வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-06-02
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 14, 2019

போலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை .......!

படித்து போலீஸ் ஆக நினைத்த சிறுவனின் கனவு கல்விக்கட்டணம் கட்ட முடியாமல் சிதைந்து போனது. மகனின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் நகை தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடுவிஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
 

 அரசு பள்ளிகளில் இலவமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் அளிக்கப்படுகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. அதிக பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

 தனியார் பள்ளிகளில் கட்டணக்கொள்ளையால் பல பெற்றோர்கள் கடன் வாங்குகின்றனர். அம்மாக்கள் நகைகளை அடகு வைக்கின்றனர். அப்பாக்கள் தகுதிக்கு மீறி கடன் வாங்குகின்றனர்.

 அதுவும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்காவிட்டால் உலகமே வெறுத்து போகிறது. கடைசியில் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற முடியலையே என்ற வேதனையில் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

நாகை நகை தொழிலாளி 
 குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொண்ட நகைத்தொழிலாளியின் பெயர் செந்தில்குமார் என்பதாகும். 35 வயதாகும் இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஜெகதீஸ்வரன் என்ற மகனும் இருந்தனர். ஆறாம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரனுக்கு காவல்துறையில் வேலை செய்ய வேண்டும் என்பது கனவு.

கல்விக்கட்டணம்
மகனின் கனவை நிறைவேற்ற தனியார் பள்ளியில் சக்தியை மீறி சேர்த்து விட்டார் செந்தில்குமார். நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சில லட்சங்கள் கடனும் இருந்தது. இருந்தாலும் மகனின் ஆசைக்காக தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கட்டணம் கட்ட முடியாமல் தவித்தார் செந்தில்குமார்.

நெருக்கடியில் தவிப்பு
பள்ளிக்கட்டணம் கட்டினால் மட்டுமே பாடப்புத்தககங்கள், நோட்டுப்புத்தகங்கள் தரப்படும் என்று மாணவன் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. உடனடியாக கல்விக்கட்டணத்தை கட்டவும் கூறினர். இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் ஸ்கூல் பீஸ் கட்டுங்க என்று பெற்றோர்களை நச்சரிக்க ஆரம்பித்தான் ஜெகதீஸ்வரன்.

கடன் நெருக்கடி 
 நகை தொழிலில் நஷ்டம் ஒருபக்கம், கடன் நெருக்கடி மறுபக்கம் என தவித்து வந்தார் செந்தில்குமார். மகனின் படிப்பிற்காக கடன் கேட்டும் யாரும் தரமுன்வரவில்லை. ஒரே மகனின் ஆசையை கூட நிறைவேற்ற முடியலையே என்று வேதனைப்பட்டார். தனது மனைவியிடமும் இதனை கூறி கவலைப்பட்டார்.

விஷம் குடித்த குடும்பம்
 படித்து போலீஸ் ஆக நினைத்த மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத வேதனை, கல்விக்கட்டணம் கட்டமுடியாத தாங்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்று முடிவு செய்தனர். மதிய உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு மூவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

 செந்தில்குமாரின் கடை உரிமையாளர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மூவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு என்ன செய்ய வேண்டும் 
அரசு பள்ளிகளில் கட்டணம் எதுவும் இன்றி இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அரசு ஆசிரியர்கள் அனுபவசாலிகள், கல்வி கற்பிக்கும் திறனும் அதிகம் கொண்டவர்கள். ஏழை மாணவர்களுக்காகவே இலவச திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் படித்து அரசு வேலைக்கு சென்றவர்கள் பலர் உள்ளனர். 

இந்த விழிப்புணர்வு பல பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. இதனை உணர்ந்தால் தனியார் பள்ளிகளில் அதிகம் கட்டணம் செலுத்தி படிக்க வைக்க ஆசைப்பட மாட்டார்கள். மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.


ஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்


ஏன் ஹெல்மட் போடல.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர் திருப்பூர்: "ஹலோ போலீஸ்கார்.. ஏன் ஹெல்மட் போடல.. ஏன் உங்க பைக்கில் நம்பர் பிளேட் இல்லை" என்று இளைஞர் ஒரு கேள்வி கேட்டு.. ஓட ஓட விரட்டி உள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர், ரெண்டு நாளைக்கு முன்னாடி, திருப்பூர் - பல்லடம் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு போலீஸ்காரர் பைக்கில் நின்று கொண்டிருந்தார். 

அவருடன் வேறு போலீஸ் ஜீப்போ, காவலர்களோ இல்லை. தன்னந்தனியாக நின்றிருந்த அவர், கணேஷை வழிமறித்து, வண்டியை ஓரங்கட்ட சொன்னார். பிறகு கணேஷிடம், ஏன் போன் பேசிக் கொண்டே வண்டியை ஓட்டுறே என்று சொல்லி.. விஷயத்துக்கு அடிபோட்டார்.


தவறு செய்யவில்லை 
 ஆனால் கணேஷோ, நான் போனே பேசவில்லையே என்று சொல்லி அந்த போலீஸ்காரருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு தன் நண்பர் சரவணன் என்பவரை கணேஷ் வரவழைத்தார். இருவரும் சேர்ந்து போலீஸ்காரரிடம் தவறு செய்யவில்லை என்று திரும்ப திரும்ப சொன்னார்கள்.


சரமாரி கேள்வி
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணேஷ், "என்னை விசாரிக்கிறீங்களே.. முதல்ல உங்க பைக்கில நம்பர் பிளேட் இல்லையே.. நீங்க ஏன் ஹெல்மட் போடல.. என்று எதிர்கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் போலீஸ்காரர் விழித்தார்.


வீடியோ 
 இதுக்கு மேல போனா, நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக பைக்கை எடுத்து பறந்தார். நடந்த சம்பவங்கள் அத்தனையும் கணேஷ், மொபைல் போனில் வீடியோ எடுத்துவிட்டு, 'வாட்ஸ் ஆப்'பிலும் பரவ விட்டார்.


சஸ்பெண்ட் 
 இந்த வீடியோவை, மாவட்ட போலீசார் விசாரித்தனர். பிறகுதான் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பதும், சில மாதங்களுக்கு முன், ஒழுங்கீன நடவடிக்கையாக, உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஸ்டேஷனில் இருந்து, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

 இப்படி பொது இடத்தில் மீண்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ராதாகிருஷ்ணனை, திருப்பூர், எஸ்பி., கயல்விழி நேற்று, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

இளம் பெண்ணுக்கு முட்டியில் நடந்த ஆபரேஷன்.. கையை வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட அப்போலோ ஊழியர்!

கண்ட கண்ட இடத்தில் கை வைத்ததும் சவுமிதாவுக்கு உயிரே போய்விடும் போல இருந்தது... ஒரு பக்கம் உயிருக்கு போராட்டம்.. மறு பக்கம் மானத்துக்கு போராட்டம்.. இரண்டிற்கும் நடுவே சிக்கி சின்னாபின்னமாக போனார் சௌமிதா! சவுமிதாவுக்கு வயசு 30. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்.




 பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கால் முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எங்கே நல்லா ஆபரேஷன் செய்வார்கள் என்று இணையத்தில் தேடினால், அப்பல்லோ ஆஸ்பத்திரி என்று தெரியவந்தது.

சுவாச கருவி
அதனால் சென்னை பெருங்குடியில் உள்ள அப்போலோவுக்கு ஆபரேஷனுக்கு போன 4 ந்தேதி வந்தார் சவுமிதா. 6 ந்தேதி ஆபரேஷன் செய்ய முடிவானது. அதற்காக இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் ஊசி போடப்பட்டது. முகத்தில் செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டது.

சவுமிதா 
 டாக்டர்கள் காலில் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அந்த அசிங்கமான செயலில் ஈடுபட்டார் அந்த ஊழியர். லேப் டெக்னீஷியனான டில்லி பாபு என்பவர், சவுமிதா தலை பக்கம் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சவுமிதா.

பாலியல் சீண்டல் 
 முகத்தில் சுவாச கருவி இருந்ததால் சவுமிதாவால் சத்தம் போட முடியவில்லை... ஸ்கிரீனுக்கு மறுபக்கம் டாக்டர்கள் இருந்ததால், இந்த கன்றாவிகளை அவர்களால் பார்க்கவும் வழி இல்லை. அந்த இளைஞனோ கண்ட கண்ட இடங்களில் கை வைத்து, இஷ்டத்துக்கு அந்த பெண்ணை சீண்டி கொண்டிருந்தான். எந்த வகையிலும் இதை தடுக்க முடியாமல் புழுவாய் துடித்து போனார் சவுமிதா.


நிர்வாகம்
ஆபரேஷன் முடிந்தது.. அந்த டாக்டர்களிடம் லேப் டெக்னீசியன் இப்படி தன்னிடம் நடந்துகொண்டார் என்று அழுதவாறே சொன்னார். ஆனால் இதை டாக்டர்கள் பெரிசாகவே எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. உடனே அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் முறையிட்டார்.


 கண்டுகொள்ளவே இல்லை.. ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்தார். போலீசும் ஆஸ்பத்திரிக்கு விசாரணைக்கு வந்தது... ஆனால் சம்பந்தப்பட்ட பெண், மன நல சிகிச்சைக்காக வந்தவர்தான் என்று நிர்வாகம் சொல்லவும் போலீசும் அமைதியாக வெளியேறிவிட்டது.


டிஸ்சார்ஜ் 
தனக்கு எந்த வகையிலும் யாராலும் உதவ அப்போலோ உதவ முன்வரவில்லை என்று தெரிய வந்த சவுமிதா.. வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கிவிட்டார். லேப் டெக்னீஷியன் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து போகமாட்டேன், டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று சொல்லி ஆஸ்பத்திரியிலேயே உட்கார்ந்துவிட்டார்.


காவல் ஆணையர்


திரும்பவும் ஆன்லைனில் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸ், பெண்ணின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்தபோதுதான் ஆபரேஷன் விஷயம் தெரிய வந்தது. போலீசாரிடம் அந்த பெண் கதறி கதறி அழுததையடுத்து, விரிவான விசாரணை அறிக்கை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


 வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கெல்லாம் மொத்தம் 6 நாட்களாகி விட்டது. கடைசியில் குடியாத்தத்தை சேர்ந்த அந்த லேப்டெக்னீஷியனை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்தது.


நியாயம்
இந்தப் பெண்ணுக்கு நடந்த அக்கிரமத்திற்கு அப்போலோ மருத்துவமனைதான் நியாயம் தேடித் தந்திருக்க வேண்டும். அந்த லேப் ஊழியரை கைது செய்ய அப்போலோதான் உதவியிருக்க வேண்டும். ஆனால் அவரைக் காக்கும் வகையில் அப்போலோ நடந்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை, அதிர்ச்சியாகவும் உள்ளது.  

Saturday, June 08, 2019

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்!

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞர்.. பெண் குரலில் பேசி வரவழைத்த கணவர்.. வெளுத்த கிராம மக்கள்! கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இளைஞரை பெண் குரலிலேயே பேசி வரவழைத்த அவரது கணவர் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து வெளுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசியும் ஆபாச என.எம்.எஸ் அனுப்பியும் வந்துள்ளார்.



அந்த பெண் பலமுறை எச்சரித்தும் மர்ம நபர் கண்டுகொள்ளாததால் இது குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே தனது மனைவியின் செல்போனுக்கு வந்த எண்ணில் தொடர்பு கொண்ட சுப்ரமணியம் பெண் குரலில் பேசி தனது வீட்டிற்கு வருமாறு அந்த நபருக்கு அழைப்பு விடுத்தார்.


இதனை உண்மை என நம்பிய அந்த நபரும் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். வீட்டில் சுப்ரமணியம் மற்றும் சிலர் இருப்பதை கண்டதும் ஓட்டம் பிடித்த மர்ம நபரை விரட்டி பிடித்த சுப்ரமணியம் மற்றும் பொதுமக்கள் அவரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம நபரின் பெயர் ராம் பிரபு (35 ) என்பதும், இவர் மீது ஏற்கனவே காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராம் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கையுடன் பேச வேண்டாம் என்றேன்... கேட்கலை கொன்று எரித்தேன் - அண்ணனின் பயங்கர வாக்குமூலம்

கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகர்கோவிலில் போட்டோ ஸ்டூடியோ ஓனரை கொன்று எரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கை உடனான கள்ளக்காதலை விட மறுத்த காரணத்தால் அந்த நபரை கொன்றதாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.


 செவ்வாய்கிழமையன்று நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையில் உள்ள கரியமாணிக்கபுரத்தில் உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

 நாகர்கோவில் உதவி எஸ்பி கோட்டார் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அந்த சுடுகாட்டிற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட நபருக்கு 30 வயதிருக்கலாம் வேறு எங்கேயோ கொன்று சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்துள்ளனர். அந்த சடலம் யாருடையது, கொலைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய 2 தனிப்படை அமைக்கப்பட்டது.


காரை வைத்து கண்டுபிடித்த போலீஸ்
கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாயமானவர்களை ஒரு தனிப்படை போலீசார் தேடிய நிலையில், மற்றொரு பிரிவு போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் சம்பவம் நடந்த நேரத்தில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து போன மர்மகாரை கண்டுபிடித்து விசாரணையை தொடங்கினர்.


போட்டோ ஸ்டூடியோ ஓனர் 
அந்த கார் வள்ளியூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் ரெசி என்பவருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள நண்பர்களைப் பார்க்கப் போன ரெசியை இரண்டு தினங்களாக காணவில்லை என்றும் கூறினர். இதனையடுத்து ரெசியின் நண்பர்கள் பக்கம் போலீசின் பார்வை திரும்பியது.

கொன்று எரித்த நண்பன் 
 ரெசியின் நண்பர் பெயர் கேத்தீஸ்வரன் என்று தெரியவந்தது. அவர் கன்னியாகுமரி அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் என்றும் விசாரணையில் தெரியவரவே, போலீசார், கேத்தீஸ்வரனை அள்ளி வந்தனர். அவர்களுக்கு அதிகம் வேலை வைக்காத அவர், ரெசியை கொன்றது தான்தான் என்று அடிக்காமலேயே ஒப்புக்கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில் கொலைக்கான காரணத்தையும் கூறினார்.

கள்ளக்காதலை விடாத நண்பன
 ரெசியும் இலங்கை தமிழர் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரெசி பின்னர் வள்ளியூரில் ஸ்டூடியோ தொடங்கினார். அவ்வப்போது கேத்தீஸ்வரன் வீட்டிற்கும் வந்து செல்வராம். இதில்தான் கேத்தீஸ்வரன் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. ரெசி தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார்.


கொன்று எரித்தோம் 
 எனது தங்கையுடன் கள்ளக்காதலை தொடர்ந்தார் ரெசி, எனக்கு தெரியாமல் பல இடங்களில் சந்தித்தனர். ஊரில் பேச்சு வரவே அசிங்கப்பட்டேன். இருவரையும் எச்சரித்தும் விடாமல் தொடர்ந்தனர். இதனால் ரெசியை கொல்ல முடிவு செய்தேன். ரம்ஜான் அன்று நாகர்கோவில் வரவழைத்து மது குடித்தோம். தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் காரிலேயே வைத்து கத்தியால் குத்தினேன். சடலத்தை எரிக்க முடிவு செய்தேன்.


கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் டாக்டர்  ஒருவரை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.





அந்த பெண் மருத்துவர் இந்த நபருடன் போராடியதோடு நாக்கையும் கடித்து துப்பியுள்ளார்.



அவர் கடித்த வேகத்தில் அந்த நபரின் நாக்கு துண்டாகிவிட்டது. நாக்கின் ஒரு துண்டை இழந்த அந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

 அப்போது அந்த பெண் மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பி ஓட முயன்ற அந்த நபரை கைது செய்தனர்.

 மருத்துவமனை ஒன்றிற்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியாமல் வாடகையை உயர்த்தும் ஹவுஸ் ஓனர்கள்!

நகரின் பல பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் மக்களிடம் அதிக வாடகை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.



 சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான மோட்டார் பம்புகளிலும் கைப்பம்புகளிலும் தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

 தனியார் தண்ணீர் லாரிகள்தான் தற்போது சென்னை மக்களின் ஆபத்பாண்டவனாக உள்ளது. அன்றாட தேவைக்கே தண்ணீர் இன்றி அல்லாடும் மக்கள் தனியார் தண்ணீர் லாரிகளில் ஒரு டேங்கர் இவ்வளவு என மொத்தமாக பேசி சம்புகளில் இறக்கி பயன்படுத்தி வருகின்றனர்.


குடியிருப்பு வாசிகளிடம் கட்டணம் 
 பல குடியிருப்புகளில் இப்படி பெறப்படும் தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இத்தனை குடம்தான் என கணக்கோடு வழங்கப்படுகிறது. டேங்கர்களில் பெறப்படும் தண்ணீருக்கான கட்டணம் குடியிருப்பு வாசிகளிடம் ஷேர் செய்து வசூலிக்கப்படுகிறது.

அத்தியாவசிய தேவைக்கும்
 வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் குடி தண்ணீர் கேன்களை வாங்கி பயன்படுத்துவது வாடிக்கைதான். ஆனால் தற்போது குளிப்பது உட்பட அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் காசுக்கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது.

புறநகர் பகுதிகளில்

இதனால் தவிப்புக்கு ஆளான மக்கள் இது சரிப்பட்டு வராது என முடிவு செய்து நகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வீடுகளை ஷிப்ஃட் செய்கின்றனர். வழக்கமாக புறநகர் பகுதிகளில் வீட்டு வாடகை குறைவாகவே இருக்கும்.

புறநகரில் வாடகை உயர்வு 
 நகர் பகுதிகளில் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு கொடுக்கும் வாடகையை விட புறநகர் பகுதியில் டபுள் பெட்ரூம் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை குறைவாகதான் இருக்கும். ஆனால் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் புறநகர் பகுதிகளிலும் வாடகை வீட்டிற்கான கட்டணத்தை வீட்டின் உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


துண்டு விழும் பட்ஜெட் 
 பட்ஜெட் போட்டு செலவு செய்யும் சென்னை மக்கள் தண்ணீர் பிரச்சனையால் அனைத்து செலவுகளும் கணிசமாக அதிகரித்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் பட்ஜெட்டில் மாதம்தோறும் துண்டு விழுந்து பெரும் நெருக்கடி ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.







காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...

நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், குடிநீரைக் கொண்டு தனது லக்சூரி காரை கழுவியதாக இந்திய அணியின் புகழ்வாய்ந்த கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.




இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வரும்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது லக்சூரி காரை குடி தண்ணீரைப் பயன்படுத்தி கழுவியுள்ளார். 

அவர் வேறுயாருமில்லை, நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான். இந்த சம்பவத்திற்காக, அவருக்கு அதிகாரிகள் அபராதம் வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த, வீடியோவை ஏஎன்ஐ ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டாலே, அதன் கூடவே அழையா விருந்தாளியாக தண்ணீர் பிரச்னையும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்னை தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.


அதிலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது குடிநீர் பிரச்னை, பூதகரமாக வெடித்துள்ளது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களுமே தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு, தண்ணீர் பிரச்னை தற்போது இந்தியா முழுவதும் தலைவிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டுள்ளது.

இதற்கு அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதேசமயம், நீர் நிலைகளை சரிவர தூர்வாறாமல், பாதுகாக்காமல் விட்டதும் இதற்கு முக்கியமாக காரணமாக இருக்கின்றன.

 இதனாலயே, பல நீர்நிலைகள் தற்போது, காய்ந்து குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரையே தங்களின் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருகின்றனர்.


சில பகுதிகளில் இதுகூட கிடைக்காமல், பிற பகுதிகளையும், தண்ணீர் லாரிகளையும் தங்களின் அன்றாட தேவைக்கான நீருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இவ்வாறு, நாடே குடி தண்ணீர் பிர்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், விராட் கோஹ்லியின் சொகுசு காரை கழுவ குடிநீர் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


விராட் கோஹ்லி ஓர் கார் பிரியர் என்பது நாம், அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், விராட்டின் கராஜில் பல லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்த தகவலை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டிருந்தது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதிலும், அவரிடத்தில் ஆடி நிறுவனத்தின் கார்களே அதிகமாக இருக்கின்றன.


இரவோடு இரவாக, போஸ்ட் ஆபீஸ், பிஎஸ்என்எல் ஆபீசில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி தபால் அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துக்கள், கருப்பு மை பூசிய அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒரு பரிந்துரையை சமர்ப்பித்திருந்தது.




தமிழகத்தை பொறுத்த அளவில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கல்வி திட்டம் அமலில் உள்ளது. ஆனால், மொழி பாடத்திட்டம் என்பது மூன்றாவது மொழியாக, ஹிந்தியையும் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற பரிந்துரையை கொண்டதாகும்.


இது ஒரு வகையில் ஹிந்தி திணிப்பு என்று கூறி தமிழகம் உள்ளிட்ட, தென் மாநில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக ஹிந்தி மட்டுமே இன்றி, வேறு பிராந்திய மொழிகளையும் விருப்ப மொழிப் பாடமாக அறிமுகம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது.

 இருப்பினும், மும்மொழி பாடத்திட்டம் என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்க கூடியது என்பதும், பிராந்திய மொழிகளை விட ஹிந்தியை தான் அதிகம் பேர் படிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும் என்ற நடைமுறை விஷயமும் இந்த பரிந்துரைக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

 இந்த நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, தபால் அலுவலகத்தின் வெளியே தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில், ஹிந்தி மொழி வாசகத்தை மட்டும் யாரோ நள்ளிரவில் கருப்பு மை பூசி அழித்துள்ளனர். 

 இதேபோன்று, அருகே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தின் வெளியே இருந்த ஹிந்தி எழுத்துக்களும் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மை பூசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதுபோன்று கருப்பு மை பூசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.


வாங்குன கடன திருப்பித் தரலைங்க, அதான் அவன் பொண்ண கொன்னுட்டேன்! அரண்டு போன அலிகார்..!

பீஃப் சாப்பிட்டாலோ அல்லது பீஃப் என்கிற பெயரை உச்சரித்தால் கூட "போட்றா அவன" என ஹிந்துத்வ தீவிரவாதிகள் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில், பீஃப் சாப்பிட்டார்கள் என்பதற்காக இறந்த முகம்மது அக்லஃப் இறந்த அதே மாநிலத்தில் தற்போது இன்னொரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.


 பூட்டுகளுக்கு பெயர் போன அலிகார் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, தப்பல் (Tappal) கிராமத்தில் அந்தக் கொடூரம் கோரமாக நடந்திருக்கிறது. வாங்கிய 10,000 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை என, கடன் வாங்கியவரின் 2.5 வயது குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள் கடன் கொடுத்த காட்டு மிராண்டிகள்.

என்ன பிரச்னை 
 ஒரு அழகிய குடும்பம். அந்த குடும்பத்துக்கு மேலும் அழகு சேர்க்க ஒரு குட்டி இளவரசியாக ஒரு 2.5 வயது பெண் குழந்தை. மிக அளவான சம்பாத்தியம், சின்ன வேலை, செல்லக் குழந்தை என சிறிய உலகத்தில் வாழும் குடும்பம். இந்த குடும்பத்துக்கு ஏதோ ஒரு அவசர தேவைக்காக பக்கத்து வீட்டுக் காரர்களான சஹித் மற்றும் அஸ்லாமிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள்.

அப்புறம் தருகிறேன் 
 சரி ஏதோ அவசரத்தில் கேட்கிறார்கள் என்பதால் சஹித்தும் அஸ்லமும் எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள் எனக் கேட்காமலேயே கடனைக் கொடுத்துவிட்டார்கள். 

 சில வாரங்கள் கழிந்து விட்டது. "என்னய்யா வாங்குன 10,000 ரூபாய் கடன எப்பய்யா தருவே" என சஹித்தும் அஸ்லாமும் வேறு தொனியில் கேட்டிருக்கிறார்கள். கடன் வாங்கிய குடும்பமும் விரைவில் கொடுத்து விடுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார்கள்.


கொடுக்கவில்லை
இன்னும் சில வாரங்கள் கழிந்துவிட்டது. இந்த முறை இன்னும் கோபத்துடனும், மரியாதை குறைவாகவும், “ஏய்யா கடன் வாங்குறப்ப நல்லா இருந்துச்சுல்ல, இப்ப கடன எப்ப குடுப்ப” என மிரட்டல் தொனிலேயே கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் போகட்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என நம் அப்பாவிக் குடும்பம் வழக்கம் போல பதில் சொல்லி இருக்கிறது.

அடிதடி
ஒரு நாள் மீண்டும் சஹித்தும் அஸ்லமும் வெளிப்படையாக வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லை உன் குழந்தையை தூக்கட்டுமா எனவும் மிரட்டி இருக்கிறார்கள். பயந்து போன அந்த ஏழைக் குடும்பம், காலில் விழாத குறையாக அடித்துப் பிடித்து சஹித்துக்கும், அஸ்லாமுக்கும் பல விதங்களில் சமாதானம் சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

கோபம் 
 ஆனால் சஹித்துக்கும் அஸ்லாமுக்கும் கோபம் தாளவில்லை. ஏற்கனவே அந்த அப்பாவிக் குடும்பத்தில் மிரட்டியது போலவே, மே 31, 2019 அன்று குழந்தையைக் கடத்தி இருக்கிறார்கள். கடத்திய குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றே விட்டார்கள்.

 கோபம் அடங்காமல் கண்களையும் நோண்டி எடுத்திருப்பதாகச் சில செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் பின் தான் அவர்கள் செய்தது கொலை என்கிற பெரிய தவறு அவர்களுக்குப் புரிய வருகிறது.

அடையாளம் தெரியக் கூடாது 
 ஆக தவறை மறைக்க அந்த 2.5 வயது பிஞ்சுக் குழந்தையை அடையாளம் தெரியாத அளவுக்கு கண்டம் துண்டமாக வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி இருக்கிறார்கள்.

 குழந்தையின் உடல் அங்கங்களை தெரு நாய்கள் வாயில் கவ்விக் கொண்டு எடுத்துச் செல்வதைப் பார்த்த காவல் துறையினர் சந்தேகப்பட்டு குப்பைத் தொட்டியைத் தோண்டித் துருவி இருக்கிறார்கள். குழந்தையின் சடலம் கடந்த ஜூன் 02, 2019 அன்று தான் கிடைக்கிறது.

காவல் துறை 
 விசாரணையில் கடன் பிரச்னை தெரிய வர சஹித் மற்றும் அஸ்லாமை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேற்படி விசாரணைகளை நடத்தி வருவதாக அலிகார் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார். வழக்கை, விரைவு நீதிமன்றம் விசாரிக்கப் போகிறதாம்.

உண்ணாவிரதம் 
 தன் 2.5 வயது மகளின் மரணச் செய்தி கேட்ட தகப்பன் “சஹீத் மற்றும் அஸ்லாமின் மொத்த குடும்பத்தையும் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் உதவி இல்லாமல் இந்த இருவரால் மட்டும் என் குழந்தையைக் கொன்று இருக்க முடியாது.

 அப்படி கைது செய்யவில்லை என்றால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்” எனச் சொல்லிகாவல் துறைக்கு பகீர் கிளப்பி இருக்கிறார்.

நடவடிக்கை
மேற்படி எந்த பிரச்னையும் நடக்காமல் இருக்க, 2.5 வயது மகளைப் பறி கொடுத்த குடும்பத்தினருக்கும், தப்பல் கிராமம் சுற்றிலும் காவல் துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 இதை ஒரு முன்னேற்பாடாக காவல் துறையினர் செய்திருப்பதாகவும் அலிகார் மாவட்டத்தின் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் சொய்திருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்களில் இருந்து சொல்கிறார்கள்.

இந்து - முஸ்லிம் 
 செய்திகள் ஒரு பக்கம் இப்படி வந்து கொண்டிருக்க, இறந்த 2.5 வயது செல்ல மகளின் பெயர் ட்விங்கில் ஷர்மா என்றும், அந்தச் சிறுமியை முகம்மது சஹித் பாலியல் வன் கொடுமைக்கு ஆள் ஆக்கி கொலை செய்துவிட்டான் என்றும் பல ட்விட்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது வரை இறந்த 2.5 வயது மகளின் பெயர், அவர்களின் பெற்றோர் விவரங்களை அலிகார் காவல் துறை கண்காணிப்பாளர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி


ஏர்வாடி அருகே உள்ள ஏராந்துறையைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சக்தி (வயது 45). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.




 இதையடுத்து அவர் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்றார்.



டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர். வீட்டுக்கு வந்த அவர் மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றார்.


 மாத்திரையில் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும்.


 மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


திமுக வயிறு வளர்க்க இந்தி.அரசியல் செய்ய இந்தி எதிர்பா.?? வெளுத்து வாங்கும் H.ராஜா..!!சிக்கி சின்னா பின்னமான திமுக பேச்சாளர்..!

ஒரு தனியார் தொலைகட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் பேராசிரியர் கான்ஸ்டண்டைன் பங்குபெற்ற இவர் அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் கேட்ட கேள்ளவிகளுக்கு பதில் கூற முடியாமல் சிக்கி கொண்டார். அந்த விவாதத்தில் நடந்தவை.

நெறியாளர்: உங்கள் கட்சி தலைவர்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படிக்கும் வாய்பு இருப்பது போல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் விரும்பி இந்தி படித்தால் என்ன தவறு.

திமுக பேச்சாளர்:CBSC பள்ளி மாநில அரசு கட்டுபாட்டில் இல்லை இது மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது ஆகையால் CBSC பள்ளியில் இந்தியை கொண்டு வந்தது மத்திய அரசு தான்.
நெறியாளர்: நீங்க கொள்கையில் பிடிப்பாக இருந்தால் இந்தி படம் கற்று தற கூடிய பள்ளிகளை வணிகத்துகாக ஏன் நடத்த வேண்டும் இதை மக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? இந்தி திணிப்பா? அல்லது வேறு ஏதாவதா?

திமுக பேச்சாளர்: நாங்கள் நடத்தும் பள்ளிகளில் யாரையும் நாங்கள் வழுகட்டாயமாக தூக்கிட்டு வந்து இந்தி கற்று தறவில்லை அவர்களே விருப்பபட்டு தான் கற்று கொள்கிறார்கள்.
நெறியாளர்: அரசு பள்ளியிலும் அதே தான நீங்கள் விருப்பபட்ட படிக்கலாம்.?

திமுக பேச்சாளர்: அரசு பள்ளிகளில் இந்தியை கற்று தறுவதால் தமிழ் மொழி மட்டும் அழியாது.தமிழ் கலாச்சாரமும் அழிந்துவிடும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நெரியாளார்: அப்படியானால் நீங்கள் நடத்தும் 40 CBSE பள்ளிகள் முலம் கொள்கை ரீதியாக பள்ளி நடத்தி தமிழ் கலாச்சரத்தை அழித்து கொண்டிருக்கிறீர்கள்.

திமுக பேச்சாளர்: வணிக ரீதியாக ஒரு பள்ளி நடத்துவது மற்றும் ஒரு நிறுவனம் நடத்துவதை நீங்கள் கொள்கை ரீதியாக பார்ப்பது தவறு என பேசினார்.
இந்த விவாத நிகழ்ச்சியை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயளாலர் ஹச்.ராஜா. திமுக தலைவர்களுக்கு வயிறு வளர்க்க காசு சம்பாதிக்க இந்தி தேவை ஆனால் அவர்கள் அரசியல் பிழைப்புக்கு இந்தி எதிர்ப்பு. ஒவ்வொரு தமிழனும் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு எதிராக வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோர் போராடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.