வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

தேடி தேடி மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கனிகளை மட்டும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். சிலருக்கு வெள்ளை நிறம் பிடிக்கும், சிலருக்கு சிவப்பு நிறம் பிடிக்கும், சிலருக்கு நீல நிறம் பிடிக்கும்.
 இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான நிறங்கள் பிடிக்கும். அந்த வகையில் மிக சிலருக்கே இந்த மஞ்சள் நிறமானது பிடிக்கும். மிகவும் குறைந்த அளவிலான மக்களுக்கு பிடித்த இந்த மஞ்சள் நிறத்தில் தான் நூற்றுக்கணக்கான நலன்கள் உள்ளது.

(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் அதில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மற்ற நிற பழங்களை காட்டிலும் இந்த வகை பழங்களில் புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை எல்லாவற்றையும் சரி செய்யும் குண நலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். அவை என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

 கண்ணை பறிக்கும் மஞ்சள்...! 
 மற்ற நிறங்களை காட்டிலும் மஞ்சள் நிறம் மிகவும் பிரசித்தி பெற்ற நிறமாகும். பல நாடுகளில் இந்த நிறத்தை மங்களகரமான நிறமாகவும் கருதுகின்றனர். இந்த நிறத்தின் சிறம்பம்சம் நீங்கள் உணர வேண்டுமென்றால் அதற்கு மஞ்சள் நிற காய்கனிகள் போதும்.சக்திமிக்க வாழை..!
 வைட்டமின் எ, பி, சி, ஈ என அதிகமான அளவில் சத்துக்களை கொண்டது வாழைப்பழம். ஒரு வாழைப்பழத்தில் 450 mg அளவு பொட்டாசியம் இருக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் காக்கும். அத்துடன் இவற்றில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. எனவே, தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வாருங்கள்.புற்றுநோயை தடுக்கும் மா..!
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் மயக்கி வைக்க கூடிய கோடை காலத்து பழம் தாம் மாம்பழம். இதன் சுவை நாக்கிலே ஒட்டி கொள்ளும் அளவிற்கு இருக்குமாம். வைட்டமின் எ இதில் அதிக அளவில் உள்ளதால் சருமத்தின் பொலிவை கூட்டும். மேலும் இதில் polyphenols என்ற மூல பொருள் உள்ளதால் புற்றுநோயை தடுக்கும் வலிமை உடையது.
வலிமை மிக்க அன்னாசி..! நமது உடல் நலத்தை ஆரோக்கியாக வைத்து கொள்வதில் அன்னாச்சி பழத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக இந்த பழம் எலும்புகளுக்கு அதிக வலிமையை தரும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்சினையையும் இது குணப்படுத்தும்


மஞ்சள் நிற குடை...!
 பொதுவாக குடை மிளகாய் பல நிறங்களில் உள்ளது. அதில் மஞ்சள் நிற குடை மிளகாய் மிகவும் சக்தி வாய்ந்தது. இதில் நார்சத்து, இரும்புசத்து, புரதம் போன்றவை நிறைய உள்ளது. எனவே, இதனை உணவால் சேர்த்து கொண்டால் உடல் மற்றும் முகம் ஆரோக்கியம் பெரும்.ஆயுர்வேத பழம்...! 
உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எல்லா பிரச்சினைக்கும் இந்த எலுமிச்சை சிறந்த மருந்தாக உள்ளது. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் பருமன், அஜீரணம், நீர்சத்து குறைபாடு போன்றவற்றிற்கு உதவும். மேலும், கிட்னியில் கற்கள் உருவாகாமல் இருப்பதையும் இது தடுக்கும்.மகத்துவம் பெற்ற பப்பாளி..!
 சுவைமிக்க பழமாக இருக்கும் இந்த பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சர்க்கரை நோய் முதல் கண் பிரச்சினை வரை அனைத்தையும் இது சரி செய்யும். மேலும், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை பப்பாளி குறைத்து விடும். மாதவிடாய் பிரச்சினை கொண்ட பெண்களுக்கு பப்பாளி ஒரு வரப்பிரசாதமாகும்.


அதிசய பூசணி..!
 முக அழகு மற்றும் உடலின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே கவனிப்பதில் இந்த பூசணி முதல் இடத்தில் உள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் பூசணியில் ஏராளமாக இருப்பதால் நோய்களை நம்மை அண்டாமல் பார்த்து கொள்ளும். மேலும், சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் வைக்கும்.
முத்தான சோளம்..! நிகோடினிக் அமிலம் அதிகம் கொண்ட சோளத்தை உணவில் சேர்த்து வந்தால் பல வித நலன்கள் கிடைக்கும். மேலும், இது அரிப்பு, சொறி போன்றவற்றை ஏற்படாமல் காக்கும். மேலும், சருமத்தின் பாதுகாப்பையும் சோளம் அதிகரிக்கும்.முத்தான சோளம்..!
 நிகோடினிக் அமிலம் அதிகம் கொண்ட சோளத்தை உணவில் சேர்த்து வந்தால் பல வித நலன்கள் கிடைக்கும். மேலும், இது அரிப்பு, சொறி போன்றவற்றை ஏற்படாமல் காக்கும். மேலும், சருமத்தின் பாதுகாப்பையும் சோளம் அதிகரிக்கும்


மஞ்சளின் பயன்கள் தெரியுமா..? 
 மற்ற நிற காய்கனிகளை காட்டிலும் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான அளவில் நன்மைகள் உள்ளது. தினமும் மஞ்சள் நிற காய்கனிகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டாலே உடலில் நோய்கள் அண்டாமல் வாழலாம் நண்பர்களே. இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment