வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் வட்டம் விண்ணம்பூண்டி விவசாயியிடம் லஞ்சம் பெற்று சிக்கிக் கொண்ட சர்வேயர் | Land Surveyar arrested when getting Bribery from Former

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 10, 2019

மதுராந்தகம் வட்டம் விண்ணம்பூண்டி விவசாயியிடம் லஞ்சம் பெற்று சிக்கிக் கொண்ட சர்வேயர் | Land Surveyar arrested when getting Bribery from Former

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணம்பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி செல்லப்பன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.இந்நிலையில் பட்டா மாற்றம் செய்ய ஒரத்தி நில அளவையர் (Surveyor) ராஜகுரு மற்றும் உதவியாளர் (Assistant) திருப்பதி ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். இந்த லஞ்ச பணத்தை அளிக்க இயலாத விவசாயி செல்லப்பன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.


பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய பணத்தை விவசாயி செல்லப்பன் என்பவர் நில அளவையர் மற்றும் உதவியாளரிடம் அளித்தபோது, அங்கு மறைந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜகுரு மற்றும் திருப்பதி ஆகியோரை நேற்று (09.10.2019) கைது செய்தனர். மேலும் இதில் உயர் அதிகாரிகளின் தலையீடுகள் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment