Run World Media: 04/18/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 18, 2019

அதிகமா வியர்க்குதா?... அப்ப கண்டிப்பா இத பண்ணுங்க.!கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும். வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்படுத்தும்.


கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.


கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.


உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.
அதிக அளவு சோப்புகளையும் கோடைகாலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.
கோடைகாலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம் தான்.


வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும். வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும்.


கோடைகாலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.
வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.
வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலைக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடைகாலத்தில் அதிகம் வியர்க்கும்.


இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. கோடைகாலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைப்பதோடு பாக்டீரியாக்களையும் ஒழிக்கும்.

Zee Tamil சேனல் வராது.... ஒளிபரப்பை நிறுத்தும் ஜி தமிழ்..! அதிர்ச்சியில் மக்கள்... காரணம் இதுதான்?தமிழகத்தை பொறுத்தவரை தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே மிக குறைவாக உள்ளது. அதை போன்று தொலைக்காட்சியை பார்க்காதவர்கள் மிகவும் சொற்பமாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெரியவர்கள் தான் தொலைக்காட்சி தொடர்களை அதிக அளவில் பார்ப்பார்கள்.


தற்போது இளைய தலைமுறையினர் அதிக அளவில் தொலைக்காட்சி தொடர்களை பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பல முன்னணி தொலைக்காட்சிகளும், விளம்பரங்களுக்காக சீரியல்களை எடுத்து நல்ல வருமானம் சம்பாதித்து வருகிறது. இதில் பல தொலைக்காட்சி நிறுவங்கள் ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


தொலைக்காட்சியை நிறுவனங்களுக்குள்ளேயே பல போட்டிகள் நடைபெறுகிறது. இப்படி இருக்கும் நிலையில், சில மணி நேர ஒலிபரப்பு நிறுத்தி வைத்தால், எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்?அப்படியான ஒரு முடிவை ஜி தமிழ் நிறுவனம் எடுத்துள்ளது. அதிக அளவில் பார்க்கப்படும் நம்பர் ஒன் சானாலாக இருக்கும் ஜீ தமிழ் நிறுவும் ஒளிபரப்பு நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு காரணம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


எனவே அன்றைய தினம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக காலை 8 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பை நிறுத்தி வைக்க ஜீ தமிழ் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்