வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ப்ப்பா.. 85 ரவுடிகள் சுற்றி வளைப்பு: விரட்டி பிடிக்கும் காஞ்சிபுரம் போலீஸ் | Great jobs of Kancheepuram Police
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 22, 2020

ப்ப்பா.. 85 ரவுடிகள் சுற்றி வளைப்பு: விரட்டி பிடிக்கும் காஞ்சிபுரம் போலீஸ் | Great jobs of Kancheepuram Police

கோவில் ஊரான காஞ்சிபுரத்துக்கு, ரவுடிகளின் கூடாரம் என்ற பெயர் வராமல் தடுக்க, எஸ்.பி., சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார், ஒரே மாதத்தில், 85 ரவுடிகளை பிடித்து, சிறையில் அடைத்துஉள்ளனர். கோவில் நகரமான காஞ்சிபுரம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஸ்ரீதர் என்ற சாராய வியாபாரியின் பிடியில் இருந்தது. 
கட்டப்பஞ்சாயத்துகொலை, ஆட்கடத்தல், ரியல் எஸ்டேட் என, அனைத்து வகையான குற்றங்களில் ஈடுபட்ட ஸ்ரீதர், போலீசாருக்கு பயந்து, கம்போடியா நாட்டில் பதுங்கினார். ஆனாலும், அங்கிருந்தபடியே, தன் கூட்டாளிகள் மூலம், காஞ்சிபுரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தார்..பி.எஸ்., அதிகாரிகளான ஸ்ரீநாத், சந்தோஷ்ஹதிமானி போன்ற அதிகாரிகள், 2015 முதல், 2019 வரை, காஞ்சிபுரத்தில் பணியாற்றியதன் விளைவு, ஸ்ரீதரின் கூட்டாளிகளை முற்றிலும் அடக்கினர்.
 
ஸ்ரீதர் கைது செய்வது உறுதியான நிலையில், 2016ல், கம்போடியாவில் தற்கொலை செய்தார்.ஸ்ரீதர் மறைவுக்கு பின், அவருடன் தொடர்பில்லாத தியாகு என்ற ரவுடி, ஸ்ரீதரின் பாணியை பின்பற்ற துவங்கினார்.இந்நிலையில், ஸ்ரீதர் இடத்தை பிடிப்பதில், அவரது கூட்டாளிகள் தினேஷ் மற்றும் தணிகா இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. அதன் காரணமாக, பல கொலைகள் நடந்தன.இதனால், தினேஷ் மற்றும் தியாகு போன்ற முக்கிய ரவுடிகளை, போலீசார், சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இரண்டு ரவுடிகளை, ஒரே சிறையில் அடைக்க கூடாது என்பதற்காக, தினேஷை வேலுாரிலும், தியாகுவை பாளையங்கோட்டையிலும் அடைத்து உள்ளனர்.தலைமறைவு'குண்டர்' சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும், மேல் முறையீடு செய்து எளிதாக வெளியே வருகின்றனர். இது, போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.அமைதி இழந்த காஞ்சிபுரத்தை, பழைய நிலைக்கு கொண்டு வர, ஒரு மாதத்திற்கு முன் பொறுப்பேற்ற காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, சிறப்பு தனிப்படைகளை அமைத்தார்.தணிகா, தினேஷ், தியாகு என, அனைத்து ரவுடிகளின் கூட்டாளிகளை கைது செய்ய, தனிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
இதன் காரணமாக, ஒரு மாதமாகவே, ரவுடிகளின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார், விரட்டி விரட்டி பிடித்து வருகின்றனர்.ரவுடிகளின் கூட்டாளிகள் யாராக இருந்தாலும், அவர்களை நள்ளிரவு, அதிகாலையில் பொறி வைத்து போலீசார் பிடித்து வருகின்றனர்.தலைமறைவாகவே உள்ள தணிகாவை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, ரவுடிகளை பிடிப்பதில் உறுதியாக இருப்பதாக போலீஸ் மத்தியில் கூறப்படுகிறது. இதுவரை காஞ்சிபுரத்தில் மட்டும், ஒரு மாதத்தில், 85 ரவுடி கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தப்பியோடிய தணிகா, நேபாள நாட்டில் பதுங்கியிருப்பதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.போலீசார் விரட்டி விரட்டி பிடிப்பதை அறிந்த ரவுடிகள் பலரும், காஞ்சிபுரத்தில் இருந்து வெளியேறி, தலைமறைவாக உள்ளனர்.


No comments:

Post a Comment