வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருச்சி அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 மாத சிசு.. பரபரப்பு!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

திருச்சி அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 மாத சிசு.. பரபரப்பு!!மணப்பாறை அருகே 7 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல இடங்களில் சிசுக்கள் கேட்பாரற்று வீசப்படுவதும் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாரதியார் நகரில் குடியிருப்பு பகுதியில் 7 மாத பெண் சிசு உயிரற்ற நிலையில் கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். (தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசுவின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசுவை போட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment