வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: என் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

என் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்!என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. என்று பப்லுவை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ஒரு பெண். முத்தமாக கொடுத்து மகிழ்கிறார்.. இந்த கொஞ்சலும் முத்தமும் யாருக்கு தெரியுமா? பப்லு என்ற நாய்க்குத்தான்! 
 
 இந்த பெண்மணி யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆசை ஆசையாக வளர்த்த பப்லுவை திடீரென காணாமல் தவித்து போய்விட்டார் அந்த பெண். தன்னையே சுற்றி சுற்றி வந்த பப்லு எங்கே போனதோ, யாரிடம் சிக்கி இருக்கிறதோ, என்ன ஆனதோ என தெரியாமல் கண்கலங்கியே இருந்துவந்துள்ளார். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


"பப்லுவை யாராவது பார்த்தீங்கன்னா என்கிட்டயே கொண்டு வந்து கொடுத்திடுங்கன்னு" சமூகவலைதளங்களில் தகவலும் அளித்தார். கூடவே பப்லுவின் கெத் லுக்குடன் கூடிய போட்டோவையும் பதிவிட்டார். ஆனால் எந்த பதிலுமே இல்லை.. பப்லுவும் கிடைக்கவே இல்லை. தற்போது 57 நாட்கள் கழித்து பப்லு கிடைத்துவிட்டாள். அதனை கண்டுபிடித்து உரிமையாளரான அந்த பெண்ணிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். 
 
காணாமல் போன பப்லுவை பார்த்தவுடன் அந்த பெண்ணின் சந்தோஷம், ஆனந்தம், கண்ணீர் என மாறி மாறி வருகிறது. பப்லுவை கட்டியணைத்து முத்தமழை பொழிகிறார். "என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.." என்று சொல்லும்போது கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது . பதிலுக்கு பப்லுவும் அந்த பெண்ணுக்கு முத்தமிடுகிறது. இந்த இரு உள்ளமும் இணையும் நெகிழ்ச்சி காட்சியை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பப்லுவை தன்னிடமே ஒப்படைத்துவிட்ட நபர்களுக்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment