வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பின்னம்பூண்டியில் (எலப்பாக்கம்) நேற்று இரவு காவல் ஆய்வாளர் ஆய்வு | The Police Inspector Inspecting at Pinnampoondi Village

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 12, 2019

பின்னம்பூண்டியில் (எலப்பாக்கம்) நேற்று இரவு காவல் ஆய்வாளர் ஆய்வு | The Police Inspector Inspecting at Pinnampoondi Village

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பின்னம்பூண்டி கிராமம். இப்பகுதியில் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தத காவல் ஆய்வாளர் திரு. டி.எஸ்.சரவணன் மற்றும் சக காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன சி.சி.டி.வி கேமராவினை (CCTV Camera) ஆய்வு செய்தனர்.பின்னப்பூண்டி, எலப்பாக்கம் போன்ற கிராமங்களில் ஏற்கெனவே சில குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மேலும் அதுபோன்ற கொள்ளைச்சம்பவங்களோ அல்லது பிற குற்றச்சம்பவங்களோ மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல் ஆய்வாளர் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து சி.சி.டி.வி கேமராவினை (CCTV Camera) நிறுவி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளார்.


இரவு ரோந்துப்பணி மற்றும் சி.சி.டி.வி கேமரா (CCTV Camera) மூலம் ஆய்வு என பொதுமக்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் காவல் ஆய்வாளர் திரு.டி.எஸ்.சரவணன் அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

No comments:

Post a Comment