வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue | Run World Media

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, August 17, 2019

ஆனைக்குன்னம் கிராமத்தில் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் | Anaikunnam stone Quarry issue | Run World Media

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குன்னம் ஊராட்சியில் சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கிராம பொது மக்களால் கிராம சபை கூட்டமானது புறக்கணிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.


மேற்கண்ட புறக்கணிப்பு போராட்டத்திற்கு காரணம் என்னவெனில் "ஆனைக்குன்னம் ஊராட்சியில் கல்குவாரி வரப்போகிறது" என்பதை அறிந்து கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-2017 மற்றும் 2017-2018, 2018-2019 ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொது மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அப்படி இயற்றப்பட்ட தீர்மானத்தின் மீது இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத ஊரக வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து சுதந்திர தினமான 15/08/2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் பொது மக்களால் புறக்கணிக்கப்பட்டு  போராட்டம் நடைபெற்றது.

மேற்படி ஆனைக்குன்னம் கிராமத்தில் தற்போது கல்குவாரி உள்ள பகுதிக்கு அருகே தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்குவாரியின் வழியேதான் எலப்பாக்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். மேலும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சாலையில் செல்வதில் மிகவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கல்குவாரியின் அதிக சப்தம் மற்றும் சிதறல்களின் காரணமாக ஆனைக்குன்னம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் "மான், மயில்" போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் அழிந்து கொண்டே வருகிறது.

எனவே, இந்த "கல்குவாரியினை சீல் வைத்து பொதுமக்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துமா இந்த அரசு...?" என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment