வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தர்பூசணி விவசாயிகளுக்கு பக்கபலமாக அறிவிக்கை விடுத்த செங்கல்பட்டு ஆட்சியர் | Watermelon Farmers News | Chengalpattu Collector | Vil Ambu | வில் அம்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, March 31, 2020

தர்பூசணி விவசாயிகளுக்கு பக்கபலமாக அறிவிக்கை விடுத்த செங்கல்பட்டு ஆட்சியர் | Watermelon Farmers News | Chengalpattu Collector | Vil Ambu | வில் அம்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுகுன்றம் வட்டங்களில் உள்ள கிராமங்களில் தர்பூசணி பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணத்தால் 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலுக்கு வந்தது.



இதனால் சென்னை கோயம்பேடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு தங்களது தர்பூசணி பழங்களை அனுப்ப முடியாததால் தர்பூசணி விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி உள்ளனர்.


இதனால் விவசாயிகள் தர்பூசணியை அறுவடை செய்யாமலேயே தங்களது நிலங்களிலேயே காய்ந்துவிடும் நிலைக்கு விட்டுவருகின்றனர். இந்த பழங்களை வாங்க யாரும் வராத காரணத்தினால் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.


இந்நிலையில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மேற்கண்ட தாலுக்காவில்ஆய்வு செய்து 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளதாகவும், இந்த பழங்களை அறுவடை செய்து சந்தைபடுத்த இயலாமல் போகும் சூழல் வந்தால் விவசாயிகள் பேரிழப்பை சந்திப்பார்கள் எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தர்பூசணி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குதால் தொடர்பாக முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக செங்கை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்தார்.


இந்த சூழலில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா தெரிவிக்கையில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் தர்பூசணி பயிர் செய்து அறுவடை செய்ய இயலாமல் உள்ள விவசாயிகள் தங்களது பழங்களை ஏற்றுமதி செய்ய வண்டி தயார் செய்து அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.

No comments:

Post a Comment