொல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75: டிக்கெட் விற்பனைக்காக பலூனில் பறந்த இளையராஜா, விஷால்!

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையை நடிகர் விஷால் மற்றும் இளையராஜா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். 


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பணியை பாராட்டி விழா எடுக்கப்படுகிறது. இளையராஜாவை கவுரவிக்கும் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியை, தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இளையராஜா 75 விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கப்பட்டது. சென்னையை அடுத்த மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் நடைபெற்று வந்த 5வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்தனர். பின்னர் இளையராஜா மற்றும் விஷால் ஆகியோர் ராட்சத பலூனில் பறந்து இளையராஜா 75 டிக்கெட் விற்பனைக்காக புரோமோஷன் செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் வானில் பறந்தனர்.

என் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டதால் கணவரை பிரிந்தேன்: நடிகை பரபரப்பு பேட்டி

கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை நடிகை ப்ரியங்கா தற்போது தெரிவித்துள்ளார். 


வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் நடிகையானவர் ப்ரியங்கா. கேரளாவை சேர்ந்த அவர் தொ(ல்)லை பேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த சீமையிலே, தீயோர்க்கு அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தவிர அவர் மலையாள படங்கள், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


திருமணம் 

ப்ரியங்காவும், இயக்குனர் லாரன்ஸ் ராமும் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சென்னையில் வசித்து வந்த ப்ரியங்கா பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை. இதற்கிடையே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றார்.


விவாகரத்து 

2015ம் ஆண்டு ப்ரியங்கா விவாகரத்து கோரினார். லாரன்ஸ் ராம் தனது சமூக வலைதள பக்கங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் ஒரு வழக்கு தொடர்ந்தார். ப்ரியங்கா தனது மகன் முகுந்த் ராமுடன் வாமனாபுரத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார்.


பிசி  

மலையாள படங்களில் அவர் பிசியாகிவிட்டார். காதல் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை ப்ரியங்கா தற்போது தெரிவித்துள்ளார். லாரன்ஸ் தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டாராம். மேலும் ப்ரியங்காவை படங்களில் நடிக்கவும் தடை விதித்தாராம். இந்த காரணங்களுக்காக தான் ப்ரியங்கா லாரன்ஸ் ராமை பிரிந்தாராம்.


சினிமா 

எனக்கு நடிக்க மட்டும் தான் தெரியும். தெரிந்த விஷயத்தை செய்யக் கூடாது என்று லாரன்ஸ் கூறியது எனக்கு பிடிக்கவில்லை என்று ப்ரியங்கா தெரிவித்துள்ளார். மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை லாரன்ஸ் வெளியிட்டது குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்