Run World Media: 06/19/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, June 19, 2019

8 வயது குழந்தையை.. 65 வயது தாத்தாவின் அட்டகாசம்.. 7 வருடம் ஜெயில்!

8 வயசு பெண் குழந்தையை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று நாசம் செய்த 65 வயசு தாத்தாவுக்கு 7 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
திருப்பூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் அனீபா. வயசு 65. சென்ற வருடம் வீட்டு பக்கத்தில் 8 வயசு பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது தன் வீட்டு மாடிக்கு சிறுமியை அழைத்து சென்ற அனீபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

 இதை அந்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பார்த்துவிட்டு, நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோதுதான், தாத்தா விஷயம் வெளியே தெரிந்தது.


 இது சம்பந்தமாக அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் தந்தனர். இதையடுத்து முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.இது சம்பந்தமான விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

 அனீபாவிற்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 7 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டிக் டாக்- ஆசையில் கைதான இளைஞர்: காரணத்தை கேட்டால் சிரிப்பீர்கள்.!

இந்தியாவில் அதிகளவு மக்கள் இந்த டிக்டாக் செயலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும், இந்த செயலி மூலம் நாட்டில் பல்வேறு புதிய பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.
முனனர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த செயலி, தற்போது தடை நீக்கம் காரணமாக மீண்டும் தலை தூக்கியுள்ளது.

ஐபோன் எக்ஸ்எஸ் 
 அதன்படி டிக்டாக் மோகம் காரணமாக புதுடெல்லியில் 20-வயது இளைஞர் ஒருவர் தற்போது சிறையில் தள்ளப்பட்டிருக்கறார்.

 கடந்த புதன்கிழமை சப்ரா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார், அது என்னவென்றால் நான் எனது ஐபோன் எக்ஸ்எஸ் போனை விற்பனைக்காக ஒ.எல்.எக்ஸ் இணையத்தில் பதிவேற்றி இருந்தேன்.

ஜதின் நாகர் 
 இதை பார்த்துவிட்டு ஜதின் நாகர் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு ஐபோனை வாங்க விருப்பம் தெரிவித்தார், விலை ரூ.80,000 என முடிவு செய்துகொண்டோம்.


பின்பு மாலை 6மணி அளவில் போனை கொடுக்க நாங்கள் ப்ரீத் விஹார் சிக்னல் அருகே சந்தித்துக்கொண்டோம். அப்போது எதிர்பாராத நேரத்தில் எனது போனை எடுத்துச் சென்றுவிட்டார் எனக் கூறி புகார் அளித்தார்.

போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்
அதன்பின்பு போலீஸார் கடந்த சனிக்கிழமை ஜதின் நாகர்-ஐ கைது செய்து அவரிடம் இருந்த போனை கைப்பற்றினர், பின்பு விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், பொதுவாக போனை திருடுபவர்கள் அடுத்த நிமிடமே விற்று விடுவார்கள் அல்ல போனை அனைத்து விடுவார்கள்.

 ஆனால் இதை செயயாமல் அவர் வைத்திருந்ததற்கான காரணத்தை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம்
 உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரை சேர்ந்த ஜதின் நாகர் டிக்டாக் செயலியில் வீடியோக்களை ஏற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார், ஆனால் தன்னிடம் நல்ல போன் இல்லாத காரணத்தால் தரமான வீடியோக்களை பண்ண முடியாமல் இருந்திருக்கிறார்.

எந்த கிரிமினல் வழக்கும் இல்லை ஐபோன் இருந்தால் அதன் வீடியோ மிக அருமையாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று கருதி அவரிடம் போனை திருடியிருக்கிறார்.
 மேலும் இவர் ஒரு தனியார் உணவு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள இவர் மீது இதுவரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பதே உண்மை.
ஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..

239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஹெச் 370 விமானம் என்ன கதியானது என்பது பற்றி, தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 கடலில் விமானத்தை செலுத்தும் முன்பாக பயணிகள் அனைவரையும், விமானி கொலை செய்திருப்பதாக வெளியாகியுள்ள அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 2014ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங்கிற்கு, புறப்பட்ட எம்ஹெச் 370 என்ற போயிங் ரக விமானம், எங்கே சென்றது என தெரியாமலேயே மாயமாகிவிட்டது.

முழு தகவல் 
 5 வருடங்களை தாண்டியும்கூட, மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது, சர்வதேச விமானப் போக்குவரத்து சமூகம். 

 உலகின் மிகப்பெரிய விமான மர்மம் வழக்காக இது பார்க்கப்படுகிறது. மாயமான மலேசிய விமானம், எங்கே விழுந்தது, அதில் இருந்த பயணிகள் நிலை என்ன ஆனது என்பது குறித்தெல்லாம் இதுவரை உறுதியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

அவ்வப்போது விசாரணை மற்றும் யூகங்கள் அடிப்படையில்தான் சில தகவல்கள் வெளியாகியபடி உள்ளன. தற்போது, புதிதாக ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த விமானத்தின் பைலட் பற்றியது.

விமானி காரணம் 
 மலேசிய விமானத்தை இயக்கிய பைலட், ஜஹாரி அகமது ஷா (53), இந்த மொத்த சம்பவத்திற்கு சூத்திரதாரி என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஜஹாரி அகமது ஷாவின் நண்பர்களிடம், விமானத்துறை சார்ந்த நிபுணத்துவ எழுத்தாளர் வில்லியம் லாங்க்கவீஷ் உரையாடி சில தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

கள்ளத் தொடர்புகள் 
 ஆம்.. ஜஹாரி அகமது ஷாவுக்கும், விமான பணிப் பெண்கள் சிலருக்கும் கள்ளத் தொடர்புகள் இருந்துள்ளன. இதனால், அவரது மனைவிக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில், ஜஹாரி அகமது ஷாவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதன்பிறகு, தனிமை அறையிலேயே அதிக காலத்தை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார், ஜஹாரி அகமது ஷா. மன ரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதெல்லாம் சகஜம் 
 இதுகுறித்து, ஜஹாரி அகமது ஷாவின் சக பைலட் ஒருவர் கூறுகையில், "ஜஹாரி அகமது ஷா திருமண பந்தம் சரியானதாக அமையவில்லை. கடந்த காலங்களில், விமான பணிப்பெண்கள் பலருடன் அவர் படுக்கையை பகிர்ந்துள்ளார். 

அதனால் என்ன? நாங்கள் எல்லோருமே செய்வதுதான் இது. பல உலக நாடுகளுக்கும் இந்த இளம் பெண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டேதானே பறக்கிறோம். இது ஜஹாரி அகமது ஷாவின் மனைவிக்கும் தெரியும்" என்றார்.

பைலட்டுக்கு மன அழுத்தம் 
 இதுபற்றி வில்லியம் லாங்க்கவீஷ் தான் எழுதியுள்ள கட்டுரையில், கூறுகையில், மலேசிய விமானம் மாயமானது குறித்து விசாரிக்கும், அதிகாரிகள் மற்றும், உளவுத்துறை சமூகத்தினருக்கு, பைலட்டின் மனநிலை குறித்து வலுவான சந்தேகங்கள் உள்ளன. அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி என்கிறார்.

ஆக்ஸிஜன் இணைப்பு 
 விமானம் 40000 அடி உயரத்தில் பறந்தபோது, கேபினுக்குள் செல்லும், ஆக்ஸிஜன் இணைப்பை பைலட், ஜஹாரி அகமது ஷா துண்டித்துள்ளார். இதையடுத்து, ஆக்ஸிஜன் முகமூடியை பயணிகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

 ஆனால், அவை 15 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியது. எனவே, பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் இன்றி, அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். இதன்பிறகு, இந்தியப் பெருங் கடலுக்குள் விமானத்தை செலுத்தி, ஜஹாரி அகமது ஷா தற்கொலை செய்திருக்க கூடும் என்கிறது புதிய ஆய்வு முடிவுகள். 


புதிது கிடையாது
 இவ்வாறு பைலட்கள், தற்கொலை செய்வதற்காக, பயணிகளையும் சேர்த்து கொல்வது இது புதிது இல்லை. 1999ம் ஆண்டு அக்டோபர் மாதம், எகிப்து ஏர் விமானத்தின் பைலட், மாசசூசெட்ஸ் பகுதியில், விமானத்தை மோதச் செய்தார். 

2015ல், பிரெஞ்சு நாட்டின் ஆல்ப்ஸ் மலையில், ஜெர்மன்விங்ஸ் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவத்திலும், பைலட்டின் தற்கொலை முயற்சிதான் காரணமாகச் சொல்லப்பட்டது.

மனைவியுடன் சண்டை
 ஏம்ப்பா.. பொண்டாட்டி கூட சண்டை போட்டு தற்கொலை செய்வதே தப்பு. இவரு என்னடான்னா, 239 பயணிகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.

 இனிமேல், பைலட்டுகள் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை உளவுத்துறையை வைத்து கண்காணித்து உறுதி செய்தபிறகே, விமானத்திற்குள் காலெடுத்து வைக்கச் சொல்லனும் போல இருக்குதே!


கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்

கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி அருகேயுள்ள கிராமம் இ.சத்திரப்பட்டி. இங்கு வசித்து வந்த கொத்தனார் மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் கல்யாணமானது. மனைவி பெயர் சண்முகப்பிரியா. இப்போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

நேற்று காலை மாரியப்பன் வீட்டு கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அக்கம் பக்க நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். 
 அப்போது, மாரியப்பன், சண்முகப்பிரியா ரெண்டு பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

 போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மாரியப்பன் அரை மயக்கத்தில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.

ஆனால், சண்முகப்பிரியா இறந்த நிலையில்தான் கிடந்தார். உடனடியாக போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண் விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சொன்னதாவது.

"என் மனைவி என்னை அடிக்கடி வேலைக்கு போ..ன்னு சொல்லிட்டே இருப்பாள். இப்பவும் அப்படித்தான் பிரச்சனை பண்ணினாள். அதனால், பழ வெட்டுற கத்தியால், அவளை குத்திவிட்டேன். 

இப்படி செய்துட்டதை நினைச்சு அழுதேன்.. அதுக்கப்புறம்தான் நானும் தற்கொலை செய்துக்கலாம்னு, என் கழுத்து, கைகளில் குத்தி கொண்டேன். ஆனால் மயங்கி விழுந்துட்டேன்" என்றார். போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.


வைரல் டீச்சர் | Viral Teacher | Today Trending

Click to watch below video.....


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்