வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிறுமிகளை சித்ரவதை செய்து கற்பழித்த ஹாஸ்டல் உரிமையாளர்கள்... மதுரையில் நடந்த கொடுமை!!

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 15, 2019

சிறுமிகளை சித்ரவதை செய்து கற்பழித்த ஹாஸ்டல் உரிமையாளர்கள்... மதுரையில் நடந்த கொடுமை!!

12 வயசு குழந்தை உட்பட 4 சிறுமிகளுக்கு தனியார் விடுதியில் பாலியல் தொல்லை தந்த டிரஸ்ட் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கும் சீல் வைத்தனர். 


மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள். கருமாத்தூரை சேர்ந்த ஞானபிரகாசம், ஆதிசிவன் ஆகியோர்தான் இந்த காப்பகத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆதிசிவனும் நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் -சிறுமிகள் தங்கி உள்ளனர்.இந்த காப்பகத்தில் தங்கி உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் அந்த காப்பகத்திற்கு திடீரென சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு தங்கி உள்ள சிறுவர் - சிறுமிகளை நேரில் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது 4 சிறுமிகள் சித்திரவதை செய்து பலவந்தமாக [பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள் அழுதுகொண்டே இந்த தகவல்களை சண்முகத்திடம் தெரிவித்தனர்.
ஆதிசிவன் பலமுறை அவரது அலுவலகத்தில் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக  தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் பாதிக்கப்பட்ட அந்த 4 சிறுமிகளையும் உடனடியாக மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். மற்ற சிறுவர்-சிறுமிகளும் வேறு வேறு விடுதியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் புகார் குறித்து குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஷோபியாபாய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர்.
மேலும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் விடுதியில் சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் மதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதரவற்ற பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக சொல்லி வேலியே பயிரை மேய்ந்த கதைபோல சிறுமிகளை தொடர்ந்து மிரட்டி சித்திரவதை பண்ணி பாலியல் பலாத்காரம் செய்த நபரை உரிய விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாலியல் புகார் காரணமாக சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கும் ‘சீல்’வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment