வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எப்ப பார்த்தாலும் சாதியை சொல்லி திட்டிய மாமியார்.. உயிரை மாய்த்த பெண் டாக்டர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

எப்ப பார்த்தாலும் சாதியை சொல்லி திட்டிய மாமியார்.. உயிரை மாய்த்த பெண் டாக்டர்!படித்த பெண்ணாக இருந்தாலும், ஏன் டாக்டராகவே இருந்தாலும் கூட சாதிய வெறியில் சிக்காமல் தப்ப முடியாது போலும். ஆந்திராவில் அப்படி ஒரு சோகச் சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். செல்ல மகளை பெற்றோர் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள்.
 சீனாவுக்கு மேற்படிப்புக்காகவும் அனுப்பி வைத்தார்கள். படிக்க போன இடத்தில் கார்த்திக் என்பவரை லவ் செய்ய போய், கடந்த 2015-ம் ஆண்டு அவரை கல்யாணமும் செய்து கொண்டார். இப்படி விரும்பி திருமணம் செய்த ஜெயஸ்ரீ, இரு தினங்களுக்கு முன்பு நிறைய தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


அள்ளி அள்ளி கொடுத்தோம்
 இதுகுறித்து போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். இது தொடர்பாக ஒரு தனியார் சேனலுக்கு ஜெயஸ்ரீ தந்தை விளக்கமாக பேட்டி அளித்துள்ளார். அதில், "லவ் பண்றேன்னு வந்து நின்னப்பவோ நாங்க ஒத்துக்கல... வேண்டாம்னு சொன்னோம். ஆனாலும் ஜெயஸ்ரீ பிடிவாதமாகவே இருந்ததால், அவள் ஆசைக்கு விட்டுவிட்டோம். வரதட்சணையாக 25 லட்சம் ரூபாய், 45 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி என அள்ளி கொடுத்தோம். போன வருஷம் வரை ரெண்டு பேரும் நல்லாதான் இருந்தாங்க.


மாமியார் - மருமகன் 
 ஆனால் ஆசை யாரை விட்டது? ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கார்த்திக் திரும்பவும் வரதட்சணை பணம் கேட்டு என்கிட்டே மகளை அனுப்பி வைச்சுட்டே இருப்பார். நானும் முடிந்தவரை கேட்ட பணத்தை கொடுத்திட்டேதான் இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் பணம் தர முடியாமல் நிறுத்திவிடவும் அப்போதான் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு. இதில் மாமியாரும் சேர்ந்து கொண்டுள்ளார்.கார்த்திக் கைது 
தகராறு வெடிக்கும்போதெல்லாம் சாதி பெயரை சொல்லி மகளை அதிகமாக துன்புறுத்தி இருக்காங்க.. இதுபற்றி போலீசாரிடம் வரதட்சணை கொடுமை, சாதியக் கொடுமை அடிப்படையில் புகார் அளித்தேன்" என்றார். தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக கார்த்திக்கை கைது செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் போலவே சாதிய கொலைகள் + தற்கொலைகள் ஆந்திராவிலும் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், அம்ருதவர்ஷினி என்ற ''ஓசி'' வகுப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த காரணத்துக்காக, பிரணாய் குமார் என்ற பட்டியலின சாதியை சேர்ந்தவர் கூலிப்படைஏவி கொல்லப்பட்டார். இப்போது இன்னொரு சாதிய மரணம் நடந்துள்ளது.


சாவு மணி அடிப்பது யார்?
 ஒரு பெண் பெண்ணாக பார்க்காமல் வெறும் சொத்தாக பார்க்கப்படுவதும், தேவை தீர்ந்தபின் அடக்குமுறைகள் ஏவப்பட்டு அவளை தற்கொலையில் கொண்டு வந்து விட்டுவிடுவதும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலேயும் நடக்காத அக்கிரமம். கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும், ஹைடெக் வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்ளும் சமூகம் இன்னும் கலப்பு திருமணத்தை ஏற்க மறுக்கிறது. இந்த சாதிய வெறிக்கு சாவு மணியை அடிப்பது யார்தான்?


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment