வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ப.சிதம்பர பரிதாபங்கள்: ஒரு வேளை உணவை மூணு வேளைக்கு சாப்பிடுகிறார்! எட்டு கிலோ குறைந்தார். P. Chithambaram is losing his weight to 70kg
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 08, 2019

ப.சிதம்பர பரிதாபங்கள்: ஒரு வேளை உணவை மூணு வேளைக்கு சாப்பிடுகிறார்! எட்டு கிலோ குறைந்தார். P. Chithambaram is losing his weight to 70kg

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'ஹெச்.பி.எஃப்' எனும் பெயரில் ஒரு அரசு நிறுவனம் இருந்தது. ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் என்பதே இது. 


நம் தேசத்தின் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் எக்ஸ் ரே உள்ளிட்டவைகளுக்கான ஃபிலிமை தயாரித்த நிறுவனம். இந்த நிறுவனத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தனர். 

அவர்களின் குடும்பத்தையும் சேர்த்தால் சில ஆயிரக்கணக்கான மக்கள் பிழைத்தனர். இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு வசதிகளுக்காக சில ஆயிரம் கோடிகளை அரசு முதலீடு செய்து, சூப்பர் ஸ்பெஷல் மெஷிஇதைன்களை வாங்கி வைத்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இந்நிறுவனத்தின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஒரேடியாக மூடப்பட்டுவிட்டது.

உள்நாட்டிலேயே இப்படியொரு சூப்பர் நிறுவனம் இருக்கையில், வெளிநாட்டின் சில குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து நாம் ஃபிலிமை வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் பல கோடி ஏழைகள் எக்ஸ்ரே மருத்துவ செலவுக்காக தங்கள் சக்தியை மீறி செலவு செய்கின்றனர்.
இதை ஏன் இங்கே சொல்கிறோம் என்றால்.....இந்த 'HPF' நிறுவனம் முடங்கியதன் பின்னணியில் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகள் சுட்டிக்காட்டப்படுகிறது அழுத்தமாக. சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ப.சிதம்பரத்தின் வட்டாரம், இந்த அரசு தொழிற்சாலைக்கு இப்படியொரு நிற்கதி நிலையை கொண்டுவந்துவிட்டார், அதை நம்பி இருந்த குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. 

ரெண்டு வேளை சோறு கூட அவர்களில் பலருக்கு உறுதியில்லை! என்று குமுறுகிறார்கள். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் ஏக கெடுபிடியில், திகார் சிறையிலிருக்கும் ப.சிதம்பரம் பெரும் துயரத்தில் இருக்கிறாராம். ஒரு அரசன் போல் வாழ்ந்து பழகிவிட்ட அவரால் சிறையின் அவஸ்தை வாழ்க்கையை சகிக்க முடியவில்லையாம். அதில் உச்ச கொடுமை, உணவு சிக்கல்தான்.

சிறைக்குள் வரும்போது 78 கிலோ எடை இருந்தவர், எட்டு கிலோ இழந்து இப்போது எழுபது கிலோதான் இருக்கிறாராம். வட இந்திய சிறை உணவுகள் அவருக்கு ஒத்து வராததால் வீட்டு உணவை எடுத்துக் கொள்ள உத்தரவிடும்படி நீதிமன்றத்தை அவரது குடும்பம் அணுகியது. இதற்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனவே வீட்டில் சமைக்கப்பட்ட உணவை ஒரு வேளை மட்டும் வழங்கிடலாம்! என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொடியுடன் இட்லி, சாம்பார் சாதம், தயிர்சாதம், ரசம் சாதம், தோசை, ஆப்பம், இடியாப்பம் என்று எளிதாக செரிமானமாகும் உணவுகளாக கொடுக்கப்படுகின்றனவாம்.

ஒரு வேளை மட்டுமே வீட்டிலிருந்து வரும் உணவை, மூன்று வேளைக்கும் பிரித்து வைத்து உண்கிறாராம் சிதம்பரம். மூன்று வேளையும் மூன்று ரகங்களில் விதவிதமாய் உண்டு பழகிய நாக்கின் நிலையை பாருங்கள்.

விதி வலியதுதானே!

No comments:

Post a Comment