திருமணம் செய்து குடித்தனம் நடத்தி மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் 
மன அழுத்தத்தால் கத்தியால் குத்தி கொன்றுள்ளான் ஒரு கொடூர கணவன். பச்சிளம் 
குழந்தை என்றும் பாராமல் கத்தியால் அறுத்து ரத்தம் சொட்டச் சொட்ட கொன்று 
குவித்துள்ளான்.
 மெக்ராலி பகுதியில் இருந்த அந்த வீட்டில் அப்படி ஒரு 
சம்பவம் நிகழும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இன்றைய விடியல் 
அந்த பகுதியின் அக்கம் பக்கத்தினருக்கும் அதிர்ச்சிகரமானதாகவே இருந்தது. 
கொடூர மனம் படைத்த அந்த கொலையாளியின் பெயர் உபேந்தர் சுக்லா என்பதாகும். 
இவர் அர்ச்சனா என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். 
அவர்களுக்கு 7 வயதிலும் 2 மாதத்திலும் பெண் குழந்தைகளும் 5 வயதில் 
ஒருமகனும் இருந்தனர்.
வாழ்க்கையில் சைத்தான் நுழைந்து விட்டான் போல. என்ன நடந்தோ சண்டையோ 
சச்சரவோ அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தான்.
 இன்று காலையில் அர்ச்சான குழந்தைகள் இருந்த அறை மட்டும் திறக்கவேயில்லை. 
அர்ச்சனாவின் அம்மாவும் பதறிப்போய் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் 
தெரிவிக்கவே அவர்கள் வந்து கதவை உடைத்துப்பார்த்தனர். 
அங்கே சுக்லா கையில் 
கத்தியுடன் அமர்ந்திருந்தான் அவன் அருகே அர்ச்சனாவும் மூன்று குழந்தைகளும் 
கையில் ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தனர்.
இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர். 
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுக்லாவை கைது செய்து விசாரணை நடத்தினார்.
 அவன் மன குழப்பத்தில் நால்வரையும் கொன்றதாக எழுதியிருந்தான். நள்ளிரவு 1 
மணி முதல் ஒன்றரை மணிக்குள் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக 
காவல்துறையினர் தெரிவித்தனர்.
 மன அழுத்தம் ஒரு மனிதனை இப்படி எல்லாம் கூட செய்ய வைக்குமா? கொலை வரைக்கும்
 கொண்டு செல்லுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 
 கொலையாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நடத்தையில் சந்தேகம், கள்ளக்காதல் போன்ற காரணங்களினால் கொலைகள் அதிகம் 
நடந்து வருகின்றன.
 சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு கொடூரன் 
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தைகள், மனைவியை கழுத்தறுத்து 
கொன்று விட்டு தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். போலீசார்
 அந்த நபரை கைது செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 பஞ்சாபில் ஒரு நபர் கடந்த மாதம் ஐந்து பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை ஆண் 
குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது 
போன்ற கொடூர மனம் படைத்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 
 

No comments:
Post a Comment