வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-06-16
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 22, 2019

180 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட செல்ஃபி - சுவாரஸ்ய தகவல்

சர்வதேச அளவில் தற்போது செல்ஃபி கலாச்சாரம் பெருகி விட்டது. முக்கிய பிரமுகர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.
ஜூன் 21-ந்தேதி சர்வதேச செல்ஃபி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று செல்ஃபி தினம் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில தங்களின் செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு மகிழ்ந்தனர்.
இன்றைய நிலை இப்படி இருக்க கடந்த 180 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது. 
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் காமிராவில் தன்னை தானே போட்டோ (செல்ஃபி) எடுத்தார். வேதியியல் நிபுணரும், புகைப்பட ஆர்வலருமான இவர் பிலாடெல்பியாவை சேர்ந்தவர்.

செல்ஃபி என்ற வார்த்தை 2002-ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஹோப் என்பவர் தனது 21-வது பிறந்த தினத்தை கொண்டாடினார். 

அப்போது குடி போதையில் தான்ஒருவரை முத்தமிட்டபடி எடுத்த போட்டோவை வெளியிட்டார். அதுவே செல்ஃபி ஆனது. இந்த வார்த்தை 2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டது.
ஆனால் முதன் முறையாக சர்வதேச செல்ஃபி தினம் 2014-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டது. டி.ஜே.ரிக் நிலி இதை தொடங்கிவைத்தார்.

பூட்டிய அறைக்குள் கையில் கத்தியுடன் கணவன்... ரத்த வெள்ளத்தில் மனைவி 3 குழந்தைகள்

திருமணம் செய்து குடித்தனம் நடத்தி மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மன அழுத்தத்தால் கத்தியால் குத்தி கொன்றுள்ளான் ஒரு கொடூர கணவன். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் கத்தியால் அறுத்து ரத்தம் சொட்டச் சொட்ட கொன்று குவித்துள்ளான்.
 மெக்ராலி பகுதியில் இருந்த அந்த வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நிகழும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இன்றைய விடியல் அந்த பகுதியின் அக்கம் பக்கத்தினருக்கும் அதிர்ச்சிகரமானதாகவே இருந்தது. 

கொடூர மனம் படைத்த அந்த கொலையாளியின் பெயர் உபேந்தர் சுக்லா என்பதாகும். இவர் அர்ச்சனா என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். அவர்களுக்கு 7 வயதிலும் 2 மாதத்திலும் பெண் குழந்தைகளும் 5 வயதில் ஒருமகனும் இருந்தனர்.

வாழ்க்கையில் சைத்தான் நுழைந்து விட்டான் போல. என்ன நடந்தோ சண்டையோ சச்சரவோ அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தான்.
 இன்று காலையில் அர்ச்சான குழந்தைகள் இருந்த அறை மட்டும் திறக்கவேயில்லை. அர்ச்சனாவின் அம்மாவும் பதறிப்போய் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவிக்கவே அவர்கள் வந்து கதவை உடைத்துப்பார்த்தனர். 

அங்கே சுக்லா கையில் கத்தியுடன் அமர்ந்திருந்தான் அவன் அருகே அர்ச்சனாவும் மூன்று குழந்தைகளும் கையில் ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தனர். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுக்லாவை கைது செய்து விசாரணை நடத்தினார். அவன் மன குழப்பத்தில் நால்வரையும் கொன்றதாக எழுதியிருந்தான். நள்ளிரவு 1 மணி முதல் ஒன்றரை மணிக்குள் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 மன அழுத்தம் ஒரு மனிதனை இப்படி எல்லாம் கூட செய்ய வைக்குமா? கொலை வரைக்கும் கொண்டு செல்லுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 
 கொலையாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடத்தையில் சந்தேகம், கள்ளக்காதல் போன்ற காரணங்களினால் கொலைகள் அதிகம் நடந்து வருகின்றன.

 சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு கொடூரன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தைகள், மனைவியை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். போலீசார் அந்த நபரை கைது செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 பஞ்சாபில் ஒரு நபர் கடந்த மாதம் ஐந்து பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது போன்ற கொடூர மனம் படைத்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


9 முறை கல்யாண மாப்பிள்ளையா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. மிஸ்டர் சக்கரவர்த்தி என்ன இது.. !

ஒருத்தர் ஒருமுறை, ரெண்டுமுறை புதுமாப்பிள்ளை ஆகலாம்.. ஆனால் மிஸ்டர் சக்ரவர்த்தி 9 முறை புதுமாப்பிள்ளை ஆகி விட்டார். இன்னும் நிறைய முறை மாப்பிள்ளையாக முடிவில் இருந்தார்..
 நம்ம போலீஸ் விடலையே.. மாப்பிள்ளையா இருந்தது போதும்.. வா மாமியார் வீட்டுக்கு என்று அழைத்து சென்றுவிட்டனர்! சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் போலீசில் புகாருடன் வந்தார்.

 மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்த சக்ரவர்த்தி என்பவர், கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ஏமாற்றிவிட்டார் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். விசாரணை நடத்த, நடத்ததான், விவகாரம் பெரிசு என்பதை உணர்ந்தனர்.


சக்ரவர்த்தி 
 புகாருக்கு சொந்தமான சக்ரவர்த்தி என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். எம்.இ படித்திருக்கிறார். ஆனால் இதைவிட பணத்தை எப்படி குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம் என்று யோசித்தார். கல்யாண வயசு வேறு.. அதனால் மேட்ரிமோனியலில் பதிவு செய்துகொண்டார்.
v
சமத்து பிள்ளை
யாரெல்லாம் வசதியான வீட்டு பெண்களோ அவர்களுக்கு வலை விரித்தார். அதுவும் டாக்டர். என்ஜியர் பெண்கள்தான் இவருக்கு தேவைப்பட்டது. இதன்மூலம் வரன் வந்தால், அவர்கள் வீட்டுக்கு செல்வாம்.. பெற்றோரிடம் சமத்து பிள்ளையைபோல பேசுவாராம். அன்பான மாப்பிள்ளை என்ற பெயரும் கிடைத்துவிடுமாம்.


நெருக்கம் 
 திருமண தேதி நிச்சயம் ஆன உடனேயே, அந்த பெண்ணை வெளியே அழைத்து சென்று நெருக்கமாக இருப்பாராம். அதன்பிறகு நைசாக பணம் கறக்க ஆரம்பிப்பாராம்.. கையில் பணம் வந்ததும் எஸ்கேப் ஆவதுதான் இவரது பிரதான வேலையே.

திருச்சி சிறை 
 இப்படி, ஒவ்வொரு ஊரிலும் 9 பேரை ஏமாற்றி பணத்தை கறந்திருக்கிறார் சக்ரவர்த்தி. மேட்ரிமோனியலில் ஒரு பெயர் இல்லை, அஜய், அருணாச்சலம், விஜயகுமார் என இஷ்டத்துக்கும் பெயரை மாற்றி வைத்து கொண்டு இந்த வேலை பார்த்திருக்கிறார்.

 அதாவது 9 பெண்களிடம் 8 கோடி ரூபாயை இதுவரை ஏமாற்றியுள்ளார். இந்த விஷயமெல்லாம போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சக்ரவர்த்தியை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்து விட்டனர்.


அட கொடுமையே! போலீஸ்காரர்..பைக்கில் வந்து இறங்கி செய்த வேலை... விபரம் உள்ளே

அந்த போலீஸ்காரர் கெத்தாக பைக்கில் வந்து இறங்கினார்.. சுற்றிலும் ஒரு லுக் விட்டார்.. கடைசியில் இப்படி ஒரு கேவலமான வேலையை செஞ்சிட்டு, தன் பைக்கை எடுத்துட்டு கிளம்பிட்டார்! சென்னை எம்ஜிஆர் நகர் மார்கெட் பகுதி ரொம்ப ஃபேமஸானது. எப்பவுமே பரபரப்பாக இருக்கும்.

 சுற்றுப்புற பகுதி மக்கள் இங்குதான் காய்கறி முதல் எல்லா பொருட்களையுமே வாங்க வருவார்கள்.



இதனால் கடைகளுக்கு உள்ளே மட்டுமில்லாமல், வெளியேவும்கூட நிறைய பொருட்களை விற்பனைக்காக குவித்து வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இங்குள்ள கடைகளில் சிசிடிவி காமரா பொருத்தப்பட்டு இருக்கும்.


இங்கு ஆஷிக் என்பவர் பேன்சி கடை வைத்திருக்கிறார். எதேச்சையாக தனது சிசிவிடி காமிராவை ஆய்வு செய்தார். அதில் கடந்த 19-ம்தேதி கடைக்கு வந்த ஒருவர் லேடீஸ் ஹேண்ட் பேக்கை திருடுவது கண்டு ஷாக் ஆனார்.
 பைக்கில் இருந்து இறங்கி வரும் அந்த நபர் டிப்-டாப்பாகத்தான் இருக்கிறார். கடைக்கு வெளியே சுற்றிலும் ஒரு நோட்டம் விடுகிறார். பிறகு டபால் என ஒரு ஹேண்ட் பேக் எடுக்கிறார்.

 எடுத்துக் கொண்டு போய் தன் பைக்கில் வைத்துவிட்டார். இதை பார்த்து அதிர்ந்த கடைக்காரர், இவ்வளவு தைரியமாக திருடுவது யார் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு போலீஸ்காரர் என்பதும் பெயர் வினோத் என்பதும்! உடனடியாக போலீஸ் பேக் திருடியதை கடைக்காரர்.

எம்ஜிஆர் நகர் ஸ்டேஷனில் போய் புகார் சொன்னார், அதுவும் இல்லாமல், இப்படி திருடிய வீடியோவும் இணையத்தில் ஒரு பக்கம் வைரலாக ஆரம்பித்துவிட்டது. பிரச்சனை விஸ்வரூபம் ஆனதையடுத்து, சம்பந்தப்பட்ட வினோத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விபரீதத்தில் முடிந்த டிக் டாக் சேலஞ்சு! 12 வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்!

டிக் டாக் செயலியில் அதிகப்படியான சேலஞ்சுகள் பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு என்ற பல வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகளை டிக் டாக் பயனர்கள் சவாலாகச் செய்து வந்தனர், தற்பொழுது அதே போன்ற ஒரு சவாலிற்கு 12 வயது சிறுவன் பரிதாபமாகி பலி ஆக்கியுள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் 
 டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

 தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்கள் முதல் டிக் டொக் செயலி 
 பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். 

இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

டிக் டாக் தடை 
 இந்தோனேசியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் முன்பே இந்த டிக் டாக் செயலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு மீண்டும் அந்த தடை நீக்கப்பட்டு டிக் டாக் செயலி இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது.

12 வயது சிறுவன் செய்த சேலஞ்சு 
 தற்பொழுது ராஜஸ்தானைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கைகளில் வளையல் மாட்டிக்கொண்டு தாலியும் கட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு பெரிய இரும்பு சங்கிலியைக் கட்டிக்கொண்டு டிக் டாக் சேலஞ்சை இரவு முழுதும் செய்திருக்கிறார் என்று அச்சிறுவனின் தந்தை தெரிவித்திருக்கிறார்.


பிணமாகத் தூக்கில் தொங்கிய சிறுவன் 
டிக் டாக் சேலஞ்சு செய்த சிறுவன், பாத்ரூமில் சங்கிலியால் தூக்கில் தொங்கி இறந்திருக்கிறான். இந்த சம்பவம் இரவில் நடந்ததனால் வீட்டிலிருந்த யாருக்கும் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை.

 காலை விடிந்த உடன் பெற்றோர்கள் சிறுவனைத் தேட துவங்கிய பொழுது பாத்ரூமில் பிணமாகத் தூக்கில் தொங்கியவனைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளனர்.


டிக் டாக்கினால் விபரீதம் 
 டிக் டாக் செயலி இல்லாமல் இருந்திருந்தால் என் மகன் இன்று உயிருடன் இருந்திருப்பான் என்று அந்த சிறுவனின் தந்தை கதறியது அனைவரையும் உலுக்கியது. 
இதேபோல் சென்ற வரம் நாடு துப்பாக்கி வைத்து டிக் டாக் வீடியோ செய்த இளைஞனும் காய் தவறுதலாகத் தன்னை தானே டிக் டாக் வீடியோ செய்யும்பொழுது சுட்டுக்கொண்டு உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


விஜய் பிறந்தநாளில் டிரெண்டாகும் அஜித்

விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வந்தாலும், அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.




பொதுவாக விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டையிடுவது வழக்கம். ஆனால், விஜய்யின் பிறந்தநாளான இன்று, அஜித்தின் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்தும், விஜய் ரசிகர்களை டேக் செய்தும் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர். 

விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடினாலும், ஒரு பக்கம் என்றும்_தலஅஜித் என்று அஜித் ரசிகர்கள், அஜித் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்டாக்கி உள்ளனர்.

முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாக் ! இளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்..

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரிடையே மண்டை ஓட்டின் பின்புறத்தில் எலும்பு கொம்பு முளைப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.

 மொபைல் தொழில்நுட்பம் நாம் வாழும் முறையை மாற்றியுள்ளது - நாம் எவ்வாறு படிக்கிறோம், வேலை செய்கிறோம், தொடர்புகொள்கிறோம், ஷாப்பிங் செய்கிறோம் என்பது வரை மாற்றிவிட்டது.
 இதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான். நாம் இன்னும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால், நமக்கு முன்னால் உள்ள இந்த சிறிய இயந்திரம் (செல்போன்) நம் மண்டை எலும்புக்கூடுகளை மறுசீரமைப்பு செய்கின்றன. இது நமது நடத்தைகளை மட்டுமல்ல, நம் உடலையும் மாற்றக்கூடும்.


எலும்பால் உருவாகும் கொம்பு 
 பயோமெக்கானிக்ஸில் புதிய ஆராய்ச்சி, இளைஞர்களின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் கொம்பு போன்ற கூர்முனைகள் எலும்புகளால் உருவாகி வருவதாகக் கூறுகிறது.

 தலை முன்னோக்கி சாய்வதால் ஏற்படும் எலும்புத் தூண்டுதல்கள், முதுகெலும்பிலிருந்து தலையின் பின்புறத்தில் உள்ள தசைகளுக்கு எடையை மாற்றி, இதுபோன்ற எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மனித வடிவத்தையே மாற்றும் செல்போன்கள் 
 இதன் விளைவாக ஒரு கொக்கி அல்லது கொம்பு போன்ற அம்சம் மண்டையிலிருந்து வெளியேறி, கழுத்துக்கு மேலே உருவாகி உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வெளியிட்ட ஆய்வறிக்கையில், இளைஞர்களின் எலும்பு வளர்ச்சியின் பரவலானது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மாறுகிறது என்று கூறுகிறது.
 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற கையடக்க சாதனங்கள், மனித வடிவத்தையே சிதைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

5 மிமீ நீளம் கொம்பு 
 இந்த கண்டுபிடிப்பில், வியக்க வைக்கும் ஒரு பகுதி, எலும்பு கொம்பின் அளவு பற்றியது. அவை 3 அல்லது 5 மில்லிமீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளதை எக்ஸ்ரே ரிப்போர்ட் காட்டுகிறது. 

மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் இந்த எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பது உலகம் சந்திக்கும் அபாயத்தின் ஒரு துளி என்பதை எடுத்துக் காட்டுகிறது. 


வருடங்கள் ஆகும்
 "இந்த கொம்பு வடிவங்கள் உருவாக நீண்ட காலம் எடுத்திருக்கலாம். இதன் பொருள், அவர்கள் சிறுவயதிலிருந்தே அந்த தலை பகுதியை செல்போன் பார்க்க அதிகம் பயன்படுத்தியிருக்கலாம்" என்று ஆய்வாளர் ஷாஹர் விளக்கியுள்ளார்.

இன்னும் ஆய்வு தேவை 
 அதேநேரம், யேல் பல்கலைக்கழகத்தின் உடலியல், மரபியல் மற்றும் நரம்பியல் அறிவியல் பேராசிரியரான மைக்கேல் நிதாபாச் இந்த கண்டுபிடிப்புகளால் நம்பப்பவில்லை. 

"எக்ஸ்-ரே கதிர்களால், தலை பகுப்பாய்வு செய்யப்பட்ட எந்தவொரு நபரின் செல்போன் பயன்பாட்டைப் பற்றி முழுமையாக, அறியாமல், செல்போன் பயன்பாடு மற்றும் மண்டை ஓடு உருவவியல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து முடிவுகளை எடுக்க முடியாது," என்று அவர் கூறினார். 

ஆனாலும், இவரும்கூட, கொம்பு முளைக்க வேறு என்ன காரணம் என அறுதியிட்டு சொல்லவில்லை. ஆனால் சன்ஷைன் பல்கலைக்கழக ஆய்வாளர்களோ, இது செல்போன் பயன்படுத்தியதால் உருவான கொம்புகள் என அறிதியிட்டு கூறுகிறார்கள்.


Friday, June 21, 2019

நீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் "கட்"!

"நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.." என்று டிரைவர் ஒருவர் சவால் விட, கடைசியில் அந்த சவாலே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது.

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பக்கம் பண்டார வடை என்ற ஊர் உள்ளது. இங்கு செல்வதற்காக சென்னைவாசி ஒருவர் கும்பகோணம் பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுள்ளார். பண்டாரவடை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துள்ளார்.


ஸ்ரீ லஷ்மி பஸ் சர்வீஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பஸ் போல தெரிகிறது. ஆனால் வழியில் உள்ள ஊரான பண்டாரவடை ஸ்டாப்பிங்கில் நிறுத்த டிரைவரும், கண்டக்டரும் தயங்கி உள்ளனர்.

 ஒரு பயணிக்காக மட்டும் பஸ்ஸை நிறுத்த அவர்களுக்கு இஷ்டம் இல்லை. இது சம்பந்தமான வாக்குவாதத்தில் கண்டக்டர் அந்த பயணியுடன் ஈடுபட்டிருந்தார். 

அந்த சமயத்தில்தான் பயணி நடக்கும் வாக்குவாதத்தை தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டார். அப்போதுதான் டிரைவர் உள்ளே வருகிறார். அங்கு நடக்கும் உரையாடல்தான் இது: 

டிரைவர்: 
"எடுத்துக்க.. எடுத்துக்க.. நல்லா எடுத்துக்க.. என்னை எடு.. முதல்ல கீழே இறங்கு.. "
 பயணி:
நான் ஏன் இறங்கணும்.. டிக்கெட் எடுத்திருக்கேன் டிரைவர்: போகும்போது ஏறு.. பயணி: ஏன் இறங்க சொல்றீங்க.. இந்த வண்டிதானே முதல்ல போகுது. 

அதான் ஏறி உட்கார்ந்திருக்கேன். ரீசன் சொல்லுங்க. பஸ் காலியாதானே இருக்கு. எதுக்கு என்னை இறங்க சொல்றீங்க?
 டிரைவர்: 
நீ டக்குன்னு உள்ளே ஏறி உட்கார்ந்துக்கலாமா?

 பயணி: 
என்ன ரூல்ஸ் இது? காசு தந்துதானே டிக்கெட் வாங்கி இருக்கேன். 
இந்த பஸ் பண்டாரவடைக்குதானே போகுது? 

டிரைவர்:
அதோ அந்த பஸ்கூட அங்கதான் நிறுத்துறாங்க 
 பயணி: 
அது எங்களுக்கு தேவை இல்லை, எந்த பஸ் முதல்ல போகுதோ அதிலதான் ஏற முடியும். உங்க பேர் என்ன?

 டிரைவர்: 
போட்டோ எடுத்துட்டே இல்லை.. பேர் தேவை இல்லை.
 பயணி: 
லஷ்மி டிராவல்ஸ்தானே?

 டிரைவர்: 
 இதோ பார்த்துக்கோ (காக்கி யூனிபார்மில் பொறிக்கப்பட்ட பெயரை வீடியோவில் காட்டுகிறார்) நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.. 

பயணி:  
இன்னைக்கு பாரு நீ .. இது கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்.. இந்த டிரைவர் இப்படி பேசிட்டு இருக்கார் பாருங்க".. என்று பொதுமக்களுக்கு சொல்கிறார் இப்படி பயணி பேசியதுடன் இணையத்திலும் போட்டுவிட்டார்.
 இந்த வீடியோ வைரலாகி, கடைசியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், பஸ் கண்டக்டர், டிரைவர் ரெண்டு பேரையுமே அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


கும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில், இடிந்த வீட்டை அளப்பதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக சர்வேயர் கேட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயி உயிரிழந்தார். 
(Surveyor who bribed Rs 10,000 near Kumbakonam ... farmer killed in shock)
 கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேப்பத்தூர் தட்டாரத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 48). இவர் தனது வீட்டை அளப்பதற்காக 3 மாதம் முன்பு பணம் கட்டி உள்ளார் இதனைத் தொடர்ந்து, இன்று சர்வேயர் மோகனாம்பாள் என்பவர் வந்துள்ளார்.



வீட்டை பாதி அளந்ததும் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கு விவசாயியான தனசேகரனை வர சொல்லி உள்ளார். அங்கு, தனசேகர் சென்றதும் வீடு அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

 தன்னிடம் 3, 000 ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். பின்னர், உறவினர்களிடம் இருந்ததை வாங்கி, மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். 
மீதி 4,000 கேட்டதற்கு தனசேகரன் இல்லை என்று தெரிவிக்கவே அவரை சர்வேயர் திட்டியதாக தெரிகிறது. இதனால், நெஞ்சு வலியால் சுருண்ட தனசேகரன், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். 

 அக்கம் பக்கத்தினர் தனசேகரனை மீட்டு, அருகிலுள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். தனசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதுபற்றி, விவசாயி தனசேகரனின் மகன் சுதர்சன் திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

 இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியில் விவசாயி உயிழந்ததாக தகவல் பரவியதால், திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க.. இப்படி நிக்காதீங்க" என்ற திருநங்கைகளின் குரலை கேட்டதும் பொதுமக்கள் ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டு போகின்றனர்.. ஆம்.. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 8 திருநங்கைகளுக்கு வேலை போட்டு கொடுத்துள்ளனர்.

 திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.


இந்நிலையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் காவலர் பணிக்கு முதன் முதலாக 8 திருநங்கைகளை பணியமர்த்தியுள்ளார் மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ்.


ராகினி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் இவர்கள்தான் அவர்கள். ஒரு ஷிப்ட்டில் 4 பேர் என 2 ஷிப்டில் 8 பேர் வேலை பார்க்கிறார்கள்.

 திருநங்கைகள் காவலாளிகளாக முதல் முறையாக மருத்துவமனையில் பணி அமர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.


"எங்களை நிறைய பேர் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கற சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போ, இப்படி ஆஸ்பத்திரியில் வேலை தந்துள்ளது பெருமையா இருக்கு. 

அதுக்கு இந்த ஆஸ்பத்திரி டீன், சுகாதார அமைச்சருக்கு எங்கள் நன்றி. இதே போல் மற்ற துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று இவர்கள் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.


சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மரணம்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை போல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில், தேன்மொழி என்ற பெண்ணை, சுரேந்தர் என்ற வாலிபர் கடந்த 14 ந்தேதி சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டை சேர்ந்த தேன்மொழிக்கு அரிவாள் வெட்டில் தாடை பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தையல்கள் போடப்பட்ட நிலையில் தேன்மொழி கிசிச்சை பெற்று வந்தார்.

 10 நாட்கள் வரையில் பேசக் கூடாது என்று டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தி இருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தேன்மொழி உயிர் பிழைத்துக் கொண்டார்.

தேன்மொழியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் சுரேந்தர் ரெயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

 இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சுயநினைவு இல்லாமல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேன்மொழியை, சுரேந்தர் வெட்டியதற்கான காரணம் என்ன? என்பதை போலீசாரால் முழுமையாக அறிந்து கொள்ள முடிய வில்லை.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

Thursday, June 20, 2019

இதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. குறிப்பு உள்ளே

"இதுதான் கடைசி நொடி.." என்ற அந்த தாய்க்கும் தெரியாது, அவரது மகளுக்கும் தெரியாது. மகள் கண்முன்னே லாரி மோதி தாய் இறந்ததை பார்த்து கதறினாள் மகள்..

 இது சம்பந்தமான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்து வருகிறது. சேலம் அருகே தாரமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி அகல்யா ராணி. அங்குள்ள ஆசிரியர் காலனியில் வசித்து வருகிறார். 
இவரது கணவர் எபனேசர் ஜெய்சன் திருநெல்வேலியில் அல்வா கடை வைத்துள்ளார். தனது 12 வயது மகளுடன் வசித்து வருகிறார். தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகள் 7-ம் வகுப்பு படிக்கிறாள். 

நேற்று மாலை கிறிஸ்டி தன் மகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். தாரமங்கலம் பிரதான சாலையில் இருவரும் நடந்து வந்தனர்.


கிறிஸ்டி 
 அந்த சமயம், வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, கிறிஸ்டி மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார். ஆனால் அந்த லாரியானது, கிறிஸ்டி மீது ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரங்களுக்கு நடுவே மிக கொடூரமாக டீச்சர் சிக்கி கொண்டார்.

துடிதுடித்தார்
இந்த கொடுமை அனைத்துமே மகள் கன்முன்னாடியே நடந்து. 12 வயது குழந்தை அலறி துடித்து அலறினாள். மகள் வெடித்து கதற, அங்கேயே துடிதுடித்து தாய் உயிரிழந்தார். ஆனால் அந்த லாரி டிரைவரோ, விபத்தை ஏற்படுத்தியதுடன், வண்டியை நிற்காமல் வேகமாக ஓட்டி சென்றுவிட்டார்.


விசாரணை 
இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இயங்கிவரும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதன்படி சம்பந்தப்பட்ட லாரியை பிடித்துவிட்டனர். சட்டவிரோதமாக லாரியில் செம்மண் அள்ளிக் கொண்டு போயுள்ளார் டிரைவர் கிருஷ்ணன்.


வீடியோ வைரல் 
 அவரை போலீசார் வலை வீசி தேடி வருவதுடன், விபத்து நடந்த வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். மகளின் கண்முன்னே தாய் இறந்த இந்த வீடியோ காட்சி பார்ப்போர் மனதை பதைபதைக்க செய்து வருகிறது.


தக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியர் அடித்ததில் மாணன் படுகாயம் காயமடைந்த மாணவன் தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிட்சைக்காக அனுமதி ஆசிரியரிடம் இரணியல் போலீசார் விசாரணை.

 கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ஜோஸ்-சகாய அனிதா தம்பதியரின் மகன் 17-வயதான ஜெறின் ஜோசப் வட்டம் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பாடப்பிரிவில் பயின்று வருகிறார்.


கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறந்து ஒருசில வாரங்கள் ஆன நிலையில் தற்போதே மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டு பாடங்களும் முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் அளித்து அவைகளை மனப்பாடம் செய்து தினமும் வகுப்பறையில் ஒப்புவிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், முறையாக ஒப்புவிக்காத மாணவர்கள் இரவு படிப்புக்காக பள்ளியிலேயே தங்க வைத்து ஒப்புவித்த பின் வீட்டிற்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 
 இவ்வாறு ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்களும் இதேப்போல் பாட சுமைகளை அளிக்கும் நிலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்வது சாத்தியமில்லாத நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஜெறின்ஜோசப்பிடம் மாலை வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சுமிதா தான் அளித்த வீட்டு பாடத்தை ஒப்புவிக்க கூறியுள்ளார். 

ஆனால் ஒப்பிவிக்க தெரியாமல் ஜெறின்ஜோஸப் இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமிதா அவரை சரமாரியாக கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் மாணவனுக்கு இடது கை மணிக்கட்டு முழங்கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

 ஆனால் பள்ளி நிர்வாகம் அதை பொருட்படுத்தாமல் பள்ளிலேயே தங்க வைத்து இரவு எட்டு மணிவரை தாங்களே வைத்தியம் செய்துள்ளனர். ஆனால் மாணவனுக்கு வலி அதிகரிக்கவே பெற்றோரை அழைத்து ஒப்படைத்தனரதர்.


அவர்கள் மகனை சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆசிரியை சுமிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுவரை தோன்றிடாத "ஸ்ட்ராபெர்ரி மூன்" நிலவை பார்க்கத் தவறிவிடாதீர்கள்! எப்போது தெரியுமா?

நம்மில் பலரும் இரவு வானில் முழு நிலவைக் கண்டால், ஐயோ எத்தனை அழகு என்று முழு நிலவைக் கண்டு சொக்கிப்போய் இருப்போம். இன்னும் சிலர் முடிந்தவரை நம் மொபைல் போனில் ஜூம் செய்து, நிலவைப் படம்பிடித்து வாட்ஸாப் மற்றும் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் கூட போட்டியிருப்போம்.


அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ட்ராபெர்ரி மூன் ஸ்ட்ராபெர்ரி மூன் பற்றிய பதிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நீங்கள் உங்கள் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸில் பதிவிடலாம்.

 இதுவரை உங்கள் வாழ்வில் கண்டிடாத புது நிற நிலவை இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பார்க்க இயலும் என்று நாசா தற்பொழுது அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

ஹனி மூன் அல்லது ஸ்ட்ராபெர்ரி மூன் 
 ஸ்ட்ராபெர்ரி மூன் என்று அழைக்கப்படும் இந்த நிலவிற்கு 'ஹனி மூன்' அல்லது 'மீட் மூன்' என்று வேறு சில பேர்களும் இருக்கிறது.


ஸ்ட்ராபெர்ரி மூன் என்று இந்த நிலவிற்கு பெயரிட காரணம் அதன் நிறம் தான். ஸ்ட்ராபெர்ரி பழத்தை போல் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாய் பிரகாசிக்குமாம்.

பிங்க் நிறத்திலும் நிலவு 
இன்று இரவு முதல் துவங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை இந்த ஸ்ட்ராபெர்ரி மூன் வானில் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவு சிவப்பாக இருக்கும், சில இடங்களில் பிங்க் நிறத்திலும் நிலவு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.


நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் இருக்கக் காரணம் என்ன? 
 கட்டுப்பாடற்ற வளிமண்டல விளைவுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகாமையில் நிலவு நெருங்கி வரும் காரணத்தினாலும் நிலவு ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் ஒளிர்கிறது என்று காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவை, சென்ற ஆண்டில் தெரிந்த பிளட் மூன் நிலவுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் நாசா கூறியுள்ளது. அது வேறு வகை நிலவு, இது வேறு வகை நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.


அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவை தவறவிடாதீர்கள்
அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் நிலவு சிவப்பாய் ஒளிரும் என்றும், மற்ற சில இடங்களில் பிங்க் நிறத்தில் ஒளிரும் என்றும், இதற்குக் கரணம் அங்குள்ள வளிமண்டல விளைவுதான் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


இரவு வானில் தோன்றும் இந்த அழகிய ஸ்ட்ராபெர்ரி நிலவைப் பார்ப்பதற்குத் தவறிவிடாதீர்கள்.


வெண்மையாய் தெரிவதற்கும் வாய்ப்புள்ளது 
 பல இடங்களில் நிலவு உதயம் ஆகும் பொழுதும் மறையும் பொழுதும் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென்றும். சில இடங்களில் நடு வானில் நிலவு இருக்கும் பொழுது வெண்மையாய் தான் காணப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.


பெண்ணாக பிறந்ததால் ஆத்திரம்:பச்சிளம் குழந்தை கழுத்தை நெரித்து கொலைவெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது

சிக்கமகளூரு

பெண்ணாக பிறந்ததால் ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

சிக்கமகளூரு அருகே புச்சனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சுசித்ரா கர்ப்பம் அடைந்தார்.

இந்நிலையில் மஞ்சு தனது மனைவி சுசித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுசித்ராவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

கழுத்தை நெரித்து கொலை

தனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த மஞ்சுவுக்கு, பெண் குழந்தை பிறந்தது ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அவர் தனது வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.


 இந்த நிலையில் மஞ்சு, ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோசியம் பார்த்து உள்ளார். அப்போது பெண் குழந்தையால் வீட்டிற்கு கெடுதல் நடக்க போகிறது என்று மஞ்சுவிடம், ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு குழந்தையை கொல்ல முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் இருந்த மஞ்சு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.

 இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுசித்ரா கதறி அழுதார். அவரின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மஞ்சு தப்பி ஓடிவிட்டார்.

கைது- பரபரப்பு

இதுபற்றி அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பெண்ணாக பிறந்ததால் குழந்தையை மஞ்சு கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது.


 இதுகுறித்து சுசித்ரா அளித்த புகாரின்பேரில் சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மஞ்சுவை போலீசார் கைது செய்தனர்.


பெண்ணாக பிறந்ததால் குழந்தையை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் சிக்கமகளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.