வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-04-21
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 02, 2019

தோனியுடன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை அணி




இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதி வார லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 லீக் போட்டி சென்னை M.A.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. 



இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் விளையாடத கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா மீண்டும் அணியில் இணைந்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.



அதன் படி முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கிறனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருவரும் தடுமாறிய நிலையில் ஓன்பது பந்து சந்தித்த வாட்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா சிற்ப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 



பாப் டு ப்ளஸிஸ் மற்றும் ரெய்னா இருவரும் நிலையான பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்துனர். ப்ளஸிஸ் 39 ரன்னில் அக்ஷார் படேல் ஓவரில் அவுட் ஆக அதன் பின்னர் கேப்டன் தோனி களம் இறங்கினர். மறுமுனையில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை வீளாசிய ரெய்னா அரைசதம் அடித்தார். சுரேஷ் ரெய்னா 59 ரன்னில் சுஜித் பந்தில் அவுட் ஆகினார். 



இதை அடுத்து களம் இறங்கிய ஜடேஜா அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஜடேஜா 10 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆக கடைசி ஓவர்களில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தினார் மகேந்திர சிங் தோனி. சிக்ஸர்கள் விளாசிய தோனி 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். சென்னை அணி முதல் 13 ஓவர்கள் 85 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் கடைசி ஆறு ஓவரில் 94 ரன்கள் குவித்தனர்.



சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்கத்திலேயே பிரித்திவ் ஷா 4 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகார் தவண் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.



அதிரடியாக விளையாடிய தவண் 19 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆக ஆட்டத்தின் திசையே மாறியது. அடுத்து வந்த ரிஷப் பன்ட் 5 ரன்னிலும் இங்ரம் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆக அதன் பின்னர் வந்த அக்ஷார் படேல், ரூதர்போர்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.



கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் 44 ரன்கள் அடிக்க டெல்லி அணி 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சென்னை அணியில் தாஹிர் 4, ஜடேஜா 3, தீபக் சஹார் மற்றும் ஹர்பஜன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.


ஆபரேஷன் செய்து உடல் எடையை குறைத்த சிம்பு – வேற லெவெலில் புதிய தோற்றம்!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார் இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல், நடிக்கும் படங்களுக்கும் வெற்றியடையாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வந்தார்.

கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் படத்தில் கூட சிம்புவின் உடல் எடை குறித்து கிண்டல் செய்யப்பட்டது. ரசிகர்களும் இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதனால் சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

சிகிச்சை முடித்து இன்று நடக்கும் தனது தம்பி குறளரசன் திருமணத்திற்கு வந்துள்ளார் சிம்பு. அப்போது வெளியான இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள், உடல் எடை நன்றாக குறைந்து பழைய சிம்புவாக திரும்பியுள்ளார். சிம்பு என்ற பெயர் சில வருடங்களுக்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கியது. 

படங்கள் நடிக்காமல் இருந்தார், இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவாகவே இருந்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் மாநாடு படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது, அப்போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. வெளிநாட்டில் உடல் எடை குறைத்து பழையபடி அவர் வந்துவிட்டார் என ரசிகர்கள் சந்தோஷமாக உள்ளனர்.37 நட்களில் 13 கிலோ குறைத்துள்ளாராம் சிம்பு.


Wednesday, May 01, 2019

பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை ஒரே வார்த்தையில் ஓடவிட்ட பெண்!!



கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ய வந்த இளைஞனை சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓடவைத்துள்ளார் இளம்பெண் ஒருவர்.

மகராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்நகரைச் சேர்ந்த 29 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த மார்ச் 25ம் தேதி தனது 6 வயது மகளுடன் அங்குள்ள தர்கா அருகே நின்றிருந்த போது பைக்கில் சென்றவர்களிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 22 வயதான கிஷோர் விலாஸ் அஹ்வத் என்ற இளைஞன் இருவரையும் இறக்கி விடுவதாக கூறி தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

ஆனால் அந்த இளைஞர் இருவரையும் ஒதுக்குப்புறமான பகுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதோடு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளான்.அந்த இக்கட்டான தருணத்திலும் சமயோசிதமாக யோசித்த அப்பெண் தான் எய்ட்ஸ் (HIV) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த அந்த இளைஞர் தலைதெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளார்.

பின்னர் காவல்நிலையம் சென்ற அந்த பெண் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த இளைஞரின் அங்க அடையாளங்கள், டாட்டூ ஆகியவை குறித்து போலீசாரிடம் விளக்கியுள்ளார். அந்தப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் அஹ்வத்தை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கடத்தல், பாலியல் வன்புணர்வு முயற்சி மற்றும் POSCO ஆகிய பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் தனது தந்தையை கொலை செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், ஜாமீனில் வெளிவந்த போது இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் சமயோசிதமாக செயல்பட்டு பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பியதுடன், துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளி குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த பெண்மணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குற்றவாளி குறித்த அடையாளங்களை அவர் தெரிவித்திருந்தது அவரை பிடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் No. 1 – தெறிக்கவிட்ட தல அஜித் ரசிகர்கள்!


தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவருக்கு நாளை பிறந்தநாள், இதனால், தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பிரமாண்டமாக இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இவரின் பிறந்தநாளை டுவிட்டரில் மாலை 5 மணியளவில் #HBDIconicThalaAJITH என்ற டேக் ஆரம்பித்து கொண்டாட தொடங்கினர். ஆரம்பித்த 10 நிமிடத்தில் இந்தியளவின் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்திற்கு இந்த டேக் வந்துள்ளது. மேலும், 25 ஆயிரம் டுவிட்ஸ் அதில் இடம்பிடித்துள்ளது.


பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில் அஜித் வீட்டில் சோகம் !


மே1 என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே ஒரு விஷயம் தான் அஜித் அவர்களின் பிறந்தநாள். இந்த தினத்திற்காக தல ரசிகர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

அந்த விஷயங்களையும் நாம் அறிவித்து வந்தோம், நாளும் நெருங்கிவிட்டது, ஸ்பெஷல் DP, டாக் எல்லாவற்றையும் ரசிகர்கள் டிரண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நேரத்தில் தான் ஒரு சோக செய்தி, அதாவது அஜித்தின் அவர்களின் அப்பா சுப்பிரமணி அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

Tuesday, April 30, 2019

“பைக் சாவியை போலீஸ் பிடுங்கலாமா ?” - ஆர்.டி.ஐயில் கிடைத்த விளக்கம்


காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து தொடர்பான பல கேள்விகளை முன்வைத்திருந்தார். இந்தக் கேள்விகளுக்கு மதுரை காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில கேள்விகளையும், பதில்களையும் காணலாம்.


கேள்வி : வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய போக்குவரத்து காவலரை தவிர யாருக்கு அதிகாரம் உள்ளது ?
பதில் : பொது பாதையில் செல்லும் வாகனத்தை சீருடையில் உள்ள அனைத்து காவலர்களும் சோதனை செய்ய உரிய ஆவணங்களைக் கேட்கலாம்.

கேள்வி : போலீஸ் கைகாட்டியும் வாகனத்தை நிறுத்தவில்லை என்றால் காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் ?
பதில் : காவலர் கை காட்டி வண்டியை நிறுத்தாமல் இருந்தால் மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி : காவலர்கள் வண்டி சாவியை பிடுங்கலாமா ?
பதில் : இதுபோன்ற வார்த்தைகள் மோட்டார் வாகன சட்டத்தில் இல்லை.
கேள்வி : நடுரோட்டில் உரிமையாளரிடமிருந்து வண்டியை காவலர்கள் பரித்து வர முடியுமா ?
பதில் : யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் அளிக்க இயலாது.

கேள்வி : லைசன்ஸ் என்னென்ன குற்றங்களுக்கு போலீஸ் பறிமுதல் செய்ய முடியும் ?
பதில் : அதிவேகம் (Over Speed), சிக்னலில் நிக்காமல் செல்வது (Signal Jumping), மதுபோதையில் வாகனம் ஓட்டுவது (Drunken Drive), அதிக சுமை ஏற்றிச்செல்வது.

Monday, April 29, 2019

TN SSLC RESULTS 2019

TN 10th Result 2019


TN 10th Result 2019, Tamil Nadu SSLC Result 2019, tnresults.nic.in

The Directorate of Government Examinations (DGE) Tamil Nadu conducts the Secondary School Leaving Certificate Examination (SSLC) for Class 10 students every year.
http://www.runworldmedia.com/2019/04/10th.html


OFFICIAL WEBSITE FOR SSLC RESULT 
(Click Below Links)
www.tnresults.nic.in (Special Link)

10th பத்தாம் வகுப்பு (SSLC Result 2019) முடிவுகளை முன்கூட்டியே அறிய கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது

TN 10th Result 2019



The Directorate of Government Examinations (DGE) Tamil Nadu conducts the Secondary School Leaving Certificate Examination (SSLC) for Class 10 students every year. This year, the DGE TN have already announced the TN 10th SSLC timetable 2019. According to the TN Board SSLC Exam Timetable 2019, the exams will be conducted from 14 March up to 29 March, 2019. Students are advised to keep checking this website for more details on SSLC Result 2019 Tamil Nadu.

www.tnresults.nic.in (Special Link)

Saturday, April 27, 2019

பெண்கள் நகை அணிய காரணம் | Why Girls Wear Jewels



பல லட்சம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு இது தான் - உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு




சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது.



லண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.

பொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய NCSC பொது மக்கள் அதிகம் பயன்படுத்திய எழுத்துக்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை பார்த்தனர். இதில் “123456" என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர். 

இதற்கு அடுத்த இடத்தில் “123456789” இருந்தது. இவைதவிர “qwerty”, “password” மற்றும் “1111111” உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இவற்றுடன் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்டவையும், கால்பந்து அணிகளின் பெயர்களான லிவர்பூல், செல்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. 

பொதுவான பாலஸ்வேர்டுகளை சூட்டுபவர்களில் பலர் ப்ளின்க் 182 (Blink-182) என்ற பாஸ்வேர்டையும் பயன்படுத்தியிருக்கின்றனர். பாஸ்வேர்டுகளில் பிரபல பெயர்கள் அல்லது எழுத்துக்களை பயன்படுத்துவோர் மிக எளிதில் ஹேக்கர் வசம் சிக்கிவிட முடியும் என NCSC தொழில்நுட்ப இயக்குனர் இயான் லெவி தெரிவித்தார். 

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாக்க நினைப்போர் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.