வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 31, 2018

பிரதமர் நரேந்திர மோடியின் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள் பாருங்கள்... PM Modi's stylish new year wish... 2019...


Step :1

Step:2

Step:3
Wish u happy new year to all.... 


பிரதமர் நரேந்திர மோடியின் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள் பாருங்கள்... PM Modi's stylish new year wish... 2019...

உலகிலேயே முதலாவதாக புத்தாண்டை வரவேற்ற நியூசிலாந்து மக்கள்

நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடான நியூசிலாந்து, பூமிப்பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் அமைந்துள்ளது. 

இந்தியாவைவிட ஏழரை மணிநேரம் முன்னே சென்று கொண்டிருக்கும் நியூசிலாந்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் (அங்கு நள்ளிரவு 12 மணி) 2019-ம் ஆண்டு பிறந்துள்ளது.   புதிய ஆண்டு பிறந்ததால் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என அந்நாட்டு மக்கள் கோலாகலமாக வரவேற்று மகிழ்ந்தனர். 
கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.  நியூசிலாந்தில் 2019 ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி  அங்கு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.

மேலும், இந்திய நேரப்படி நியூசிலாந்துக்கு அடுத்தப்படியாக இன்றிரவு சுமார் 8.30 மணியளவில் ஜப்பான் நாட்டு மக்கள் புத்தாண்டை கொண்டாட காத்திருக்கின்றனர். 

180 கி.மீ. வேகத்தில் இயக்கிய கார்.. விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கார் விபத்தில் சிக்கி 7 கல்லூரி மாணவர்கள் பலியாகிவிட்டனர்.
எடுகுரு கிராமத்தில் உள்ளது ஆர்விஆர் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புத்தாண்டையொட்டி ஒரு காரில் எங்கோ சென்று கொண்டிருந்தனர். (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அப்போது 180 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது.
அந்த நேரம் நிலைத்தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேரும் மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரங்குக்கு பாலியல் தொல்லை...

எகிப்தில் குரங்கு ஒன்றிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அங்கு கடந்த அக்டோபர் மாதம் பஸ்மா என்ற 25 வயது பெண் சென்றிருந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கடையில் இருந்த குரங்கு ஒன்றுடன் விளையாடிய பஸ்மா, அப்போது அதன் பிறப்புறுப்பைச் சீண்டி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர், பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். 

90 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து குரங்குக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போலீசார் பஸ்மாவைக் கைது செய்தனர். அவர் மீது மன்சூரா நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், பஸ்மாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர்....

ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற வாலிபர் மற்றொரு கிட்னியில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.


ஐபோன் 4 வெளியான 2011  ஆம்  ஆண்டு காலக்கட்டத்தில் சீனாவை சேர்ந்த 17 வயது இளைஞர் சியாவோ வாங் என்பவருக்கு அதன் மீது மோகம் ஏற்பட்டது.

ஆனால், அதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. இதனிடையே இணையத்தில் சிறுநீரகம் விற்பது பற்றிய விளம்பரம் ஒன்று அவரின் கண்களில் தென்பட்டது.
சற்றும் யோசிக்காமல், விளம்பரம் கொடுத்திருந்த இடைத்தரகரை தொடர்பு கொண்டு பேசினார். சட்டத்துக்குப் புறம்பாக சிறுநீரகம் விற்பனை செய்யும் மருத்துவமனை ஒன்றுக்கு சியாவோ வாங் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதன்மூலம் அவருக்கு கிடைத்த தொகை 3,200 டாலர்.
அந்த தொகையை வைத்து ஐபோன் ஒன்றை வாங்கினார் சியாவோ வாங். ஆனால், அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே அவரின் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்தது.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் சியாவோ வாங்கின் இன்னொரு சிறுநீரகத்திலும் நோய் தொற்று ஏற்பட்டிருந்தது.
முன்னர் சியாவோ வாங்குக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் முறையாகச் செய்யவில்லை. காயம் சரியாக ஆறாமல் நோய் தொற்று ஏற்பட்டு இன்னொரு சிறுநீரகத்துக்கும் பரவியிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட சியாவோ வாங் அதிர்ச்சியில் உறைந்து போனார். வேறு வழியில்லாமல் தற்போது தினமும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மேலும் சிகிச்சைக்கு செலவழிக்க பணமில்லாமல் அவரின் குடும்பம் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மோகம் ஒரு இளைஞரின் வாழ்க்கையையே பாழாக்கி விட்டது என  சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலி

செல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலம் மயுர்பாஞ்ச் மாவட்டத்தில் பிம்குண்ட் என்ற இடத்தில் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. 

ஒடிசாவில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றான இந்தப்பகுதியில், வெள்ளப்பெருக்குடன் தண்ணீர் ஒடுவதை பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடுவர்.  இந்த சூழலில், கட்டாக்கைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் பிம்குண்ட் நீர் வீழ்ச்சியை ரசிக்க வந்தனர். 
மாணவர்களில் ஒருவர் மட்டும், ஆபத்தை அறியாது தண்ணீரை ஒட்டியுள்ள பாறையில் நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முற்பட்டார். அப்போது, துரதிருஷ்டவசமாக நிலை தடுமாறி தண்ணீரில் அந்த மாணவர் விழுந்தார். விழுந்த வேகத்தில், மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். 

அவரை மீட்க பலர் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் உலகம் முழுவதும்,  செல்பி எடுக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரா பெண்ணை மணக்கும் விஷால்: அப்போ வரலட்சுமியுடனான காதல்?

விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பல காலமாக காதலித்து வருகிறார்கள். 

வரலட்சுமி போட்ட ட்வீட்டால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது. பின்னர் இருவரும் ராசியாகிவிட்டார்கள்.


வரலட்சுமி  

விஷால் வரலட்சுமி சரத்குமாரை தனது உயிர் என்று எல்லாம் பப்ளிக்காக கூறினார். வரலட்சுமியோ காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மறுக்கவும் இல்லை. சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகே திருமணம் என்று விஷால் தீர்மானமாக இருந்தார். அதுவரை திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.


பெண்

சங்க கட்டிட பணி கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது. இந்நிலையில் விஷாலுக்கு அவர் வீட்டில் பெண் பார்க்கத் துவங்கினார்களாம். ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண்ணை பிடித்துப் போய்விட்டதாம். அனிஷா என்கிற அந்த பெண்ணையே விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்களாம் பெற்றோர்.


காதல்

விஷாலுக்கும், அனிஷாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம். ஆந்திரா பெண் என்றால் அப்பொழுது வரலட்சுமி சரத்குமாரின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவருக்கும் இடையே பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் விஷாலுக்கு வேறு பெண்ணை பார்த்துள்ளனர்.


படம்  

வரலட்சுமிக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது. நேற்று கூட அவருக்கு திருமணம் என்று யாரோ கூற அம்மணி கொந்தளித்துவிட்டார். நான் திருமணம் செய்யவில்லை, இங்கு தான் இருப்பேன், சினிமா படங்களில் நடிப்பேன் என்று தெரிவித்தார்.

அரிவாளுடன் விரட்டிய கயல்விழி.. தெறித்து ஓடிய திருடர்கள்..

கொள்ளையர்களை பார்த்ததும், அரிவாளை தூக்கி கொண்டு விரட்டி ஓடிய கயல்விழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 


கோவையை அடுத்த துடியலூர் அருகே பன்னிமடை ஸ்ரீவாரி கார்டன் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதி சீனிவாச பிரபு - கவிதா ஆவர். கவிதா, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதி இருவரும் வேலை முடிந்து, அவர்கள் சொந்த ஊரான தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்துக்கு சென்றுவிட்டார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


காட்டு யானைகள்  

அதனால் சீனிவாச பிரபு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவு 2 மணிக்கு பைக்கில் வந்தார்கள். பூட்டிய வீட்டின் முன்பு நின்றுகொண்டு கொஞ்ச நேரம் வீட்டையும், தெருவையும் நோட்டமிட்டார்கள். ஏனென்றால் அந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வருமாம். அப்படி யானைகள் வந்துவிட்டால் தெருநாய்கள் ஒன்றுகூடி குரைக்குமாம்.


கயல்விழி 

ஆனால் காட்டு யானைகள் வராமலேயே நாய்கள் இவர்கள் இருவரை பார்த்ததும் குரைக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் கயல்விழி என்பவர் தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தார். கயல்விழிக்கு 42 வயதாகிறது. கவிதாவின் நெருங்கிய தோழியும் கூட.


கணவரை எழுப்பினார்  

தெரு நாய்கள் எல்லாம் சேர்ந்து குரைக்கவும் யானைகள்தான் வந்துவிட்டது என்று நினைத்து தன் வீட்டின் முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தார். அப்போதுதான் 2 பேர் கவிதா வீட்டின் கதவை உடைத்து கொண்டு செல்வதை பார்த்தார். உடனே கயல்விழி, கவிதாவுக்கு போன் செய்து சொன்னதுடன், தூங்கி கொண்டிருந்த கணவரையும் எழுப்பினார்.


வாசற்படியில் கயல்விழி  

பிறகு வீட்டில் இருந்த அரிவாளை தூக்கி கொண்டு ஓடிவந்தார். திருடன் திருடன் என கத்தி கொண்டே கவிதா வீட்டு அருகில் சென்றார். அரிவாளுடன் ஆவேசத்துடன் வீட்டு வாசற்படியில் வந்து நின்ற கயல்விழியை பார்த்ததும், வீட்டிற்குள் நின்றிருந்த 2 திருடர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.


பைக்கை எடுக்கவில்லை 

அதனால் வெளியே தலைதெறிக்க ஓடிவந்து தப்பி போக முயன்றனர். அப்போதும் அரிவாளை தூக்கி கொண்டு கயல்விழி அவர்களை விரட்டி கொண்டே ஓடினார். வெளியே தப்பி ஓடிவந்தும் அரிவாளை கயல்விழி கீழே போடாததால், பைக்கை கூட எடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு திருடர்கள் ஓடினார்கள். கயல்விழி மற்றும் அவரது விடாமல் துரத்தியும் அவர்களை பிடிக்க முடியவில்லை.


பைக்கில் நகைகள்  

தகவல் அறிந்த தடாகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கவிதா வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, 10 பவுன் நகை அபேஸ் ஆகி இருந்தது தெரியவந்தது. அதனால் வீட்டு வாசலில் நின்றிருந்த பைக்கை சோதனை போட்டால், அதில் எக்கச்சக்கமாக ஏற்கனவே கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் இருந்தன. அதனால் நகைகள், பைக்கை பறிமுதல் செய்தனர். சிசிடிவி கேமராவில் திருடர்கள் யார் என்று பார்த்தால், 2 மணி ராத்திரி என்பதால் அவர்களின் முகம் அதில் சரியாக தெரியவில்லை.


கயல்விழிக்கு பாராட்டு 

இதனிடையே ஊருக்கு போன தம்பதியும் விரைந்து வந்துவிட்டனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை இன்னும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் திருடர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்றும், ராத்திரி 2 மணி என்றும் தெரிந்தும், கையில் அரிவாளை தூக்கி கொண்டு விரட்டிய கயல்விழிக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது.

அப்பா ஆன ரோஹித் சர்மா.. பெண் குழந்தை பிறந்தது..

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில், அவரது மனைவி இந்தியாவில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


ரோஹித் திருமணம்

ரோஹித் சர்மாவிற்கு கடந்த 2015ஆம் ஆண்டு ரித்திகா சஜ்தே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. தான் விரைவில் தந்தை ஆக உள்ளதாக மகிழ்ச்சியுடன் கடந்த வாரம் அளித்த பேட்டியின் போது கூறினார் ரோஹித்.


நண்பர்கள் வாழ்த்து

ரித்திகாவுக்கு குழந்தை பிறந்த செய்தி பற்றி ரோஹித் மற்றும் குடும்பத்தினர் யாரும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து கூறி வருவதை வைத்தே இந்த செய்தி வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.


இந்தியா வரும் ரோஹித்  

ரோஹித் சர்மா பேட்டி அளித்த அடுத்த சில நாட்களிலேயே குழந்தை பிறந்த செய்தியும் வந்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரோஹித் சர்மா இந்தியா வருவார் என கூறப்படுகிறது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது.


அரைசதம் அடித்தார் 

இந்தியா நேற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. ரோஹித் அந்த போட்டியில் அரைசதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் கழித்து ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்தார். அந்த மகிழ்ச்சியோடு, குழந்தை பெற்ற மகிழ்ச்சியும் ரோஹித்தை வந்தடைந்துள்ளது. வாழ்த்துக்கள் ரோஹித்!!

வாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து 11-ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பெரும் ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகாலட்சுமி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மகாலட்சுமி இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தார்.


பலி 

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி மகாலட்சுமி பள்ளியின் 3-ஆவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தீடீரென கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.


சாலை மறியல்

இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும் மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை எடுத்து செல்ல முயன்ற போது மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் பள்ளி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


உறுதிமொழி  

மேலும் இந்த விபத்து குறித்து பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை எடுக்கவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


சோகம்  

இதுகுறித்து ஆலங்காயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரேனும் அவரை தள்ளி விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி பள்ளியில் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!

தாய்லாந்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தாய்லாந்தின் பேங்காக் நகரை சேர்ந்த அமோரன்சேன் சன்ந்த்ரோன் - பஞ்சாரப்ரோன் தம்பதிக்கு கடந்த 2012ம் ஆண்டு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

தாய்லாந்தில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம். புத்த மத நம்பிக்கையின் படி ஒரு பெண்ணிற்கு இரண்டை குழந்தையாக ஆண் மற்றும் பெண் என வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிறந்தால், அவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. முந்தைய ஜென்மத்தில் சேர முடியாமல் போனதால், அடுத்த ஜென்மத்தில் அவர்கள் ஒரே தாயின் கர்ப்பத்தில் ஒன்றாக சேர்ந்து பிறப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஜென்மத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பது அவர்களது பழக்கமாக இருக்கிறது. இதன்மூலம் அவர்களது பூர்வ ஜென்மக் கடன் தீரும் என்பது அவர்களது நம்பிக்கை.

இதனால், அமோரன்சேன் மற்றும் பஞ்சாரப்ரோன் தம்பதி தங்களது குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, தற்போது ஆறு வயதாகும் அந்த இரட்டையர்களுக்கு கடந்த வாரம் அவர்களது நாட்டு வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. அதில், உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்காக மணமகன் சார்பாக மணமகளுக்கு 2 லட்சம் பாத் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது ரூ 4.30 லட்சம் ஆகும். 6 வயதிலேயே இவர்களுக்கு திருமணம் செய்தது வைத்தது குறித்து அவர்களின் தந்தை கூறுகையில், “சிறு வயதில் திருமணம் செய்தால் தான் அவர்கள் எதிர்கால வாழ்வில் சந்தோஷமாகவும், சிறப்பாகவும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் குழந்தைத் திருமணம் தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Sunday, December 30, 2018

ராஜமவுலி மகன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட பிரபாஸ் - அனுஷ்கா

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்த இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் நடிகர் பிரபாஸ், நடிகை அனுஷ்கா குத்தாட்டம் போட்டுள்ளனர்.


பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா. ‘ஷோயிங் பிசினஸ்’ என்ற தனது நிறுவனத்தின் மூலம் படங்களுக்கான விளம்பரங்களைச் செய்து வருகிறார். மனம், பாகுபலி உள்ளிட்ட படங்களின் டிரெய்லர்களை இவரது நிறுவனமே உருவாக்கியது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவருக்கும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவின் உறவினர் பூஜா பிரசாத்துக்கும் இன்று ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது. பூஜா பிரசாத் கர்நாடக இசைப்பாடகி ஆவார்.
இதற்காக தெலுங்கு பட நடிகர்கள் நேற்று முன்தினமே ஜெய்ப்பூருக்குச் சென்றுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ராணா டகுபதி ஆகியோர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து ஒன்றாகச் சென்றனர்.

பிரபாஸ், அனுஷ்கா, சுஷ்மிதா சென், நாகார்ஜுனா ஆகியோரும் விமான நிலையத்திலிருந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மணமக்கள் கார்த்திகேயாவும் பூஜா பிரசாத்தும் விமான நிலையத்தில் சந்தித்துக் கொள்ளும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இவர்களது திருமணம் தென்னிந்திய முறைப்படி இன்று நடைபெற்றது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளான மெகந்தி, சங்கீத் ஆகியவை கடந்த 2 நாட்களாக நடந்தன. முன்னதாக நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் ராணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், நடிகைகள் அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடனம் ஆடினார்கள்.

மாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.


தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.

டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 16-வது முறையாக வரும் ஜனவரி 20-ந்தேதி மும்பையில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது.

இந்த மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். “இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.