வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்.. அடடே காரணம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன்.. அதிரடி டைவஸ்.. அடடே காரணம்!கூகுள் மேப்பில் மனைவியை பார்த்த கணவன், அந்த பெண்ணை விவாகரத்து செய்து இருக்கிறார்.

கடந்த சில நாட்களாக கூகுள் மேப் துல்லியமாகிக் கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் பைக் ஓட்டுபவர்கள் பயன் அடையும் வகையில் கூகுள் மேப்பில் அவர்களுக்காக சில வசதிகள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் கூகுள் மேப்பில் உள்ள கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி மிகவும் பிரபலம் ஆனது. மக்கள் நேரடியாக சென்று சாலையில் நடப்பது போன்ற உணர்வை இந்த ஸ்ட்ரீட் வியூ கொடுக்கும்.


(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

எப்படி செயல்படுகிறது

இந்த ஸ்ட்ரீட் வியூவை கூகுள் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கிறது. அதன்படி, எல்லா நாடுகளுக்கு எங்கு எல்லாம் ஸ்ட்ரீட் வியூ அவசியமோ அங்கு எல்லாம் 360 கேமரா கொண்ட காரை செல்ல வைத்து எல்லாவற்றையும் வீடியோ எடுத்து பின் அதை மேப்பில் மாற்றி வைத்து இருக்கிறது. தமிழகத்திலும் பல முக்கிய இடங்களும் கூட இப்படி பதிவாகி உள்ளது.


வைரல்

இதன் காரணமாக சில பிரச்சனையும் ஏற்பட்டு இருக்கிறது. சாலையில் அந்த நாள் 360 கூகுள் கார் சென்ற போது அங்கு என்ன நடந்ததோ அதை அப்படியே இது படம் பிடித்துக்காட்டிவிடும். இதன் காரணமாக சில கொலையும், தென்னாப்பிரிக்காவில் வங்கியில் நடந்த கொள்ளை ஒன்றும் பதிவாகி இருக்கிறது. இப்போதும் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அது காண கிடைக்கும்.


மனைவி இருந்தார்

இந்த நிலையில்தான் பெரு நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இவர் அங்கு இருக்கும் பிரபலமான பாலம் ஒன்றை கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ மூலம் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு வெறுமனே திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பாலத்தின் மேல் இவர் மனைவி இருந்துள்ளார். அவர் வேறு ஆணுடன் கட்டியணைத்தபடி நின்றுள்ளார்.


டைவஸ் செய்தார்

அதாவது அந்த கூகுள் கார் அங்கு வந்து புகைப்படம் எடுத்த சமயத்தில் அந்த பெண் அங்கு இருந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அந்த பெண் வேறு ஒரு நபருடன் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டுள்ளார் அவளின் கணவர். இந்த பிரச்சனை பெரிதாகவே கடைசியில் அவர்கள் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment