Run World Media: 07/04/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்


எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, July 4, 2019

இயர்போனுடன் டூவீலர் ஓட்டினால் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் இனி இசை மழையில் நனைய மாட்டீர்கள் | Run World Media

டூவீலர்களில் பயணம் செய்யும்போது இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்திய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறைகளும் மிக சரியாக கடைபிடித்தாலும் கூட, கூடுதல் கவனத்துடன் இருக்காவிட்டால், விபத்தில் சிக்கி கொள்வதற்கான அபாயம் உள்ளது. ஏனெனில் இங்கு மற்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பார்கள் என கூற முடியாது.வாகனங்களை இயக்கும்போது லேன் மாறுவதற்கு என விதிமுறைகள் (Lane Rules) உள்ளன. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இங்கு அதனை கடைபிடிப்பது கிடையாது. அப்படி ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது என்றும் கூட சொல்லலாம். எனவே திடீர் திடீரென லேன் மாறி மற்ற வாகன ஓட்டிகளுக்கும் சிலர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகன ஓட்டிகள் பலருக்கும் இயர்போன்கள் (Earphones) மூலமாக பாடல்களை ரசித்து கேட்டு கொண்டே பயணிக்கும் வழக்கம் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு மட்டுமின்றி, வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனில் பேசவும் பலர் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதன் காரணமாக சுற்றுப்புறத்தில் எழும் சப்தங்கள் உங்களுக்கு கேட்காமல் போய் விடலாம். குறிப்பாக மற்ற வாகன ஓட்டிகள் ஹாரனை ஒலித்தால், அது உங்களுக்கு கேட்காமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மற்ற வாகன ஓட்டிகளுடன் உங்களுக்கு வீண் தகராறையும் ஏற்படுத்தி விடும்.அத்துடன் வாகனம் ஓட்டும்போது நீங்கள் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தால், உங்கள் கவனம் திசை திரும்பி விபத்து நேர்வதற்கான அபாயமும் உள்ளது. இந்த சூழலில் இயர்போன்களில் பாடல்களை கேட்டு கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.


இதன்படி இயர்போன்கள் மூலமாக பேசி கொண்டோ அல்லது பாடல்களை கேட்டு கொண்டோ இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் பெங்களூர் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கென புதிய அறிவிப்பு ஒன்றை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்து பெங்களூர் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூர் போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''இயர்போன்கள் வாகன ஓட்டிகளின் காதுகளை அடைத்து விடும். இதனால் விபத்து நேர்வதற்கான அபாயம் உள்ளது. வாகனம் ஓட்டும்போது இயர்போன் மூலமாக பேசுவது, பாடல்கள் கேட்பது என இரண்டுமே விதிமீறல்தான்'' என்றார்.போலீசார் கண்காணித்து கொண்டிருக்கையில் மட்டும் இயர்போன்கள் இல்லாமல் இருந்தால் போதும் என நினைத்து விட வேண்டாம். போலீசார் இல்லாவிட்டாலும் கூட அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும். இதன் மூலமாக வாகனம் ஓட்டும்போது இயர்போன்களை பயன்படுத்துபவர்களை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெங்களூர் போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் புனே போக்குவரத்து போலீசாரும், இயர்போன்களை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை | Run World Media

உயிர்க்கொல்லி கிருமியாக அறியப்படும் எச்.ஐ.வி. கிருமியை அழிக்கும்  மருந்தை கண்டறிய, உலகம் முழுவதும் பல ஆராய்சிகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

மனித உயிருக்கு எமனாக வரும் இந்த அபாயகரமான நோய் முதன் முதலில் 1981-ம் ஆண்டில் (டிசம்பர்) கண்டறியப்பட்டது. 1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர். 

 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர்.

எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) எனும் உயிர்க்கொல்லி கிருமி பாலியல் உறவு, ரத்தப்பறிமாற்றம் போன்றவற்றால் மனிதர்களுக்கு இடையே பரவுகிறது.


 எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் கிருமியின் அணுகுமுறை சாதாரண நோய்க் கிருமிகளிலிருந்து மாறுபடுகிறது, எச்.ஐ.வி கிருமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை முதலில் தாக்குகிறது. பின்னர், நாட்கள் செல்லச்செல்ல ஜீன்களில் கிருமியானது கலந்துவிடுகிறது.


அந்த வைரஸ் நேரடியாக தற்காப்பு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாகச் சீர்குலைப்பதுதான் அதன் தீவிரப் பண்பாகும். இது எப்படிஎன்றால் நமது நாட்டை காக்கும் காவலர்களை முற்றிலுமாக அழித்து விட்டால் நிலைமை என்ன ஆகும். 

மக்கள் பாதுகாப்பை இழந்து விட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் என்ன தீங்கு வேண்டுமானாலும் செய்து நம்மை அழித்து விடமுடியும். எய்ட்ஸ் கிருமிகள் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றிலும் அழித்து விட்ட நிலையில் ஒரு சாதாரணக் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் கூட நமது உயிரை பலிவாங்கி விடும்.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தற்போது வரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இதற்காக கடுமையாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதித்துள்ளனர்.

எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதற்கு செலுத்தி, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றியுள்ளனர். எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.
தற்போது, எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இந்த சிகிச்சை முழுவதும் நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றாது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் வாழ்நாளை நீட்டித்து அவர்கள் இயல்பாக வாழ வழி செய்கிறது.

தற்போது, எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும்.


ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படம்..... கொந்தளித்த இந்தியர்கள் விவரம் உள்ளே | Run World Media

மது பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இந்தநிலையில், இஸ்ரேலின், 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டைச் சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய, மது வகையை அறிமுகம் செய்துள்ளது. ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டுள்ளது.


 அதில் கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்து, கூலிங் கிளாசுடன் இருப்பது போல காந்தியின் படம் உள்ளது.இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பிய, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங், ''இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தான் தயாரித்த மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பொறித்துள்ளது.
இதன் மூலம் தேசத் தந்தையான அவரை அவமானப்படுத்தி விட்டது.எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பாட்டிலில் உள்ள காந்தியின் உருவப்படத்தை உடனே நீக்கச் செய்ய வேண்டும் என்றார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருக்கு, துணை குடியரசுத் தலைவர், வெங்கையா நாயுடு கூறினார். இது தொடர்பாக, இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டது.  அதைத் தொடர்ந்து, மல்கா பீர் நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி.

 எனவே தான், ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இந்தநிலையில், ஆசியாவின் மிகப்பெரிய மதுபானக் கடை, கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள காந்தி சிலை அருகே அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்... அப்படி என்ன நடந்தது? | Run World Media

இது உண்மையிலேயே வினோதமான சம்பவம்தான். ஜப்பானில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.ஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரயில்கள்தான் இயங்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்தியிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?கடந்த மாதம் 30-ம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரயிலில் பயணித்த 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இரயில் வழித்தடத்திலேயே நின்றதால் அடுத்தடுத்து வரவிருந்த 26 ரயில்களின் சேவையும் முடக்கப்பட்டது. 

பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்றுதான் ஜப்பான் ரயில் சேவை நிறுவனமான ஜே.ஆர் குஷு( JR Kyushu) அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.இரயில் வழித்தடத்தில் மின்சார பாதிப்பு ஏற்பட்டதற்கு ஏதேனும் கருவி பழுதடைந்திருக்கும் என்றுதான் நினைத்தோம். பழுது பார்த்தபோது கருவிகள் அனைத்தும் சரியான முறையிலேயே இயங்கின. பின் மேலும் ஆராய்ந்ததில் இரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம்; எலெக்ட்ரானிக் கருவியில் சிக்கியிருந்த இறந்த நத்தை என்பது பின்புதான் தெரிந்தது என்று ஜே.ஆர் குஷுரயில்வே நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளது.


மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் கவனிக்கப்படும் என்றும் தெற்கு ஜப்பான் இரயில் நிறுவனம் கூறியுள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்